LIFESTYLE

இரவில் வைட்டமின் பி12 சப்ளிமெண்ட் ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது தெரியுமா....?

உணவுகள் மற்றும் மருந்துகளின் விஷயத்தில் நாம் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவற்றை சரியாக பின்பற்ற நாம் பெரும்பாலும் கவனம் செலுத்துவதில்லை. காரணம் நினைவில் கொள்ள நிறைய விஷயங்கள் இது சார்ந்து இருப்பதால்… நீங்கள் வைட்டமின் டி காப்ஸ்யூல்களை எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால், எப்போதும் காலை உணவுக்குப் பின்னர் அல்லது மதிய உணவுக்குப் பின்னர் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது கொழுப்பில் கரையக்கூடியது. சிலர் வைட்டமின் பி 12 சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்கிறார்கள், அதுவும் இரவு நேரத்தில். ஆனால் பிரபல ஊட்டச்சத்து நிபுணரான அமிதா காத்ரே கூறுகையில், வைட்டமின் பி12 சப்ளிமென்ட்ஸ்களை இரவில் எடுத்துக் கொள்வது ஒருவரின் தூக்க சுழற்சியை குழப்பி விட்டுவிடக்கூடும் என்கிறார். சப்ளிமெண்ட்ஸ் என்று வரும்போது டைமிங்தான் எல்லாமே, அதிலும் பி12 ஆற்றலை அதிகரிக்கக்கூடியது என்பதால் அதை பகலில் எடுத்துக் கொள்வது நல்லது என்கிறார் காத்ரே. பொதுவாக வைட்டமின் பி12 குறைபாடு இருப்பவர்களுக்கு வைட்டமின் பி12 சப்ளிமெண்ட்ஸ் பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவாக வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் ரத்த சோகை, சோர்வாக அல்லது பலவீனமான உணர்வு, நடைபயிற்சியின்போது சிரமம், எடை இழப்பு, எரிச்சல், பசியின்மை மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் இருக்கும். இந்த குறைபாடு பொதுவாக உணவில் இருந்து போதுமான வைட்டமின் பி 12 கிடைக்காதவர்களிடமோ அல்லது அவர்களின் செரிமானப் பாதை போதுமான அளவு சத்துக்களை உறிஞ்சாமல் இருப்பவர்களிடமோ காணப்படுகிறது. நரம்பு மண்டலம் மற்றும் ரத்த சிவப்பணுக்களின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் வைட்டமின் பி12 முக்கியப் பங்கு வகிப்பதாக பிரபல மருத்துவ ஆலோசகர் டாக்டர் அனிகேத் முலே கூறியுள்ளார். மற்றொரு மருத்துவரான ஐதராபாத்தில் இருக்கும் Gleneagles Aware Hospital-ஐ சேர்ந்த டாக்டர் ரமேஷ் பேசுகையில், “வைட்டமின் பி12-ஆனது ஆற்றல் உற்பத்திக்கு முக்கியமானது என்பதால் காலை நேரங்களில் எடுத்துக் கொள்வது சிறந்த பலன்களை அளிக்கும். இது ரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது, நரம்பு செயல்பாடுகள் சிறப்பாக இருக்க உதவுகிறது மற்றும் டிஎன்ஏ சிந்தஸிற்கு (DNA synthesis) பங்களிக்கிறது. இதன் காரணமாக வைட்டமின் பி12 ஆற்றலை மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்கிறது. இதையும் படிக்க: 18 வயதுக்கு பிறகு கூட ஒருவரால் உயரத்தை அதிகரிக்க முடியுமா..? ஆய்வுகள் கூறுவது என்ன? மும்பையில் இருக்கும் Wockhardt Hospitals-ஐ சேர்ந்த மருத்துவரான டாக்டர் அனிகேத் முலே பேசுகையில், வைட்டமின் பி12 சப்ளிமெண்ட்ஸ் எனர்ஜி மெட்டபாலிசம் மற்றும் நரம்பு மண்டல செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, இவற்றை பகலில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கு காரணம் B12 விழிப்புணர்வை அதிகரிக்கும் மற்றும் சோர்வு உணர்வைக் குறைக்கும். ஒருவேளை இதை இரவில் எடுத்துக் கொண்டால் தூங்குவதில் சிரமத்தை ஏற்படுத்தக் கூடும் என்று டாக்டர் முல் கூறியுள்ளார். மேலும் பேசிய டாக்டர் முலே, வைட்டமின் பி12 சப்ளிமென்ட்டை இரவில் எடுக்கும் ஒருவர் சுறுசுறுப்பாக உணரலாம் மற்றும் இதனால் நன்றாக தூங்க முடியாமல் போகலாம். மேலும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அவசியமான செயல்முறைகளை சரிசெய்யவும், மீட்டெடுக்கவும் உடலுக்குள் நடைபெறும் பிற இரவு நேர உடல் செயல்பாடுகளிலும் தலையிடக்கூடும் என்று நம்பப்படுவதாக கூறினார். இந்த சப்ளிமென்ட் பெரும்பாலும் பகலில் எடுத்துக் கொள்ளவே பரிந்துரைக்கப்படுகிறது. எனினும், ஒருவருக்கு அவரது மருத்துவர் குறிப்பாக இரவில் வைட்டமின் பி12ஐ எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி இருந்தால், அவர்களின் வழிமுறைகளை சரியாக கேட்டு, பின்பற்றுவது சிறந்தது என்று டாக்டர் முலே கூறினார். நீங்கள் வைட்டமின் பி12 சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்பவர் என்றால், உங்களுக்கு குறிப்பிட்ட மருத்துவ நிலைமைகள் அல்லது உணவுக் கட்டுப்பாடுகள் இருந்தால், நேரம் மற்றும் மருந்தளவு குறித்த சிறப்பு ஆலோசனைக்கு உங்கள் மருத்துவரை அணுகவும். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.