LIFESTYLE

ப்ரோக்கோலி அல்லது காலிஃபிளவர்.. இரண்டில் எது ஆரோக்கியமானது?

உடல் ஆரோக்கியமாக இருக்க சத்தான உணவுகளை உண்ண வேண்டும். காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் உணவை சமநிலைப்படுத்துகின்றன. ஆரோக்கியமான காய்கறிகளில் ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இவை இரண்டும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இவற்றில் உள்ள சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அவை உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது மற்றும் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கின்றன. இருப்பினும், ப்ரோக்கோலிக்கும், காலிஃபிளவருக்கும் இடையில் எதைச் சாப்பிடுவது நல்லது என்று பலர் குழப்பமடைகிறார்கள். மேலும், இவற்றின் பயன்கள் என்ன? எதில் நல்ல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பதை பற்றி பார்ப்போம். ப்ரோக்கோலி: ஒரு கப் ப்ரோக்கோலியில் 30 கலோரிகள், 2 கிராம் ப்ரோடீன், 0 கிராம் கொழுப்பு, 6 கிராம் கார்போஹைட்ரேட், 2 கிராம் சர்க்கரை, 2 கிராம் ஃபைபர் மற்றும் 29 மி.கி சோடியம் ஆகியவை கொண்டுள்ளது. தினமும் ஒரு கப் அளவிலான ப்ரோக்கோலியை சாப்பிடுவதால், உடலுக்கு தேவையான வைட்டமின் C மற்றும் வைட்டமின் K ஆகியவற்றை வழங்குகிறது. இது தவிர மாங்கனீஸ், ஃபோலேட் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவையும் வழங்குகிறது. காலிஃபிளவர்: ஒரு கப் காலிஃபிளவரில் 27 கலோரிகள், 2 கிராம் ப்ரோடீன், 0 கிராம் கொழுப்பு, 5 கிராம் கார்போஹைட்ரேட், 2 கிராம் சர்க்கரை, 2 கிராம் ஃபைபர் மற்றும் 32 மி.கி சோடியம் ஆகியவை கொண்டுள்ளது. ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர் ஆகிய இரண்டிலும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான ஃபோலேட் உள்ளது. வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே ஆகியவற்றின் அடிப்படையில் காலிஃபிளவர் ப்ரோக்கோலியை விட குறைவான ஊட்டச்சத்தை கொண்டுள்ளது. ஏனெனில் காலிஃபிளவரில் வைட்டமின் ஏ மிகக் குறைவாக உள்ளது, மேலும் 1 கப் காலிஃபிளவரில் உங்கள் தினசரி வைட்டமின் சி தேவையில் முக்கால் பங்கும் மற்றும் வைட்டமின் கே தேவையில் 20% மட்டுமே உள்ளது. Also Read | பனீர் மற்றும் டோஃபு ஆகியவற்றில் எது உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்தது..? காலிஃபிளவர் மற்றும் ப்ரோக்கோலி இடையே உள்ள வேறுபாடு: இவை இரண்டும் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளாக இருந்தாலும், ப்ரோக்கோலி கண் ஆரோக்கியத்திற்கு சிறந்தது மற்றும் ப்ரோக்கோலி ஆனது காலிஃபிளவரை விட அதிக வைட்டமின்கள், குறிப்பாக கே மற்றும் சி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது தவிர அதிக நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும், காலிஃபிளவரை விட ப்ரோக்கோலியில் நன்மை அளிக்கும் பாலிஅன்சாச்சுரேட்டட் ஃபாட்டி ஆசிட் அதிகம் மற்றும் தீங்கு விளைவிக்கும் சாச்சுரேட்டட் ஃபாட்டி ஆசிட்கள் குறைவாக உள்ளன. வாரந்தோறும் உங்கள் உணவில் இரண்டையும் சேர்த்துக்கொள்வது முக்கியம் : இரண்டும் வெவ்வேறு வடிவங்களில் இருந்தாலும், இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவற்றில் சில வேறுபாடுகள் இருந்தபோதிலும், இவை இரண்டிலும் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் ஒரே மாதிரியானவை. ப்ரோக்கோலியில் ஏராளமான பீட்டா கரோட்டின் உள்ளது, இது பார்வைக்கு நல்லது என்று கருதப்படுகிறது. காலிஃபிளவரை விட ப்ரோக்கோலியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. ப்ரோக்கோலியில் வைட்டமின் கே நிறைந்துள்ளது. இதை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால், உங்கள் வைட்டமின் கே குறைபாட்டைப் போக்கலாம். ப்ரோக்கோலியில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இதனால் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்திலிருந்து உங்களைத் தடுக்கிறது. காலிஃபிளவரில் காணப்படும் சல்போராபேன் புற்றுநோய் செல்களைத் தடுப்பதில் உதவியாக இருக்கும். நீங்கள் அதை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். காலிஃபிளவரில் நார்ச்சத்து ஏராளமாக உள்ளது, இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. காலிஃபிளவரில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது. எனவே, உடல் எடையை குறைக்க விரும்பினால், இந்த காய்கறியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். எனவே இந்த இரண்டும் உங்கள் உணவில் சிறந்த மற்றும் அதிகமான சத்துக்களை சேர்க்கிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.