LIFESTYLE

சிறந்த முடி வளர்ச்சிக்கு உதவும் பயோட்டின் அதிகம் உள்ள 7 உணவுகள்..!

பயோட்டின் அதாவது வைட்டமின் பி7 (Vitamin B7) என்பது நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். நம்முடைய முடி, சருமம் மற்றும் நகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த வைட்டமின் நம் உடலில் போதுமான அளவு இருப்பது அவசியம். முக்கியமாக நமது முடியின் பெரும்பகுதியை உருவாக்கும் கெரட்டின் என்ற ப்ரோட்டீனை உருவாக்குவதில் இந்த வைட்டமின் முக்கிய பங்கு வகிக்கிறது. போதுமான அளவு பயோட்டின் இல்லாவிட்டால் முடி உதிர்தல், நகங்கள் மிகவும் பலவீனமடைவது உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படலாம். எனினும் அதிர்ஷ்டவசமாக முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும், கூந்தல் வேர்களை வலுப்படுத்தும் மற்றும் சேதத்தைத் தடுக்க உதவும் பல உணவுகளில் பயோட்டின் காணப்படுகிறது. கூந்தல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க உதவும் பயோட்டின் நிறைந்த உணவுகள் பற்றி இங்கே பார்க்கலாம்… முட்டைகள்: முட்டைகளில் பயோட்டின் நிரம்பியுள்ளது, எனவே இது கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு சிறந்த உணவாகும். ஒரு முட்டையில் சுமார் 10 மைக்ரோகிராம் பயோட்டின் உள்ளது. மேலும் ஆரோக்கியமான முடிக்கு முக்கியமான புரதம், துத்தநாகம் மற்றும் இரும்பு ஆகியவையும் முட்டைகளில் அடங்கியுள்ளன. - பயோட்டின்: இது கெரட்டின் தயாரிப்பதில் உதவுகிறது, இது நம் முடியை வலுவாக வளரவும் உதவுகிறது. - ப்ரோட்டீன்: முடி பெரும்பாலும் புரதம் என்பதால், முட்டையில் உள்ள உயர்தர புரதம் முடியை சரி செய்ய மற்றும் நன்கு வளர அவசியமாக இருக்கிறது. -துத்தநாகம் மற்றும் இரும்பு: துத்தநாகமானது கூந்தலை புதுப்பிக்க உதவும் அதே நேரத்தில் முட்டைகளில் இருக்கும் இரும்புச்சத்து உங்கள் முடி வேர்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் சென்றடைவதை உறுதி செய்து ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. பாதாம் பருப்புகள்: பாதாம்களில் ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றுடன்பயோட்டின் உள்ளது. எனவே உங்கள் கூந்தல் ஆரோக்கியத்திற்கு பாதாம்கள் ஒரு சூப்பர்ஃபுட் ஆகும். சுமார் 23 பாதாம்களில் தோராயமாக 1.5 மைக்ரோகிராம் பயோட்டின் உள்ளது. மேலும் ஆரோக்கியமான கூந்தலுக்கு தேவையான மற்ற ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. - இவற்றில் இருக்கும் பயோட்டின் முடி அமைப்பை மேம்படுத்த உதவுகிறது மற்றும் முடி உடைவதை தடுக்கிறது - பாதாம்களில் இருக்கும் வைட்டமின் ஈ (ஆன்டிஆக்ஸிடன்ட்) ஸ்கால்ப் பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. ரத்த ஓட்டம் சீராக இருப்பது முடி வேர்களுக்கு முக்கியமானது. - மெக்னீசியம்: இது முடி உதிர்தலுக்கான பொதுவான காரணமாக இருக்கும் மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் முடி ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. கேரட்: பயோட்டின் அதிகமுள்ள கேரட் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அவை ஏராளமான பீட்டா கரோட்டின் வழங்குகின்றன, இதாய் உடல் வைட்டமின் ஏ ஆக மாற்றுகிறது. இந்த வைட்டமின் ஸ்கால்ப் உட்பட ஆரோக்கியமான சருமத்திற்கு இன்றியமையாதது. - இதிலிருக்கும் பயோட்டின் மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது மற்றும் சிறந்த முடி வளர்ச்சிக்கு கெரட்டின் உருவாக்கத்தை ஆதரிக்கிறது. - கேரட்களில் உள்ள வைட்டமின் ஏ சரும செல்களை புதுப்பிக்க உதவுகிறது மற்றும் ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. - இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நம் கூந்தலை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது மற்றும் முடி வளர்ச்சிக்கான ஆரோக்கியமான சூழலை உறுதி செய்கிறது. Also Read | குளிர்காலத்தில் வறண்ட சருமத்தால் சங்கடமாக உள்ளதா..? இந்த 7 வழிகளை செய்து பாருங்கள்.! பெர்ரிக்கள்: ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பெர்ரிக்களில் பயோட்டின் மற்றும் வைட்டமின் சி நிரம்பியுள்ளது, இவை இரண்டும் முடி யை ஆரோக்கியமாக வைக்க மற்றும் சிறந்த வளர்ச்சிக்கு உதவுகின்றன. இவற்றுள் இருக்கும் வைட்டமின் சி கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது, முடி தண்டுகளை வலுப்படுத்துகிறது, அதே நேரத்தில் பயோட்டின் ஆரோக்கியமான கெரட்டின் உற்பத்திக்கு பங்களிக்கிறது. - இதிலிருக்கும் பயோட்டின் கெரட்டின் உற்பத்தி மற்றும் வலுவான முடிக்கு அவசியமான இயற்கையான ஆதாரமாகும். - பெர்ரிக்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் முடியை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், நம் உடல் இரும்புச்சத்தை உறிஞ்ச உதவுகிறது, இது வளர்ச்சிக்கு முக்கியமானது. - இவற்றில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் கூந்தலை சேதம் மற்றும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ்ஸிலிருந்து முடியைப் பாதுகாக்கிறது, முடி உதிர்வைக் குறைக்கிறது. சர்க்கரைவள்ளி கிழங்கு: இது பயோட்டின் மற்றும் பீட்டா-கரோட்டீனைக் கொண்ட ஒரு அதிக சத்துமிக்க வேர் காய்கறி ஆகும், இதை உடல் வைட்டமின் ஏ-ஆக மாறுகிறது. ஆரோக்கியமான சருமம் மற்றும் செல் உற்பத்திக்கு வைட்டமின் ஏ முக்கியமானது. மேலும் இது கூந்தலின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு முக்கியமானது. - இதிலிருக்கும் பயோட்டின் மயிர்க்கால்களை வலுவாக்குகிறது மற்றும் கெரட்டினை உருவாக்க உதவுகிறது. - இந்த கிழங்குகளில் இருக்கும் பீட்டா கரோட்டின் ஸ்கால்ப்-ஐ ஆரோக்கியமாக வைக்கிறது மற்றும் வறட்சியை தடுக்கிறது, மயிர்க்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்கிறது. கீரைகள்: கீரைகளில் குறிப்பாக பசலை கீரை பயோட்டின், இரும்பு மற்றும் ஃபோலேட் ஆகியவற்றை வழங்கும் சிறந்த உணவாகும். முடி வளர்ச்சி சிறப்பாக இருக்க, முடியை ஆரோக்கியமாக பராமரிக்க இந்த ஊட்டச்சத்துக்கள் முக்கியம். இந்த கீரையில் உள்ள பயோட்டின் மற்றும் பிற வைட்டமின்களின் கலவையானது வலுவான முடி இழைகளுக்கு உறுதுணையாக இருக்கும். - வலுவான முடிக்கு முக்கியமான கெரட்டின் உற்பத்தியைகீரைகளில் இருக்கும் பயோட்டின் ஊக்குவிக்கிறது - இதிலிருக்கும் இரும்புச்சத்து ஸ்கால்ப்பில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, மயிர்க்கால்களுக்கு ஏராளமான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. - இதில் இருக்கும் ஃபோலேட் செல் டிவிஷனுக்கு முக்கியமானது மற்றும் மயிர்க்கால்களை மீண்டும் உருவாக்கி ஆரோக்கியமாக வளர உதவுகிறது. அவகேடோ பழங்கள்: இவற்றில் பயோட்டின், ஆரோக்கிய கொழுப்புகள், வைட்டமின் ஈ மற்றும் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இவை அனைத்துமே கூந்தல் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை. இவற்றில் இருக்கும் ஆரோக்கிய கொழுப்புகள் உச்சந்தலையை ஈரப்பதமாக வைக்கிறது மற்றும் மயிர்க்கால்களுக்கு தேவையான ஊட்டமளிக்கிறது, வறட்சியை குறைக்கிறது. - இவற்றுள் இருக்கும் பயோட்டின் கூந்தலை பலப்படுத்துகிறது மற்றும் கூந்தல் உடைவதை தடுக்கிறது. - உங்கள் உச்சந்தலையை ஈரப்பதமாக வைப்பதன் மூலம் வறட்சி அல்லது பொடுகு தவிர்க்க மற்றும் இயற்கை எண்ணெய்களை உற்பத்தி செய்ய இவற்றில் இருக்கும் ஆரோக்கிய கொழுப்புகள் உதவுகின்றன. - இந்த பழங்களில் இருக்கும் முக்கிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்களான வைட்டமின்கள் ஈ மற்றும் சி நம் தலைமுடியை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.