LIFESTYLE

Black Coffee: பிளாக் காபி குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்.. என்னென்ன தெரியுமா?

காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடன் குடிப்பதற்கு பெரும்பாலானவர்களுக்கு ஒரு கப் சூடான காபி தேவைப்படுகிறது. காலையில் காபி குடிக்காமல் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்க சிலருக்கு மனம் வராது. பிளாக் காபி அதன் வலுவான சுவை, குறைந்த கலோரிகள் மற்றும் உடனடி ஆற்றல் போன்றவற்றிற்காக அதிகமானோர் விரும்பி குடிக்கும் ஒரு பானமாகும். மேலும், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது மிகவும் விருப்பமான தேர்வாக உள்ளது. பிளாக் காபி குடிப்பதன் மூலம் உடல் எடை குறைவது, மனதுக்கு புத்துணர்ச்சி கிடைப்பது, அதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகளால் இதய ஆரோக்கியம் மேம்படுவது போன்ற நிறைய நன்மைகள் இருக்கின்றன. இருந்தாலும் அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது கீழ்கண்ட பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. அது என்னவென்று இங்கே பார்க்கலாம்... செரிமான பிரச்சனைகள் ப்ளாக் காபியின் அசிடிக் நேச்சூர் ஆனது, வயிற்றை எரிச்சலடைய செய்து, செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும். குறிப்பாக, வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் வீக்கம், நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். தூக்கத்தை பாதிக்கும் பெரும்பாலும், பிளாக் காபியின் நன்மைகள் காரணமாக, மக்கள் அதை அதிகளவில் குடிக்கத் தொடங்குகிறார்கள். இதன் காரணமாக ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். அத்தகைய சூழ்நிலையில், குறைந்த அளவு காபி குடிக்க முயற்சி செய்யுங்கள். மேலும் தூங்குவதற்கு முன் அதை குடிப்பதை தவிர்க்க வேண்டும். மன அழுத்தத்தை ஏற்படுத்தும் பிளாக் காபியை அதிக அளவில் குடிப்பதால், உங்கள் உடலில் மன அழுத்த ஹார்மோன்களின் அளவு அதிகரிக்கிறது. இது மன அழுத்தம் மற்றும் கவலை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது தவிர, அதிகப்படியான பிளாக் காபி குடிப்பதால் நீங்கள் பதட்டமாக உணரலாம். ஏற்கனவே மன அழுத்த பிரச்சனைகளுடன் போராடுபவர்கள், பிளாக் காபியை தவிர்ப்பது நல்லது. எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும் பிளாக் காபியை அதிகமாக குடிப்பது மூலம் உடலில் சில ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்பு உண்டு. ஏனெனில் காபியை அதிகமாக குடிக்கும்போது அதிலுள்ள அதிக அளவிலான காஃபைன் நம்முடைய உணவுகளில் இருந்து கிடைக்கிற கால்சியம், அயன், ஜிங்க் போன்றவற்றை உடல் உறிஞ்சுவதில் தடையை உண்டாக்குகிறது. இது காலப்போக்கில் எலும்பின் அடர்த்தி குறைவதற்கு வழிவகுக்கும் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸுக்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது. இதயத்தில் படபடப்பை ஏற்படுத்தும் பிளாக் காபியில் உள்ள காஃபைன் ஆனது இதயத் துடிப்பு அதிகரிக்க வழிவகுக்கும். ஏற்கனவே இதயம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள், அதிகப்படியான பிளாக் காபியை குடிப்பது ஆபத்தானது. எனவே அதை தவிர்ப்பது நல்லது. நீரிழப்புக்கு வழிவகுக்கும் பிளாக் காபி ஒரு டையூரிடிக் பண்பு கொண்டது. அதை குடிப்பது உங்க சிறுநீரக வெளியேற்றத்தை மேம்படுத்த உதவி செய்யும். இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றவும் உதவி செய்கிறது. இது உங்க வயிற்றை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது. எனவே இதை அதிகமாக எடுத்துக் கொண்டால் நீரிழப்புக்கு வழிவகுக்கும். பிளாக் காபியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. எனவே, இதை மிதமாக குடிப்பது நன்மை அளிக்கும். (பொறுப்புத் துறப்பு: இங்கு வழங்கப்பட்டவை பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனை இல்லை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் அவசியம் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.) None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.