LIFESTYLE

'புஷ்பா 2' ஹீரோ அல்லு அர்ஜுன் என்ன டயட் இருக்கிறார் தெரியுமா..? இதுதான் அவரின் ஃபிட்னஸ் ரகசியம்.!

ஒவ்வொரு நடிகரும் தாங்கள் நடிக்கும் கதாபாத்திரத்திற்காக கடுமையாக தயார் ஆகிறார்கள். சில நேரங்களில் அது ஒப்பனையாகவும், சில நேரங்களில் அது உடலமைப்பை மாற்றம் செய்வதாக கூட இருக்கலாம். தான் எப்படி ஒரு கட்டுமஸ்தான மற்றும் ஃபிட்டான உடலமைப்பைக் கடைப்பிடிக்கிறேன் என்பதை புஷ்பா 2 நடிகரான அல்லு அர்ஜுன் சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இதற்காக அவர் எந்தவித உணவுக் கட்டுப்பாடையும் பின்பற்றவில்லையாம். மேலும் அடிக்கடி சாக்லேட் சாப்பிடுவதாகவும் குற்றவுணர்ச்சி கொள்கிறார். தான் நடிக்கப் போகும் கதாபாத்திரத்தின் தேவைக்கேற்ப டயட் மற்றும் உடற்பயிற்சியை மாற்றிக் கொள்வதாக அல்லு அர்ஜுன் பகிர்ந்துள்ளார். இருப்பினும், தினசரி காலை நேரத்தில் தவறாமல் செய்யும் பழக்கவழக்கம் தான் தன்னை நாள் முழுவதும் உற்சாகப்படுத்துவதாகவும் கூறுகிறார். அல்லு அர்ஜுன் டயட் மற்றும் ஃபிட்னெஸ்: இந்தியா முழுவதும் வெளியாகியுள்ள ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தப் படத்திற்காக தனது டயட்டில் கடுமையான மாற்றங்கள் எதையும் செய்யவில்லை என அர்ஜுன் கூறியுள்ளார். ஒவ்வொருவருக்கும் ஒரு உடற்பயிற்சி மந்திரம் உள்ளது. அது அவர்களுக்கு சிறப்பாக செயல்படுகிறது. அது டயட், ஒர்க்அவுட் போன்றவையாக இருக்கலாம். முக்கியமாக அவரது காலை உணவு எப்போதும் நிறைய முட்டைகளை கொண்டிருக்கும். மதிய உணவும் இரவு உணவும் தேவைக்கேற்ப மாறுபடும். ஆனால் காலை உணவில் பெரும்பாலும் முட்டை இருக்கும். “காலை உணவு பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கும். எப்போதும் முட்டைகளால் நிரம்பியிருக்கும். நாளின் கடைசி உணவு… பல நேரங்களில், சாக்லேட்டாக இருக்கும்” என 41 வயதாகும் அல்லு அர்ஜூன் கூறுகிறார். முட்டை புரதத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும். இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது மற்றும் தசைகளை கட்டமைத்தல், உடலை வலுப்படுத்துதல் மற்றும் பலவற்றிற்கு உதவுகிறது. எனினும் சில பால் பொருட்கள் மீது தனக்கு ஒவ்வாமை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஒவ்வொரு காலையிலும் டிரெட்மில்லில் ஓடுவது தனக்குச் சாதகமாகச் செயல்படுவதாக அவர் பகிர்ந்துகொண்டார். “நான் வெறும் வயிற்றில் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை ஓடுகிறேன். முழு ஆற்றல் இருந்தால் வாரத்தில் ஏழு நாட்கள் அல்லது கொஞ்சம் சோம்பேறித்தனமாக இருந்தால் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வேன்.” கலிஸ்தெனிக்ஸ் (calisthenics) மற்றும் திறன் பயிற்சியை விரும்பும் அர்ஜூன், “நல்ல உடலை விட ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வது தான் மிகவும் முக்கியம்” என்றும் கூறுகிறார். கலிஸ்தெனிக்ஸ் உடல் வலிமை மற்றும் தாங்கும் ஆற்றலையும் உருவாக்க உதவுகிறது. எலும்பு அடர்த்தி, உடல் குறித்த புரிதல் மற்றும் உடல் ஒருங்கிணைப்பு ஆகியவற்றிற்கும் இது நல்லது. கலிஸ்தெனிக்ஸ் பயிற்சியை தவறாமல் செய்வதால் வளைந்து கொடுக்கும் தன்மை மற்றும் உடல் இயக்கம் ஆகியவை கூடுதல் நன்மையாக கிடைக்கிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.