LIFESTYLE

விருந்தினரை உபசரிக்க வேண்டுமா..? அப்போ ஆந்திரா சிக்கைன் ஃப்ரை செய்து அசத்துங்க!

வீட்டிற்கு வந்த நண்பர்கள் மற்றும் விருந்தினர்களை உபசரிக்க ஆந்திரா சிக்கன் ஃப்ரை விட சிறந்த உணவு எதுவும் இருக்க முடியாது. தென்னிந்திய உணவகங்களில் கொடி வெப்புடு அல்லது சிக்கன் வெப்புடு என்றும் அழைக்கப்படும், ஆந்திரா சிக்கன் ஃப்ரை காரம் விரும்பிகளுக்கு ஏற்ற உணவு. இதன் சுவை, சாப்பிட்டு முடித்தது உங்கள் கைகளை கழுவாமலேயே சுத்தம் செய்யும் அளவுக்கு சுவையாக இருக்கும். மொறு மொறு என வறுத்த சிக்கனை ரொட்டி, நான் அல்லது சாதத்துடன் சிறிது எலும்பிச்சை சாறுடன் ஆனியன் ரிங்ஸ் மற்றும் பச்சை சட்னியுடன் சாப்பிட்டால் சுவை அவ்வளவு பிரமாதமாக இருக்கும். கேட்கும்போதே சாப்பிட தூண்டுகிறது அல்லவா. ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஃப்ரை ரெசிபி செய்வது எப்படி என்பதை தெரிந்துகொள்ளலாம். தேவையான பொருட்கள் : சிக்கன் - 1 கிலோ வெங்காயம் - 4 பொடியாக நறுக்கியது பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது எண்ணெய் - 4 ஸ்பூன் ஏலக்காய் - 3 கிராம்பு - 4 பட்டை - 2 காய்ந்த மிளகாய் - 6 மிளகாய் தூள் - 4 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் - 4 மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் தனியா - 1 1/2 ஸ்பூன். சீரகம் - 1 ஸ்பூன் சோம்பு - 1 ஸ்பூன் மிளகு - 1 ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது இஞ்சி பூண்டு விழுது - 2 முழு ஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி இலை - சிறிது செய்முறை : சிக்கனில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்து 15 நிமிடம் ஊறவிட வேண்டும். கடாயில் தனியா, சீரகம், சோம்பு, மிளகு, ஏலக்காய், கிராம்பு, பட்டை, காய்ந்த மிளகாய் மற்றும் காஷ்மீரி மிளகாய் சேர்த்து வறுத்து, நன்கு ஆறிய பின்னர் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். பின்பு கறிவேப்பிலை மற்றும் ஊறவைத்த சிக்கனை சேர்த்து கலந்துவிட வேண்டும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 5 நிமிடம் வதக்கிய பின்னர், அரைத்த மசாலா தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு மீதம் உள்ள மசாலா தூளை சேர்த்து கிளறி உப்பு சேர்த்து கலந்து குறைந்த தீயில் 10 நிமிடம் வேகவிட வேண்டும். கடைசியாக கறிவேப்பில்லை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்தால், ஆந்திர ஸ்டைல் சிக்கன் ப்ரை நீங்கள் பரிமாற தயார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.