LIFESTYLE

Sharp Eye Sight: கண் பார்வை ஷார்ப்பாக இருக்க வேண்டுமா? கேரட்டை தவிர நீங்கள் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்!

அதிக பணம் செலவழிக்காமல் உங்கள் கண்பார்வையை எளிதாக இயற்கையாகவே மேம்படுத்தி கொள்ள முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. உங்கள் கண் பார்வைக்கு நன்மைகளை அளிக்கக் கூடிய உணவுகள் பல உள்ளன. அதுப்பற்றி இங்கே பார்க்கலாம். பசலை கீரை பசலை கீரையில் லுடீன் (lutein) மற்றும் ஜியாக்சான்டின் (zeaxanthin) நிறைந்துள்ளது. இது தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களில் இருந்து நம் கண்களை பாதுகாக்கிறது. சால்மன் மீன் சால்மன் மீனில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் நிறைந்துள்ளன. இது நம்முடைய விழித்திரையை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும் கண்கள் வறண்டு போவதை தடுக்கிறது மற்றும் மாகுலர் டிஜெனெரேஷன் (macular degeneration) அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கிறது. ப்ளூபெர்ரி இவை ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்தவை. ப்ளூபெர்ரிக்களில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அழற்சியை குறைத்து கூர்மையான மற்றும் ஆரோக்கியமான பார்வையை மேம்படுத்த உதவும். சர்க்கரைவள்ளி கிழங்கு இனிப்பு உருளைக்கிழங்கு என்று குறிப்பிடப்படும் சர்க்கரைவள்ளி கிழங்குகளில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது, இது இரவு பார்வையை அதிகரிக்க உதவுகிறது மற்றும் கண்கள் அடிக்கடி உலர்ந்து பாவத்திலிருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் இந்த கிழங்குகளில் பீட்டா கரோட்டின் உள்ளது. நம்முடைய உடல் பீட்டா கரோட்டினை, வைட்டமின் ஏ ஆக மாற்றுகிறது, இது கண் வறட்சி மற்றும் மாலை கண் நோயை தடுக்க உதவுகிறது. பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை கண் தொற்று அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. பாதாம் பாதாமில் வைட்டமின் ஈ உள்ளது. இது வயது தொடர்பான சேதத்தை தடுக்கிறது. மேலும் கண்களை நீண்ட காலம் ஆரோக்கியமாக பாதுகாக்கவும் உதவுகிறது. பார்வை இழப்பு நிலைகள் ஏற்படுவதை குறைப்பதில் மற்றும் உகந்த கண் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் வைட்டமின் ஈ முக்கிய பங்கு வகிக்கிறது. முட்டைகள் முட்டையின் மஞ்சள் கருவில் லுடீன் மற்றும் ஜியாக்சான்டின் நிறைந்துள்ளது. இவை ஒளி சேதத்தை எதிர்த்துப் போராடும் நம் கண்களின் திறனை மேம்படுத்துகின்றன. ஆரஞ்சு பழங்கள் வைட்டமின் சி நிறைந்துள்ள ஆரஞ்சு பழங்கள் நம்முடைய கண்களை கண்புரை ஏற்படும் அபாயத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. மேலும் ஆரஞ்சு பழங்களில் உள்ள வைட்டமின் சி கண்ணின் கார்னியாவில் காணப்படும் கொலாஜன் உள்ளிட்ட இணைப்பு திசுக்களை உருவாக்கி பராமரிக்க உதவுகிறது. இதுதவிர வைட்டமின் சி கண்ணில் உள்ள ரத்த நாளங்களை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.