LIFESTYLE

குளிர் காலத்தில் காலையில் வாக்கிங் செல்வது ஆபத்தானதா...? நிபுணர் சொல்வது என்ன...?

நாட்டில் குளிர் சீசன் துவங்கி உள்ள நிலையில், இந்த ஜில் கிளைமேட்டில் காலை சீக்கிரம் எழுந்து விறுவிறுப்பாக வாக்கிங் செல்ல பலரும் விரும்புவார்கள். ஆனால் ஏற்கனவே சுவாச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குளிர்காலத்தில் காலை நடைபயிற்சி செய்வது பரிந்துரைக்கப்படாமல் போகலாம். குருகிராமில் இருக்கும் சிகே பிர்லா மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் குல்தீப் குமார் குரோவர் பேசுகையில், குளிர் சீசனில் நிலவும் குளிர்ந்த மற்றும் வறண்ட காற்று மூச்சுக்குழாயை இறுக்கமாக்குகிறது மற்றும் சுவாசிப்பதை மிகவும் கடினமாக்குகிறது. இது வீசிங், இருமல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, குளிர் சீசனானது ஆஸ்துமா அல்லது சிஓபிடி பிரச்சனையால் ஏற்கனவே அவதிப்படுபவர்களுக்கு சற்று கடினமான சூழலாக இருக்கும். ஏனெனில் இது போன்ற நபர்களின் நுரையீரலை இன்னும் கடினமாக்கும். குளிர்ந்த காற்றை வெப்பமாக்க மற்றும் ஈரப்பதமாக்க அவர்களின் உடல் மிகவும் கடினமாக உழைக்க வேண்டிய அவசியம் ஏற்படும். தவிர ஆண்டின் இந்த சீசனில் எழும் மற்றொரு முக்கிய கவலை காற்று மாசு அதிகரிப்பு ஆகும். அதிகாலையில் மாசுபாடு மிகவும் பொதுவானது. ஏனெனில் குளிர்காலத்தில் இருக்கும் temperature inversions கார் போன்ற வாகனங்களில் இருந்து வெளியேறும் மற்றும் தரைக்கு அருகில் உள்ள தொழிற்சாலை உமிழ்வுகள் போன்ற மாசுபாடுகளை தக்கவைக்கிறது. இது வளிமண்டலத்தில் அதிக அளவிலான தீங்கு விளைவிக்கும் மாசு துகள்களை ஏற்படுத்துவதோடு, நம் நுரையீரலை எரிச்சலூட்டுகிறது. அழற்சி / வீக்கத்தை தீவிரப்படுத்துகிறது. ஏற்கனவே சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் அறிகுறிகளை மோசமாக்குகிறது. மேலும், இது போன்ற மாசுக்கள் நிறைந்த காற்றை ஆஸ்துமா அல்லது வேறு ஏதேனும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் சுவாசிப்பது மேலும் பிரச்சனையை தீவிரமாகும் என்பதால், அவர்கள் வெளிப்புறத்தில் செய்யும் வாக்கிங் போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை மிகவும் கடினமாக்குகிறது என்று டாக்டர் குரோவர் கூறியுள்ளார். இதையும் படிக்க: பசியின் போது கண்டதையும் சாப்பிடுகிறீர்களா..? அவசியம் இதை தெரிஞ்சுக்கோங்க.! மேலும் பேசிய அவர், குளிர் சீசனில் பரவலாக காணப்படும் வறண்ட மற்றும் குளிர்ந்த காற்று டிஹைட்ரேஷனை ஏற்படுத்துகிறது, இது சுவாச மண்டலத்தை சேதப்படுத்தும். மேலும் குளிர்ந்த காற்று தொண்டை மற்றும் காற்று பாதைகளை உலர்த்தும் தன்மை கொண்டது என்பதால் இந்த சூழல் சுவாசிப்பதை மிகவும் அசௌகரியமானதாக, கடினமானதாக ஆக்குகிறது. ஏற்கனவே டிஹைட்ரேஷனுக்கு உள்ளானவர்களுக்கு, வயதானவர்கள் அல்லது நாள்பட்ட மருத்துவ நிலைமைகள் உள்ளவர்களுக்கு இது அதிக இருமலை ஏற்படுத்தும் மற்றும் அவர்களுக்கு இருக்கும் சுவாச பிரச்சனை சார்ந்த அறிகுறிகளை அதிகரிக்கச் செய்யும் என்றார். தவிர குளிர்காலம் சளி, காய்ச்சல் மற்றும் நிமோனியா உள்ளிட்ட தொற்றுகள் பரவும் உச்ச சீசனாக உள்ளது. மேலும் குளிர் காற்று நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியைக் குறைக்கிறது. எனவே, உடல் மேற்கண்ட தொற்றுகளால் எளிதில் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. குளிர்காலத்தில் காலை சிறிது நேரம் வாக்கிங் செல்ல விரும்புவோர் வெளியில் செல்வதற்கு முன் வீட்டிற்குள் ப்ரீஹீட் செய்வது, காற்றை moisten-ஆக்க ஸ்கார்வ்ஸ் அல்லது மாஸ்க் பயன்படுத்துவது மற்றும் ஹைட்ரேஷனாக இருப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி குளிர் காலத்தில் வாக்கிங் செல்வது பாதுகாப்பாக இருக்கும் என்கிறார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.