LIFESTYLE

கண்களுக்கு ஆபத்தாக அமையும் காற்று மாசுபாடு… தப்பிப்பதற்கான வழிகள் இவைதான்..!

இன்று காற்று மாசுபாடு என்பது பல பகுதிகளில் நம்முடைய ஆரோக்கியத்திற்கு ஒரு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதனால், ஒருவருடைய சுவாச ஆரோக்கியத்தை மட்டுமின்றி, இதய நோய்கள் மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. காற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் மற்றும் நச்சுப் பொருட்கள் கண்களில் வறட்சி, எரிச்சல் மற்றும் ஒரு சில சமயங்களில் நீண்ட காலத்திற்கு பார்வைத்திறன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம். எனவே, காற்று மாசுபாடு நம்முடைய கண்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது? அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகள் என்ன? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். காற்று மாசுபாடு கண்களின் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது? கண் எரிச்சல் சல்பர் டை ஆக்ஸைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு மற்றும் ஓசோன் போன்ற மாசுபடுத்திகள் கண்களில் எரிச்சல், சிவத்தல், அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. இந்த கெமிக்கல்கள் ஏற்கனவே இருக்கக்கூடிய அலர்ஜி மற்றும் கன்ஜக்டிவிட்டிஸ் போன்ற பிரச்சனைகளை இன்னும் மோசமாக்குகிறது. வறண்ட கண் கோளாறு மாசுபடுத்தப்பட்ட காற்றுக்கு வெளிப்படுத்தும்போது, கண்களில் உள்ள இயற்கையான ஈரப்பதம் குறைந்து, அதனால் டிரை ஐ சிண்ட்ரோம் ஏற்படுகிறது. இதனால் கண்களில் அரிப்பு, மங்கலான பார்வை மற்றும் அசௌகரியம் உண்டாகும். அலர்ஜி மாசுபடுத்தப்பட்ட காற்றில் உள்ள அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்கள் கண்களில் அலர்ஜி விளைவுகளை உண்டாக்கி வீக்கம், கண்களில் தொடர்ந்து நீர் வழிதல் மற்றும் வெளிச்சத்தை பார்க்கும்போது கண் கூச்சம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. நீண்ட கால பிரச்சனைகள் தொடர்ந்து காற்று மாசுபாட்டுக்கு கண்களை வெளிப்படுத்துவதால் ஆக்சிடேட்டிவ் அழுத்தம் ஏற்பட்டு, அதனால் கேட்டராக்ட், மேக்குலர் டீஜெனரேஷன் அல்லது பிற பார்வைத் திறன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். இதையும் படிக்க: ப்ரோட்டீன் சத்து நிறைந்த 10 உலர் பழங்கள்.. என்னென்ன நன்மைகள் இருக்கு தெரியுமா..? கண்களை பாதுகாப்பதற்கான வழிகள் உங்களுடைய கண்களை மாசுபடுத்திகள் மற்றும் UV கதிர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு சன் கிளாஸ் பயன்படுத்துங்கள். கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலை போக்குவதற்கு மருத்துவரை ஆலோசித்து, பிரிசர்வேட்டிவ் இல்லாத செயற்கை கண்ணீரை நீங்கள் பயன்படுத்தலாம். இந்த ட்ராப்ஸ் கண்களில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைத்து மாசுபடுத்திகளை வெளியேற்றும். வீட்டிற்குள் காற்றின் தரத்தை உயர்த்துவதற்கு நீங்கள் ஏர் பியூரிஃபையர்களை பயன்படுத்தலாம். மாசுபாடு அதிகம் இருக்கும் சமயத்தில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வையுங்கள். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் வைட்டமின்கள் A, C, E மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மாசுபாடு அதிகம் இருக்கும் சமயத்தில் வீட்டிற்கு வெளியே நேரத்தை செலவிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள். கண்களை தொடுவதற்கு முன்பு கைகளை சுத்தமாக கழுவுவது அவசியம். வழக்கமான முறையில் உங்களுடைய கண்களை சுத்தம் செய்வது, அதில் உள்ள அழுக்குகள் மற்றும் மாசுபடுத்திகளை அகற்றுவதற்கு உதவும். அடிக்கடி கண்களை சிமிட்டுங்கள். நீண்ட நேரத்திற்கு போன், டேப்லெட், லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். கேட்ஜெட்டுகளை பயன்படுத்தும்போது, ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20 விநாடிகளுக்கு பாருங்கள். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.