TAMIL-NADU

Weather update: தமிழகத்தில் மீண்டும் ஆரஞ்ச் அலெர்ட் : இன்று 4 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மிக கனமழை... எங்கெல்லாம் தெரியுமா?

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (05.10.2024) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், திண்டுக்கல், தேனி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. Also Read: Income Tax : வருமான வரி செலுத்துபவர்களுக்கு குட் நியூஸ்… வருமான வரி ரீபண்ட் பெற வருகிறது புதிய விதிமுறை… சென்னையில் மழைக்கு வாய்ப்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை வங்கக்கடல் பகுதிகள், அரபிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று (05.10.2024) செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / Weather update: தமிழகத்தில் மீண்டும் ஆரஞ்ச் அலெர்ட் : இன்று 4 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மிக கனமழை... எங்கெல்லாம் தெரியுமா? Weather update: தமிழகத்தில் மீண்டும் ஆரஞ்ச் அலெர்ட் : இன்று 4 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மிக கனமழை... எங்கெல்லாம் தெரியுமா? Weather update | சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Tamil Nadu Last Updated : October 5, 2024, 1:52 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Soundarya Kannan தொடர்புடைய செய்திகள் தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (05.10.2024) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். விளம்பரம் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், திண்டுக்கல், தேனி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல், கரூர், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. Also Read: Income Tax : வருமான வரி செலுத்துபவர்களுக்கு குட் நியூஸ்… வருமான வரி ரீபண்ட் பெற வருகிறது புதிய விதிமுறை… விளம்பரம் சென்னையில் மழைக்கு வாய்ப்பு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எச்சரிக்கை வங்கக்கடல் பகுதிகள், அரபிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று (05.10.2024) செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Heavy rain , MET , MET warning , Meteorological dept Warned , Rain Update , Weather News in Tamil , Weather Update First Published : October 5, 2024, 1:52 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.