LIFESTYLE

தமிழ்நாட்டிலும் நுழைந்த HMPV வைரஸ்.. அறிகுறிகள்; தடுக்கும் வழி என்ன? - மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

சீனாவில் வேகமாக பரவி வரும் 'ஹியூமன் மெட்டா நியுமோ வைரஸ்' தற்போது இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் எச்எம்பிவி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த HMP வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், இருமல், மூச்சுவிடுவதில் சிரமம், மூச்சுத் திணறல், தொண்டை கரகரப்பு, காய்ச்சல், தோல் தடிமன் போன்ற அறிகுறிகள் இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மருத்துவர் சுரேந்தர் கூறுகையில், "நார்மலாக காய்ச்சல், உடல்வலி, தொண்டையில் எரிச்சல் உணர்வு இருப்பது, இருமல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால், HMPV வைரஸ் இருக்கிறதா என மருத்துவர்களிடம் சோதிப்பது நல்லது. எனினும், அனைவருக்கும் இந்த வைரஸ் சோதனை நடத்த வேண்டிய அவசியம் இல்லை." என்று தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல் நீடித்தால் உடனடி மருத்துவப் பரிசோதனை அவசியம் என்று தொற்றுநோய் சிறப்பு மருத்துவர் சுரேந்தர் தெரிவித்துள்ளார். கொரோனா போன்று, HMPV வைரஸால் பெருந்தொற்று ஏற்படாது என சீனாவில் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் ஞானேஸ்வரன் தெரிவித்துள்ளார். சீனாவில் மக்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் மருத்துவர் ஞானேஸ்வரன் கூறினார். கொரோனாவை போன்று சீனாவில் தொடங்கி, தமிழ்நாட்டில் பரவினாலும், இது நீண்ட காலமாக வழக்கத்தில் இருக்கும் ஒரு வகை வைரஸ் தான். எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், ஏற்கனவே இருக்கும் வைரஸ் தானா அல்லது உருமாற்றம் அடைந்த வைரஸா என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் வரை யாரும் பீதியடைய தேவையில்லை என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். HMP வைரஸ் பாதிப்பால் ஏற்படக்கூடிய அறிகுறிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தவிர்க்க வேண்டியவை குறித்து அகில இந்திய மருத்துவ கூட்டமைப்பு சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. பரவுவதைத் தடுக்க... ஜலதோஷம், இருமல் போன்ற அறிகுறி இருந்தால், இருமும்போது மூக்கு மற்றும் வாயை மூடிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சோப்பு நீரால் அடிக்கடி கைகளைக் கழுவுவதோடு, கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுடன் கைகுலுக்குவது, ஒருவர் பயன்படுத்திய கைக்குட்டையை பயன்படுத்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தனிநபர் கருவிகளை பிறருடன் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதோடு, சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளாமல், மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அகில இந்திய மருத்துவக் கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.