இந்த பழம் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இதன் விலையோ மிகவும் குறைவு. சந்தையில் எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கும் பழம் இது. அதன் ஆரோக்கிய நன்மைகளை இங்கே பார்க்கலாம். குளிர்காலம் இனிமையானது என்பது உண்மைதான். இருப்பினும், இந்த குளிர் நாட்களில், நன்மையோடு சேர்ந்து பல பிரச்சனைகளும் வந்து சேர்ந்துவிடுகின்றன. முக்கியமாக குளிர்காலத்தில் தோல் வறண்டு போவதோடு சளி, இருமல் போன்ற உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இந்த காலகட்டத்தில், செரிமான அமைப்பும் மோசமடைகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகிறது. நம் உடலை வலுவாக வைத்திருக்க பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதுவும் குறிப்பாக பருவகால பழங்களை சாப்பிடுவது சிறந்தது. குளிர்காலத்தில் எந்தெந்த பழங்களை உண்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அனைத்து பழங்களும் உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குகின்றன என்கிறார் மருத்துவர் அங்கூர் ஜெயின். குறிப்பாக குளிர்காலத்தில் பப்பாளி சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், பப்பாளி மிகவும் சுவையானதும் கூட. பப்பாளியை அப்படியே தூண்டு துண்டாக நறுக்கியோ அல்லது சாலடில் சேர்த்தோ அல்லது ஜூஸாகவோ சாப்பிடலாம். மருத்துவர் கூறிய தகவலின்படி, பப்பாளி பழம் அதிக சூடு தன்மை கொண்டது. எனவே, இந்த பழத்தை குளிர்ந்த காலநிலையில் சாப்பிட்டால் உடல் சூடாகும். மேலும், பப்பாளியில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் கே போன்ற பல ஊட்டச்சத்துகள் உள்ளன. குளிர்காலத்தில், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமான அமைப்பு பலவீனமடைகிறது. பப்பாளி இந்த சக்திகளை வலுப்படுத்த உதவுகிறது. மேலும், பப்பாளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் காரணமாக சருமம் ஆரோக்கியமாக இருக்கும். குளிர்காலத்தில் பசியின்மை அதிகரிக்கிறது. இதன் விளைவாக பலர் எடை அதிகரிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதை கட்டுப்படுத்த பப்பாளி பழத்தை சாப்பிடுங்கள். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் பசி எடுக்காது. மேலும், பப்பாளியில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. முக்கியமாக, பப்பாளியில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதன் விலையும் அதிகம் இல்லை. இந்த பழம் சந்தையில் எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கிறது. பப்பாளியில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், இந்த பழம் எவ்வளவு சுவையாக இருந்தாலும், சில சூழ்நிலைகளில் இதை சாப்பிடுவது ஆபத்தானது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் கர்ப்பமாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின்றி, பப்பாளியோ அல்லது வேறு எந்த பழங்கள் அல்லது உணவுகளையோ உண்ணக் கூடாது. மேலும், பப்பாளி உடலை சூடாக்குவதால் மூல நோய் பிரச்சனையை அதிகரிக்கலாம். எனவே கவனம் தேவை. None
Popular Tags:
Share This Post:
Christmas Cake Expo: கேக்ல நீந்தும் மீன்... சுவையான டைட்டானிக்... மக்களைக் கவர்ந்த கேக் கண்காட்சி...
December 24, 2024'புஷ்பா 2' ஹீரோ அல்லு அர்ஜுன் என்ன டயட் இருக்கிறார் தெரியுமா..? இதுதான் அவரின் ஃபிட்னஸ் ரகசியம்.!
December 20, 2024What’s New
Spotlight
Today’s Hot
-
- December 19, 2024
-
- December 19, 2024
-
- December 19, 2024
சூப்பரா கிறிஸ்மஸ் கேக் செய்யலாம்! 2 பொருட்கள் போதும்! எப்படி தெரியுமா?
- By Sarkai Info
- December 19, 2024
அதிக மன அழுத்தம் ஏற்படுகிறதா? தினசரி 2 முறை இதை மட்டும் செய்யுங்கள்!
- By Sarkai Info
- December 19, 2024
Featured News
ப்ரோக்கோலி அல்லது காலிஃபிளவர்.. இரண்டில் எது ஆரோக்கியமானது?
- By Sarkai Info
- December 19, 2024
Latest From This Week
ரயில்வேயின் விகல்ப் திட்டம்... வெயிட்டிங் லிஸ்ட் பயணிகள் கன்பர்ம் டிக்கெட் பெறலாம்
TAMIL
- by Sarkai Info
- December 18, 2024
அசிடிட்டி பிரச்சனைக்கு இத்தனை எளிமையான ஹோம் ரெமடி இருக்கா…?
LIFESTYLE
- by Sarkai Info
- December 16, 2024
போஸ்ட் ஆபீஸ் மூலம் ரூ.9,250 மாத வருமானம் பெறுவது எப்படி?
TAMIL
- by Sarkai Info
- December 16, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.