LIFESTYLE

Winter Health Tips: குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அப்ப 'இந்த' உணவுகளை ட்ரை பண்ணுங்க!

குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டிய சில உணவுகள் குறித்து இங்கே பார்க்கலாம். குளிர்காலம் தொடங்கிவிட்டாலும், பல இடங்களில் இன்னும் பருவமழை பெய்து வருகிறது. எனவே மாநிலத்தின் பல நகரங்களில் குளிர் வெப்பநிலை அதிகரித்துள்ளது. திடீரென மாறிய இந்த சூழலால் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இந்த காலத்தில் நோய்வாய்ப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. கடந்த சில மாதங்களாக பலருக்கு ஏற்பட்ட சளி, இருமல் போன்ற தொல்லைகள் தற்போது வரை குணமாகாமல் அவதிப்படுகிறார்கள். குளிர்காலத்தில் குளிர் அதிகமாக இருக்கும்போது, ​​உடற்பயிற்சி அல்லது காலை நடைப்பயிற்சி செல்வதை தவிர்க்கிறோம். இதன் காரணமாக, உங்கள் உணவில் சமநிலையை பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்நிலையில் தற்போது உங்கள் ஆரோக்கியத்திற்கு உதவும் சில உணவுகளை பற்றி விரிவாக பார்ப்போம். குளிர்காலத்தில் எந்தெந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது… குளிர்காலத்தில் வானிலை குளிர்ச்சியாக இருக்கும். எனவே, உடலை சூடாக வைத்துக் கொள்ள அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. உலர் பழங்கள் உலர்ந்த பழங்கள் கொழுப்பு மற்றும் ஆற்றல் நிறைந்தவை. எனவே குளிர்காலத்தில் முந்திரி, பாதாம், அக்ரூட் போன்ற பருப்புகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஆற்றல் கிடைப்பதுடன், உடலை உள்ளே இருந்து சூடாக வைத்திருக்க உதவுகிறது. எள் மற்றும் வெல்லம் குளிர்காலத்தில் எள் மற்றும் வெல்லம் சாப்பிடுவது நன்மை அளிக்கிறது. எள் விதைகளில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் ஜின்க் ஆகியவை உள்ளது. எனவே இது எலும்புகளுக்கு நன்மை அளிக்கும். வெல்லம் ஆனது உடலுக்கு உடனடி ஆற்றலைத் தருகிறது. அத்துடன் சோர்வை போக்கி, ஜலதோஷம் மற்றும் இருமல் போன்ற நோய்த் தொற்றுகளுக்கு எதிராக போராடுகிறது. பூண்டு மற்றும் இஞ்சி குளிர்காலத்தில் பூண்டு மற்றும் இஞ்சி சாப்பிடுவது மிகவும் நன்மை அளிக்கிறது. இஞ்சியில் வெப்பம் உள்ளது. இது உடலை உள்ளே இருந்து வெப்பமாக்குகிறது. மேலும் பூண்டு ஆனது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சூடான பானங்கள் மஞ்சள் பால் அல்லது பல்வேறு சூப்களை குடிப்பது குளிர்காலத்தில் உடலுக்கு நன்மை அளிக்கிறது. மஞ்சள் பால் ஒரு இயற்கை ஆண்டிபயாடிக் ஆகும். இது சளி மற்றும் காய்ச்சலுக்கு எதிராக நம்மை பாதுகாக்கிறது. மேலும், பல்வேறு வகையான சூப்கள் உடலை உள்ளே இருந்து சூடாக வைத்திருக்க உதவுகிறது. நெய் மற்றும் வெண்ணெய் நெய் மற்றும் வெண்ணெய் ஆகிய இரண்டும் குளிர்கால ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கிறது. நெய்யில் வெப்பமடையும் தன்மை உள்ளது மற்றும் உடலுக்கு சூடு தருவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. பச்சை இலை காய்கறிகள் குளிர்காலத்தில் உடலுக்கு தேவையான சத்துக்களும் வெப்பமும் பச்சை இலை காய்கறிகளில் இருந்து கிடைக்கிறது. குளிர் காலத்தில், இந்த காய்கறிகளின் ஊட்டச்சத்து நீண்ட காலம் நீடிக்கும். இந்த காய்கறிகள் உண்பதற்கு ருசியாக இருப்பது மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கும் ஒரு வரப்பிரசாதம் ஆகும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.