TAMIL-NADU

"அதிமுக ஆட்சியில் தான் கேரள குப்பை தொட்டியாக தென் மாவாட்டங்கள் மாறின" - அமைச்சர் பதில்!

கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்பட்டது தொடர்பார அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கை பொறுப்பற்ற தன்மையின் உச்சம் என அதிமுக விமர்சித்துள்ளது. கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொட்டப்படுவது பற்றி அதிமுக பொதுச் செயலாளர் விமர்சித்த நிலையில் அவருக்கு பதில் அளித்த தங்கம் தென்னரசு, 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் கேரளாவின் குப்பைத் தொட்டியாக தமிழ்நாடு இருந்ததாகக் கூறியிருந்தார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள அதிமுக ஐடி பிரிவு, மருத்துவக் கழிவுகள் விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிவிட்டோம் என்று சொல்வதன் மூலம், திமுக அரசு கழிவுகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று அமைச்சர் சொல்ல வருகிறாரா என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் தெரிந்துகொள்ள: தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கேரளா கழிவுகள்; அகற்றும் செலவை ஏற்பது யார்? நம் மாநிலத்துக்குள் வரும் குப்பையைக் கூடவா தடுக்கமுடியாது என வினவியுள்ளதுடன், இந்த வழக்கமான Escape Route தமிழ்நாட்டு மக்களிடம் செல்லாது; ஒருபோதும் வெல்லாது என்றும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவதை முதலமைச்சர் எதிர்க்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில், அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். கேரளாவின் மருத்துவக் கழிவுகள் நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, வளமிகு தமிழ்நாடு, யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கேரள முதலமைச்சருடன் கைகுலுக்கி போட்டோ ஷூட் எடுப்பதில் மட்டுமே முதலமைச்சர் முனைப்பாக இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.இதற்கு, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தான் கோவை, தேனி, நெல்லை, விருதுநகர் என எல்லைப் பகுதிகள் கேரளாவின் குப்பைத் தொட்டிகளாக இருந்ததாகவும், திமுக ஆட்சியில் எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, பெருமளவு தடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக, கேரள மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.