TAMIL

Lingayat Quota | இடஒதுக்கீடு விவகாரம்! போராட்டம் நடத்தியவர்கள் மீது கர்நாடகா போலீசார் தடியடி

Karnataka News In Tamil: கர்நாடக மாநிலம் பெலகாவியில் இடஒதுக்கீடு கோரி லிங்காயத் பஞ்சமசாலி சமூகத்தினர் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது. மதத்தலைவர் பசவஜய மிருத்யுஞ்சய சுவாமி தலைமையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். போராட்டக்காரர்கள் மீது தடியடி முதலில் போராட்டக்காரர்கள் காவல் துறையால் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்து கர்நாடகா விதான சவுதாவை (Vidhana Soudha) நோக்கி செல்ல முற்பட்டு உள்ளனர். அவர்களை கர்நாடகா போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதால், லிங்காயத் பஞ்சமசாலி சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், தடியடி நடத்தப்பட்டது என செய்திகள் வெளியாகி உள்ளன. போராட்டக்காரர்கள் எச்சரிக்கை எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் விதான சவுதாவை முற்றுகையிடப் போவதாக போராட்டக்காரர்கள் ஏற்கனவே கூறியிருந்தனர். இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தினர். மேலும் இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான பாஜகவின் பல எம்எல்ஏக்கள் மற்றும் மிருத்யுஞ்சய் சுவாமிஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பலரையும் போலீசார் முன்னெச்சரிக்கையாக காவலில் எடுத்துள்ளனர். கர்நாடக அரசு உறுதி தங்களின் கோரிக்கைகள் பேரவையில் விவாதிக்கப்படும் என்ற கர்நாடக அரசின் முன்மொழிவை லிங்காயத் பஞ்சமசாலி சமூகத்தினர் நிராகரித்தை அடுத்து சுவர்ண விதான் சவுதாவை முற்றுகையிட போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விதிக்கப்பட்டது. காங்கிரஸும் பாஜகவும் நேருக்கு நேர் மோதல் கர்நாடகாவில் லிங்காயத் பஞ்சமசாலி சமூகத்தினரின் இந்த தொடர் போராட்டம், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே அரசியல் மோதலை ஏற்படுத்தி உள்ளது. சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று (திங்கள்கிழமை) பஞ்சமசாலி பிரிவினரின் ஒதுக்கீடு போராட்டத்தின் அரசியல் தலைவர்களில் ஒருவரான பாஜகவின் பசனகவுடா பாட்டீல் யத்னால், முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவு இந்த விவாதத்தின் போது சபையில் அமளி ஏற்பட்டது. இதனால் சட்டசபை நடவடிக்கைகள் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது. இன்றும் இந்த விவகாரம் சட்டசபையில் விவாதிக்கப்பட இருந்தது. இந்தக் காலக்கட்டத்தில் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே மோதல் ஏற்படும் என்ற சூழ்நிலை இருந்தது. ஆனால் முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவு காரணமாக, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் படிக்க - கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார் மேலும் படிக்க - ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்... ஒன்றிணையும் இந்தியா கூட்டணி - என்ன காரணம்? மேலும் படிக்க - விலகும் சமாஜ்வாதி... அதிர்ச்சியில் எதிர்க்கட்சி கூட்டணி - காரணம் யார் தெரியுமா? சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.