சியா விதைகளில் நார்ச்சத்து, ப்ரோடீன், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் மினெரல்கள் உள்ளன. பசையம் இல்லா சியா விதைகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்களின் சிறந்த ஆதாரமும் கூட. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இந்த சியா விதைகள் சந்தேகத்திற்கு இடமின்றி பல நன்மைகளை அளிக்கிறது. குறிப்பாக எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது, எனவே இதனை சூப்பர்ஃபுட் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சியா விதைகள் ஆனது பாலை விட 5 மடங்கு கால்சியம், ஆரஞ்சு பழத்தை விட 7 மடங்கு வைட்டமின் சி, கீரையை விட 3 மடங்கு இரும்பு, வாழைப்பழத்தை விட 2 மடங்கு பொட்டாசியம், முட்டை மற்றும் சால்மன் மீன்களை விட 3 மடங்கு அதிக ப்ரோடீன் ஆகியவை உள்ளது. மேலும் இது மீனை விட 8 மடங்கு அதிக ஒமேகா-3 உள்ளது. அதற்காக சியா விதைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடவும் கூடாது. இதனால் தேவையற்ற பக்கவிளைவுகளை சந்திக்கக்கூடும். நம் உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ளவும், உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் இது உதவிகரமாக இருக்கும். சியா விதைகளை எடுத்துக் கொண்டால் வாதம், பித்தம் குறையும் என்றும், கபம் (நீர்ச்சத்து) அதிகரிக்கும் என்றும் ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது. தினசரி உங்கள் உணவுப் பட்டியலில் சியா விதைகள் இருந்தால், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை முற்றிலும் தவிர்க்கலாம். ஒமேகா-3 நிறைந்த சியா விதைகள் இதய நோய் அபாயத்தைக் குறைத்து, தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ராலை அகற்ற உதவுகின்றன. தினமும் 2 ஸ்பூன் சியா விதைகளை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது. சியா விதைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதன் மூலம் எடை குறைக்க உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து நீரிழிவு அபாயத்தை குறைக்கிறது. Also Read | வெயிட் லாஸுக்கு பேரிச்சம் பழம்தான் பெஸ்ட்.. ஏன் தெரியுமா..? சியா விதைகள் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், ஏனெனில் அவை கால்சியம் நிறைந்தவை. நமது எலும்புகளுக்கு வலுவூட்டக் கூடிய கால்சியம், ப்ரோடீன், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துகள் சியா விதைகளில் இருக்கிறது. பால் பொருட்களை தவிர்ப்பவர்களுக்கு கால்சியம் சத்து கிடைக்க உதவியாக இருக்கும். சியா விதைகள் பெருங்குடலை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. எனவே இது பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது. சியா விதைகள் நல்ல தூக்கத்திற்கு உதவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் மூட்டு வலியையும் குறைக்கிறது. தோல், முடி மற்றும் நகங்களை அழகாக வைத்திருக்கும். சியா விதைகளில் ப்ரோடீன் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவிகரமாக இருக்கும். இதை சாப்பிடும் போது வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கிறது. None
Popular Tags:
Share This Post:
Christmas Cake Expo: கேக்ல நீந்தும் மீன்... சுவையான டைட்டானிக்... மக்களைக் கவர்ந்த கேக் கண்காட்சி...
December 24, 2024'புஷ்பா 2' ஹீரோ அல்லு அர்ஜுன் என்ன டயட் இருக்கிறார் தெரியுமா..? இதுதான் அவரின் ஃபிட்னஸ் ரகசியம்.!
December 20, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 19, 2024
-
- December 19, 2024
-
- December 19, 2024
சூப்பரா கிறிஸ்மஸ் கேக் செய்யலாம்! 2 பொருட்கள் போதும்! எப்படி தெரியுமா?
- By Sarkai Info
- December 19, 2024
அதிக மன அழுத்தம் ஏற்படுகிறதா? தினசரி 2 முறை இதை மட்டும் செய்யுங்கள்!
- By Sarkai Info
- December 19, 2024
Featured News
ப்ரோக்கோலி அல்லது காலிஃபிளவர்.. இரண்டில் எது ஆரோக்கியமானது?
- By Sarkai Info
- December 19, 2024
Latest From This Week
ரயில்வேயின் விகல்ப் திட்டம்... வெயிட்டிங் லிஸ்ட் பயணிகள் கன்பர்ம் டிக்கெட் பெறலாம்
TAMIL
- by Sarkai Info
- December 18, 2024
அசிடிட்டி பிரச்சனைக்கு இத்தனை எளிமையான ஹோம் ரெமடி இருக்கா…?
LIFESTYLE
- by Sarkai Info
- December 16, 2024
போஸ்ட் ஆபீஸ் மூலம் ரூ.9,250 மாத வருமானம் பெறுவது எப்படி?
TAMIL
- by Sarkai Info
- December 16, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.