LIFESTYLE

பக்தர்கள் மட்டுமல்ல பயணிகளுக்கும் பிடித்த இடம்... அன்னமலை தண்டாயுதபாணி கோவில் சிறப்புகள்...

பக்தர்கள் மட்டுமல்ல பயணிகளுக்கும் பிடித்த இடம்... அன்னமலை தண்டாயுதபாணி கோவில் சிறப்புகள்.. நீலகிரி மாவட்டம் பல புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளது போலச் சிறப்பு வாய்ந்த ஆன்மீக ஸ்தலங்களையும் கொண்டுள்ளது. அந்தவகையில் நீலகிரி மாவட்டம் மஞ்சூர் தாலுகா கீழ் குந்தா கிராமத்தின் அருகாமையில் அமைந்துள்ளது தான் அண்ணாமலை தண்டாயுதபாணி திருக்கோவில். இந்த கோவில் ஆன்மீக ஸ்தலம் மட்டுமின்றி மிகச் சிறந்த காட்சி முனையாகவும் உள்ளது. இந்தக் கோவில் ஊட்டியில் மற்றும் குன்னூரிலிருந்து 33 கிலோமீட்டர் தொலைவிலும், கோவையிலிருந்து காரமடை கெத்தை சாலை வழியாக 65 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த கோவில் அழகான ஒரு மலையில் சிறப்பான சூழலில் அமைந்துள்ளது. மௌன சுவாமி என்று அழைக்கக்கூடிய சிவானந்த அடிகளார் இந்த கோவிலை உருவாக்கியுள்ளார். இந்த மலையின் கீழ் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் மௌன சுவாமி தியானத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது முருகப்பெருமான் காட்சியளித்து அருள்பாலித்துள்ளார். அதன் பிறகு இங்கு இந்த தண்டாயுதபாணி கோவிலை ஏற்படுத்தியுள்ளனர். இங்கு வருகை புரியும் பக்தர்கள் பசியுடன் செல்லக்கூடாது என்பதற்காகத் தினந்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த பகுதியிலிருந்து பார்க்கும் பொழுது குந்தா அணையின் நீர்நிலை செல்லும் காட்சி மிகவும் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினைச் சேர்ந்து ராஜேந்திரன் கூறுகையில், “சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் இந்த இடத்தில் முருகர் கோவில் அமைந்துள்ளது. சிவானந்த சுவாமிகள் கனவில் இறைவன் காட்சியளித்து இந்த இடத்தில் இந்த கோவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் பகுதியில் ஒரு சிவன் குகை உள்ளது சுமார் 40 வருடங்களுக்கு முன்பு அந்த குகையில் தியானம் செய்த அவரது தியான வலிமையால் இந்த இடத்தில் இந்த முருகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிறப்பு பூஜைகளாகக் கிருத்திகை தேர் திருவிழா, முருகனுக்கு உகந்த கந்த சஷ்டி சூரசம்ஹாரம், தைப்பூசம் ஆகியவை நடைபெறுகிறது. இந்தக் கோவிலின் வருடாந்திரத் திருவிழா சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு அன்று நடைபெறும். அந்த நாளில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இங்குப் பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்த நாளில் சுமார் 8 கிலோமீட்டருக்குத் தேர் வடம்பிடிக்கப்படுகிறது. இதையும் படிங்க: கறுக் மொறுக் சேவு… எச்சில் ஊற வைக்கும் கருப்பட்டி மிட்டாய்… இது கீழ ஈரால் ஸ்பெஷல்… இங்கு ஆன்மீகச் சுற்றுலாவிற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளும் ஏராளம் உள்ளனர். மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாகக் கருதப்படும் இந்த கோவிலுக்கு அனைவரும் வருகை புரிந்து அருள் பெற்றுச் செல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார். உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.