LIFESTYLE

ஒரு நாளைக்கு இரண்டு முறை சாதம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.. என்ன காரணம் தெரியுமா..?

எனவே இதை பற்றி தெரிந்து கொள்வோம். சாதம் சாப்பிடுவதால் உடல் எடை கூடும் என்று பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள், ஆனால் சாதத்தை சரியான நேரத்தில், சரியான அளவில் மற்றும் சரியான முறையில் சாப்பிட்டால், அது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும், இதனால் உடலின் கார்போஹைட்ரேட் தேவை நிறைவடைகிறது. ஆனால் ஒரு நாளைக்கு அதிகபபடியான் சாதத்தை சாப்பிடுவது, உடலில் அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகளுக்கு வழிவகுக்கிறது. இதன் காரணமாக எடை அதிகரிப்பு அல்லது இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. எனவே சாதத்திற்கு பதிலாக, முழு தானியங்கள், காய்கறிகள் மற்றும் லீன் ப்ரோடீன்கள் போன்ற பிற ஊட்டச்சத்து உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது, உங்களை ஆரோக்கியமாக்குகிறது. மேலும் இதை தினமும் சாப்பிடுவதால், உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. எனவே நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை சாதம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை சத்தம் சாப்பிடக்கூடாது என்பதற்கான 4 காரணங்கள் பற்றி விரிவாக பார்ப்போம். அதிகப்படியான கார்போஹைட்ரேட்: அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால் ஒரு நாளைக்கு இரண்டு முறை சாதம் சாப்பிடக்கூடாது. அதிகப்படியான சாதத்தை சாப்பிடுவது, உடலில் அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக காலப்போக்கில் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது, எனவே வைட் ரைஸ்-க்கு பதிலாக பிரவுன் ரைஸ் அல்லது ரெட் ரைஸ் ஆகியவற்றை சாப்பிடலாம்.ஏனென்றால் இதில் நார்ச்சத்து, வைட்டமின் பி மற்றும் மெக்னீசியம் உள்ளது. Also Read | வயிற்றில் ஏற்படும் அசௌகரியத்தில் இருந்து விடுபட உதவும் பெருஞ்சீரகம்... இவ்வளவு நன்மைகள் இருக்கா...? இரத்த சர்க்கரை அதிகரிப்பு: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை சாதம் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரித்து நீரிழப்புக்கு வழிவகுக்கும். எனவே நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக ஒரு நாளைக்கு இரண்டு முறை சாதம் சாப்பிடக்கூடாது. ஊட்டச்சத்து குறைபாடு: சாதத்தை அதிகம் சாப்பிடுவதால், முழு தானியங்கள் மற்றும் காய்கறிகளில் இருந்து நீங்கள் பெறக்கூடிய பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கட்டுப்படுத்துகிறது. எனவே ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க கட்டாயம் ஒரு நாளைக்கு இரண்டு முறை சாதம் சாப்பிடக்கூடாது. செரிமான ஆரோக்கியம் ஒரு நாளைக்கு இரண்டு முறை சாதம் சாப்பிடுவதால், வயிற்று உப்புசம் மற்றும் செரிமான கோளாறு போன்ற வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.