LIFESTYLE

Coconut Water in Winter: சரும பளபளப்பு முதல் செரிமானம் வரை.. இளநீர் குடிப்பதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்!

குளிர்காலத்தில் இளநீர் குடிப்பதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். குளிர்காலத்தில் பலரும் தாங்கள் அருந்தும் பானங்கள் சூடாக இருக்குமாறு பார்த்து கொள்கிறார்கள். உதாரணத்திற்கு சூப்கள், ஹெர்பல் டீ என குளிர்காலத்திற்கு ஏற்ற இதமான பானங்களை தேர்வு செய்து பருகுகிறார்கள். ஆனால் கோடை சீசனில் பிரபலமாக இருக்கும் இளநீரை குளிர்காலத்தில் குடிப்பதில் பலரும் ஆர்வம் காட்ட மறுக்கிறார்கள். இருப்பினும் குளிர் காலத்தில் கூட நமக்கு தேவையான ஆற்றல் மற்றும் சத்துக்களை இளநீர் அளிக்கிறது. குளிர் மற்றும் காய்ச்சல் காலங்களில் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்கள் இளநீரில் உள்ளது. இளநீரில் பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற எலக்ட்ரோலைட்ஸ் நிறைந்துள்ளன. இது உடலில் திரவங்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. நீரிழப்பு எளிதாக ஏற்படும் குளிர்கால மாதங்களில் இளநீர் மிகவும் அவசியமான பானங்களில் ஒன்றாக இருக்கிறது. மற்ற பானங்களைப் போலல்லாமல் தனித்துவமான சுவை கொண்ட இளநீரை குளிர்காலத்தில் குடிப்பதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம். உடல் எடையை நிர்வகிக்க உதவுகிறது இளநீரில் கலோரிகள் குறைவு. ஆனால் அதே சமயம் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே குளிர் சீசனில் ஆரோக்கியமாக இருப்பதற்கும், உடல் எடையை நிர்வகிப்பதற்கும் இளநீர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். நேச்சுரல் ஹைட்ரேஷன் இளநீர் நமது உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளை நிரப்புகிறது மற்றும் குறிப்பாக வறண்ட குளிர்கால மாதங்களில் நம்மை ஹைட்ரேட்டாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. செரிமான ஆரோக்கியத்திற்கு உதவும் இளநீரில் இருக்கும் இயற்கையான என்சைம்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. ஹெவியான குளிர்கால உணவுகளால் அடிக்கடி ஏற்படும் அசிடிட்டியை இளநீர் தடுக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது வைட்டமின்ஸ், மினரல்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த இளநீர் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இதன் மூலம் பருவகால நோய் தொற்று ஏற்படும் அபாயத்தை தடுக்க உதவுகிறது. சரும பளபளப்பை ஊக்குவிக்கிறது ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் ஹைட்ரேட்டிங் பண்புகள் நிரம்பிய இளநீரை குளிர்காலத்தில் பருகுவதால் சருமத்தை எப்போதும் ஈரப்பதமாகவும் பொலிவாகவும் வைத்திருக்கும். ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது இளநீரில் உள்ள பொட்டாசியம் நம்முடைய ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பொதுவாக குளிர் மாதங்களில் நம்முடைய ரத்த அழுத்தம் ஏற்ற இறக்கமாக இருக்கும். இதனால் இந்த சீசனில் இளநீர் பருகுவது ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்த உதவுகிறது. சோர்வை குறைக்கிறது இளநீர் இயற்கையாகவே ஆற்றலை அதிகரிக்க கூடிய மிகச்சிறந்த பானம் ஆகும். நம் உடல் இழந்த ஊட்டச்சத்துக்களை நிரப்ப இளநீர் உதவுகிறது. இதன் மூலம் குளிர்காலத்தில் ஏற்படும் சோம்பல் மற்றும் சோர்வை எதிர்த்து போராட இளநீர் உதவுகிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.