LIFESTYLE

Muttom Beach: 6 மணி நேரத்திற்கு ஒருமுறை மாறும் கடல்... அழகும் ஆச்சரியமும் நிறைந்த முட்டம் கடற்கரை...

குளச்சல் அருகே அமைந்துள்ள கடற்கரை கிராமமான முட்டம் கடற்கரை, குமரியின் மிக முக்கியமான கடற்கரை சுற்றுலாத்தலமாகப் பார்க்கப்படுகிறது. குமரியின் மற்ற கடற்கரைகளை ஒப்பிடும் பொழுது இங்கு காற்றின் வேகமும் அலைகளின் வேகம் அதிகமாக இருக்கும். இந்த கடற்கரையில் உயரமாகப் பல பாறைகள் அமைந்துள்ளதால் திடீரென அலைகள் சில அடி உயரம் வரை எழும். இதன் அழகு காரணமாக இந்தக் கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மீன்பிடிப்பு தொழிலை மையமாகக் கொண்ட இந்தக் கிராமத்தின் அழகியலை அலைகள் ஓய்வதில்லை, கடலோரக் கவிதைகள், கடல் பூக்கள், பகல் நிலவு, தாய்மேல் ஆணை, அம்மன்கோயில் கிழக்காலே போன்று 50க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் படம்பிடித்திருக்கின்றன. இதையும் படிங்க: Sathuragiri: சதுரகிரியில் அருள்பாலிக்கும் 5 லிங்கம்... யாரும் தரிசிக்க முடியாத மகாலிங்கம் பற்றி தெரியுமா... அழகிய நில அமைப்பைக் கொண்ட முட்டம் கடற்கரையில் ஒரு பக்கம் முழுவதும் கடல் அதற்கு நேர் எதிரே பாறை, இடையில் கரை. இது தான் இந்த கடற்கரையின் மிகப்பெரும் அழகே, பரபரப்பான கன்னியாகுமரி கடற்கரை உங்களுக்குச் சலிப்பை ஏற்படுத்தி இருந்தால், முட்டம் கடற்கரையானது அதற்கு மாற்று ஆகும். இங்கு சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனக் காட்சிகள் கொள்ளை அழகு. அமைதியான சூழலைத் தேடும் நபர்களுக்கு, முட்டம் பீச் சிறந்த இடம். நாகர்கோவிலிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் முட்டம் கடற்கரை உள்ளது. இந்த கடற்கரை தற்போது சுற்றுலாப் பயணிகள் வசதிக்காகப் பல்வேறு விதங்களில் மேம்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு குழந்தைகள் விளையாடுவதற்காகப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குடும்பத்துடன் உணவருந்துவதற்காகக் கடற்கரை அருகே பல்வேறு நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதையும் படிங்க: Pongal Celebration: தமிழர் பாரம்பரிய உடையில் கலக்கிய வெளிநாட்டவர்கள்... குலவையிட்டு பொங்கல் வைத்து அசத்தல்... இங்கு அலைகளுக்கு நடுவே பாறையில் ஏறி நிற்பது, அலை துரத்தும் போது ஓடி பிடித்து விளையாடுவது என விடுமுறை தினங்களில் முட்டம் கடற்கரை உங்களுக்கு நிச்சயம் மறக்க முடியாத அனுபவத்தைத் தரும். இங்கு 6 மணி நேரத்திற்கு ஒருமுறை கடலில் மாற்றம் ஏற்படுவதால் கடலோரப் பாதுகாப்பு குழும போலீசாரின் எச்சரிக்கை மீறி செல்லாது இருப்பது நன்று. உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.