LIFESTYLE

நிம்மதியான தூக்கம் வேண்டுமா...? நைட்ல இத சாப்பிடுங்க...!

உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மில்லியன் கணக்கான மக்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சனை தூக்கமின்மை. வயதானவர்கள் மட்டுமின்றி நடுத்தர வயதினர் மற்றும் இளைஞர்கள் கூட தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். நிபுணர்களின் கூற்றுப்படி, இது இதயப் பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்தான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். குளிர்காலத்தில் நல்ல தூக்கத்தைப் பெறுவது சற்றே கடினமாக இருக்கலாம். குறிப்பாக, சூரிய ஒளியின் குறைவான வெளிப்பாடு, உங்களது வழக்கத்தை கணிசமாக சீர்குலைப்பதால், நிதானமாக உறக்க நிலைக்கு செல்ல சில வழிகள் உள்ளன. எனினும், அதைச் செய்வதற்கான எளிதான வழிகளில் ஒன்று, இரவு உணவிற்கு பிரபலமான காலை உணவான ஓட்ஸ் சாப்பிடுவது நிம்மதியான மற்றும் தடையற்ற தூக்கத்தைப் பெற ஒரு சிறந்த வழியாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தூக்கமின்மையை ஓட்ஸ் எவ்வாறு சரிசெய்யும்? மூளை ஆரோக்கியம் குறித்து ஆராய்ச்சியாளரும், மருத்துவருமான மார்க் மில்ஸ்டீன், "ஓட்ஸில் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்திருப்பதால், அவை இரத்த சர்க்கரையை எந்தவித ஏற்ற, இறக்கமும் இன்றி சீராக வைத்திருக்க உதவுகிறது. இதன்மூலம் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்" என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கியுள்ளார். மேலும், "நள்ளிரவில் எழுந்திருப்பதால் நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகள், இரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம் அல்லது இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்புக்கு காரணமாகலாம் என்பதை நாங்கள் அறிவோம். எனவே, இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க ஓட்ஸ் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என்று நாங்கள் உணர்கிறோம்" என்று டாக்டர் மில்ஸ்டீன் கூறியுள்ளார். இதையும் படிக்க: வயிற்றில் ஏற்படும் அசௌகரியத்தில் இருந்து விடுபட உதவும் பெருஞ்சீரகம்... இவ்வளவு நன்மைகள் இருக்கா...? டாக்டர் மில்ஸ்டீனின் கூற்றுப்படி, ஓட்ஸில் மெலடோனின் என்ற ஹார்மோன் உள்ளது. இது தூக்கம், நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் நிறைந்தது, இவை அனைத்தும் மெக்னீசியத்துடன் உங்களுக்கு முழுமையான உணர்வைத் தருகின்றன. மேலும், இது உங்கள் தசைகளை தளர்த்துவதால் உங்களது தூக்கப் பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கலாம். டாக்டர் மில்ஸ்டீன் மேலும் கூறுகையில், ஓட்ஸை குறிப்பாக சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து சாப்பிடக்கூடாது என்று அறிவுறுத்துகிறார், மாறாக ஓட்சுடன் வாழைப்பழம், பாதாம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது சிறந்தது. "இவை இரண்டிலும் மெக்னீசியம் அதிகமாக உள்ளது மற்றும் சர்க்கரை குறைவாக உள்ளது" என்று அவர் கூறியுள்ளார். ஜான் ஹாப்கின்ஸ் நடத்திய ஒரு ஆய்வு, படுக்கை செல்வதற்கு முன்பு ஓட்ஸ் உட்கொள்வது ஒரு சிறந்த தேர்வாக தெரிவித்துள்ளது. ஏனெனில், ஓட்ஸில் நிறைந்திருக்கும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்காது. அவை செரோடோனின் வெளியீட்டைத் தூண்டுகின்றன. இது ஒரு ஹார்மோனாக செயல்படுகிறது மற்றும் பல உடல் செயல்பாடுகளில், குறிப்பாக தூக்கத்தை ஒழுங்குப்படுத்துவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. இதையும் படிக்க: காலையில் வெறும் வயிற்றில் கொய்யா பழம் சாப்பிடலாமா..? நன்றாக தூங்குவதற்கான பிற வழிகள்: தூக்க அட்டவணையைப் பின்பற்றுதல் நிபுணர்களின் கூற்றுப்படி, வார இறுதி நாட்கள் உட்பட, அனைத்து நாட்களிலும் ஒரே நேரத்தில் படுக்கைக்குச் செல்வது மற்றும் காலையில் எழுந்திருப்பது முக்கியம். சீராக இருப்பது உங்கள் உடலின் தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சியை வலுப்படுத்துகிறது. படுக்கைக்குச் சென்ற சுமார் 20 நிமிடங்களுக்குள் உங்களால் தூங்க முடியாவிட்டால், உங்கள் படுக்கையறையை விட்டு வெளியேறி, நிதானமான இசையை கேட்பது சிறந்தது. உணவும், உறக்கமும் பட்டினியாகவோ அல்லது வயிறு முட்ட அடைத்துக் கொண்டோ படுக்கைக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் மற்றும் படுக்கைக்குச் செல்லும் இரண்டு மணி நேரத்திற்குள் அதிக அளவில் உணவு எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். ஏனெனில், அந்த உணவின் அசௌகரியம் உங்களை நீண்ட நேரம் தூங்கவிடாமல் வைத்திருக்கலாம். தூக்கத்திற்கான சரியான சூழலை உருவாக்குங்கள் உங்கள் அறையை குளிர்ச்சியாகவும், இருட்டாகவும், அமைதியாகவும் வைத்திருங்கள். மாலை நேரங்களில் அதிகபடியான வெளிச்சம், உங்களது உறக்கத்திற்கு மிகவும் சவாலாக இருக்கலாம். எனவே, உங்கள் தேவைகளுக்கு ஏற்ற சூழலை உருவாக்க அறையை டார்க் ஷேட்ஸ், இயர்பிளக்ஸ், ஃபேன் அல்லது பிற சாதனங்களைப் பயன்படுத்தவும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.