LIFESTYLE

வயிற்று உப்புசம், வாயு தொல்லையால் ரொம்ப சிரமமா இருக்கா..? உங்களுக்கான சில டிப்ஸ்..!

பிசியாக நகர்ந்து கொண்டிருக்கும் அன்றாட வாழ்க்கையில் பொறுமையாக சாப்பிடுவது என்ற எளிமையான செயலை கூட நம்மால் செய்ய முடியாமல் போகிறது. உணவை வேக வேகமாக மென்றும், மெல்லாமலும் விழுங்கி விடுகிறோம். ஆனால் இந்த பழக்கத்தால் நம்முடைய ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க விளைவுகள் ஏற்படலாம். விரைவாக சாப்பிடுவதால் வாயு தொல்லை, வயிற்று உப்புசம் மற்றும் அசௌகரியம் போன்ற பொதுவான செரிமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. நாளடைவில் இது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை பாதித்து, வேறு சில உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. எனவே கூடுதலாக ஒரு சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டு பொறுமையாக கவனமுடன் சாப்பிடுவது உங்களுடைய செரிமானத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். விரைவாக சாப்பிடுவது வாயு தொல்லை மற்றும் வயிற்று உப்புசத்தை எவ்வாறு தூண்டுகிறது? நாம் வேகமாக சாப்பிடும் பொழுது உணவோடு சேர்த்து காற்றையும் விழுங்க நேரிடுகிறது. இந்த அடைப்பட்ட காற்று வயிற்றில் சேகரிப்பட்டதனால் வாயுத்தொல்லை மற்றும் அசௌகரியம் உண்டாகிறது. உணவை நன்றாக மெல்லும் பொழுது அது சிறு சிறு துகள்களாக நம்முடைய வயிற்றுக்குள் சென்றால் மட்டுமே ஜீரணம் முழுமையாக நடைபெறும். ஆனால் அவ்வாறு செய்யாமல் நாம் விரைவாக சாப்பிட்டால் உணவு பெரிய பெரிய பகுதிகளாக வயிற்றை அடைகிறது. இது செரிமான நொதிகள் அவற்றை ஜீரணம் செய்வதற்கு கடினமாக மாற்றுகிறது. இதனால் குடலில் புளிக்க வைக்கும் செயல்முறை ஏற்பட்டு வாயு உருவாகிறது. நாம் போதுமான அளவு சாப்பிட்டு இருக்கோமா இல்லையா என்பதை மூளை உணர்வதற்கு பொதுவாக 20 நிமிடங்கள் எடுக்கும். நாம் வேகமாக சாப்பிடும் பொழுது வயிறு நிரம்பிய உணர்வு மூளைக்கு பதிவாவதற்கு காலதாமதம் ஆகும் என்பதால் நாம் அளவுக்கு அதிகமான உணவை அதற்கு முன்னதாகவே சாப்பிட்டு விடுவோம். இது வயிற்றில் அழுத்தத்தை ஏற்படுத்தி வயிற்று உப்புசத்தை உண்டாக்கும். வாயு தொல்லை மற்றும் வயிற்று உப்புசத்தை தவிர்ப்பதற்கான வழிகள் என்ன? எப்பொழுதும் கொஞ்சம் கொஞ்சமாக உணவை நன்றாக மென்று கூழாக்கி விழுங்குவதை உறுதிப்படுத்துங்கள். ஒவ்வொரு முறை உணவை விழுங்குவதற்கு முன்பும் குறைந்தது 20 முதல் 30 முறை அதனை மெல்ல வேண்டும். இவ்வாறு செய்வது ஜீரணத்தை எளிதாக்கும். அவசர அவசரமாக சாப்பிடுவதற்கு பதிலாக பொறுமையாக சாப்பிடுவது காற்றை விழுங்குவதை குறைத்து, வயிற்றுக்கு உணவை செயல்படுத்துவதற்கு போதுமான நேரம் கிடைக்கும். நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். அதே நேரத்தில் நீங்கள் உணவின் போது அளவுக்கு அதிகமாகவும் தண்ணீர் குடிக்கக் கூடாது. ஏனெனில் இது செரிமானத்திற்காக வயிற்றில் உற்பத்தியாகி இருக்கும் அமிலத்தை கரைத்து செரிமான செயல்முறையை மெதுவாக்கும். பெரும்பாலான நபர்கள் சாப்பிடும் பொழுது பிறரிடம் பேசும் கெட்ட பழக்கத்தை கொண்டிருக்கின்றனர் ஆனால் இந்த பழக்கத்தின் விளைவால் நாம் காற்றை விடுங்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் வயிற்று உப்புசம் பிரச்சனை மோசமாகலாம். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.