TAMIL

எதிரிகள் இல்லாமல் நிம்மதியாய் வாழ சாரதா நவராத்திரியின் மூன்றாம் நாளில் அன்னை வாராஹி வழிபாடு!

Sri Varahi Amman : நவராத்திரியின் மூன்றாம் நாள் இன்று. நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இந்த ஒன்பது நாட்களும் எப்படி வழிபாடு நடத்த வேண்டும், எந்த நாள் அன்னையின் எந்த வடிவை பூஜிக்க வேண்டும் என நவராத்திரி தொடர்பான அனைத்து தகவல்களும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. சாவா வரம் பெற்ற சும்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்களின் அட்டகாசத்தால் உலகமே கவலையில் மூழ்கிக் கிடந்த காலமும் இருந்தது. அந்த இருளில் இருந்து மக்களை வெளியில் கொண்டு வந்து அரக்கர்களை அன்னை வதைத்ததன் எதிரொலியாய் நாம் நவராத்திரி பண்டிகையை கொண்டாடி வருகிறோம். யாராலும் வெல்ல முடியா வரம் பெற்றிருந்த அசுரர்களை முத்தேவர்களும் அழிக்க முடியாது என்ற நிலையில், முத்தேவர்களும், தேவர்களும் அனைவருக்கும் அன்னையான ஆதி சக்தியை வேண்டி வணங்கினர். அன்னை ஆதிசக்தியும் உலகை உய்விக்க, அழகிய பெண்ணாய் உருவெடுத்துவந்தாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முத்தேவர்களுகும் தங்களுடைய சக்திகள் எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலை ஆனார்கள். முத்தேவர்களே சக்தியை அளித்துவிட்டு சிலையானால், இந்திரனும், தேவர்களும், திக்குப் பாலர்களும் என்ன செய்வார்கள்? அவர்களும் முத்தேவர்களின் வழியில் தங்கள் சக்தி மற்றும் ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையானார்கள். அனைத்து ஆக்கசக்திகளும், ஆயுதங்களையும் பெற்ற அன்னை ஆதிசக்தி போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும், அசுரப் படைகளையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டி, உலகை உய்வித்தார். மேலும் படிக்க | குரு வக்ரபெயர்ச்சியால் திசை மாறும் அதிர்ஷ்டம்! கஷ்டகாலம் ஜூட் விட ரெடியாயாச்சு! உஷாராக வேண்டிய ராசிகள். அசுரர்களுடன் அன்னை ஒன்பது நாட்கள் போரிட்டு பத்தாம் நாள் வெற்றி பெற்றார். போர் நடந்த ஒன்பது நாட்களையும் நவராத்திரியாகவும், வெற்றி பெற்ற தினத்தை அதாவது பத்தாம் நாளை விஜயதசமியாகவும் கொண்டாடுகிறோம். இதில் நவ’ராத்திரி’ என்று ஏன் சொல்கிறோம், பகல் என்று ஏன் சொல்வதில்லை என்ற கேள்வி வரலாம். சும்ப நிசும்பர்களை அழிக்க அன்னை போர் செய்த காலத்தில் இருந்த போர் விதிகளின்படி, சூரியன் மறைந்த பிறகு அதாவது அந்தி வேளைக்குப் பிறகு போர் நிறுத்தப்படும், மீண்டும் காலையில் தான் போர் தொடங்கும். அப்போது, படைகள் கூடாரங்களில் ஓய்வெடுக்கும் வேளையில் அடுத்த நாள் போரிட அனைவரையும் ஊக்கப்படுத்தும் வகையில் ஒன்பது நாட்கள் இரவிலும் யாரும் தூங்கவில்லையாம். பகலெல்லாம் போர்க்களம், இரவில் வழிபாடு என்று இருந்த காரணத்தால், நவராத்திரியில் வழிபாடு என்ற வழக்கம் வந்தது. நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும், அன்னை ஆதிசக்தியை வெவ்வேறு வடிவங்களில் அலங்கரித்து வழிபடுவது வழக்கம். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும்; அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியின் அம்சமாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுகிறோம். நவராத்திரியின் முதல் நாள் மகேஸ்வரி பாலா, இரண்டாம் நாள் கெளமாரி, மூன்றாவது நாளில் ஆன்னை வாராகிக்கு உரியது. இன்று நவராத்திரியின் மூன்றாம் நாள். வாராகி அன்னைக்கு, கன்யா கல்யாணி என்றும் பெயர் உண்டு. இன்று வாராகி அன்னையை வழிபட்டு வளமுடன் வாழ்வோம். தன்னை நம்பும் பக்தர்களுக்கு தீவினை அண்டாமல் காக்கும் வெற்றி தேவதை வாராகி அன்னை, சப்த கன்னிகள் எழுவரில் ஐந்தாவது கன்னி ஆவார். பொதுவாகவே அம்மனின் சக்திகளில் சாந்த சொரூபமும் உண்டு, உக்ர ரூபமும் உண்டு. பக்தர்கள் பூஜை செய்யும் போது சாந்த கோலம் கொண்ட புன்சிரிப்போடு திகழும் வாராஹி அன்னையை நவராத்திரியில் வழிபடுவோம். மேலும் படிக்க | குரோதி ஆண்டின் இரண்டாம் நாளில் பிரம்மச்சாரிணி வழிபாடு! துணிச்சலுடன் கூடிய அறிவு கிடைக்கும் நாள்! சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - ட்விட்டர் - டெலிக்ராம் - வாட்ஸ்-அப் - அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: Apple Link: None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.