LIFESTYLE

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழிப்புணர்வு பேரணி ... சிலம்பம், ரிங் பால் சுழற்றி மாணவர்கள் அசத்தல்...

தமிழ்மொழிச் சட்ட வார விழா பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த ஆட்சியர்... தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழாவினை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கல்லூரி மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் பழனி கொடியசைத்துத் துவக்கி வைத்தார். தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பட்டுவருகிறது. அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில், 18.12.2024 முதல் 27.12.2024 வரை தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், 18.12.2024 பெயர் பலகைகளை தமிழில் எழுதுவது தொடர்பாக வணிக சங்கங்களோடு கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதுமட்டுமின்றி “ஆட்சிமொழித் திட்டம் தமிழை வளர்ப்பது ஆண்களா? பெண்களா?” என்ற தலைப்பில் அரசுக் கலைக் கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே பட்டி மன்றமும் நடைபெற்றது. அதன் தொடர் நிகழ்வாக தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் தனித்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 350-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது. ஆட்சியர் வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணி, நகரின் முக்கிய வீதி வழியாகச் சென்று நான்கு முனைச் சந்திப்பில் நிறைவடைந்தது. இதையும் வாசிக்க: ₹.5 ஆயிரம் பரிசுத் தொகை வெல்ல சூப்பர் வாய்ப்பு… நாளையே கடைசி நாள்… முந்துங்கள் இந்த விழிப்புணர்வு பேரணியில் “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவியர்கள் கையில் ஏந்திச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவர்கள் சிலம்பாட்டம், ரிங் பால் போன்ற கலை நிகழ்ச்சிகளும் சிலம்பாட்டக் கூட்டமைப்பின் சார்பாக பல்வேறு நடைபெற்றது. தொடர்ந்து 23.12.2024 முதல் 27.12.2024 வரை நான்கு நாட்களுக்கு அரசு பணியாளர்களுக்கான சுற்றோட்டக் குறிப்புகள், செயல்முறை ஆணைகள், குறிப்பாணைகள், வரைவுகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்புகள், நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது என்றும் தெரிவித்தனர். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.