TAMIL-NADU

பாட்டிக்கு பார்ட்டி வைத்த 78 பேரன், பேத்திகள்.. நிஜமான 'எம்டன் மகன்' சம்பவம்!

ஆட்டம் பாட்டம், கும்மி என அமர்க்களமாக மூதாட்டி ஒருவரின் இறுதிச் சடங்கு நடந்தது என்றால் நம்ப முடிகிறதா?. இதை சொல்லும்போது பரத் நடிப்பில் வெளிவந்த ‘‘எம்டன் மகன்’’ திரைப்பட காட்சிகள் வந்துபோகும். தற்போது அவை நிஜத்திலும் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள சின்னப்பாலார்பட்டியைச் சேர்ந்தவர் நாகம்மாள். 96 வயதான இவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். உயிரிழந்த மூதாட்டிக்கு 78 பேரன் பேத்திகள் உள்ளனர். இதற்கிடையே, தனது இறப்பிற்குப் பின் தனது இறுதிச்சடங்கு நிகழ்வை சோகத்தோடு இல்லாது, ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் சந்தோசமாக நடத்த வேண்டும் என மூதாட்டி ஏற்கெனவே கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி அவரது ஆசையை நிறைவேற்றும் வண்ணம், உயிரிழந்த பாட்டிக்காக 78 பேரன் பேத்திகளும் இணைந்து ஆடல் பாடல், கும்மியாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இறுதி மரியாதை செலுத்தினர். பெரும்பாலும் கோயில் திருவிழா போன்றவற்றில் மட்டுமே ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் சூழலில் இறுதிச்சடங்கில் ஆடல் பாடல் நடந்தது கவனம் பெற்றுள்ளது. இதனால், இறப்பு நிகழ்வானது சின்னப்பாலார்பட்டியில் திருவிழா போல் கொண்டாடப்பட்டது. தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / பாட்டிக்கு பார்ட்டி வைத்த 78 பேரன், பேத்திகள்.. நிஜமான 'எம்டன் மகன்' சம்பவம்! பாட்டிக்கு பார்ட்டி வைத்த 78 பேரன், பேத்திகள்.. நிஜமான 'எம்டன் மகன்' சம்பவம்! பெரும்பாலும் கோயில் திருவிழா போன்றவற்றில் மட்டுமே ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் சூழலில் இறுதிச்சடங்கில் ஆடல் பாடல் நடந்தது கவனம் பெற்றுள்ளது. படிக்கவும் … 1-MIN READ Tamil Usilampatti,Madurai,Tamil Nadu Last Updated : December 20, 2024, 1:09 pm IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Malaiarasu M தொடர்புடைய செய்திகள் ஆட்டம் பாட்டம், கும்மி என அமர்க்களமாக மூதாட்டி ஒருவரின் இறுதிச் சடங்கு நடந்தது என்றால் நம்ப முடிகிறதா?. இதை சொல்லும்போது பரத் நடிப்பில் வெளிவந்த ‘‘எம்டன் மகன்’’ திரைப்பட காட்சிகள் வந்துபோகும். தற்போது அவை நிஜத்திலும் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள சின்னப்பாலார்பட்டியைச் சேர்ந்தவர் நாகம்மாள். 96 வயதான இவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். உயிரிழந்த மூதாட்டிக்கு 78 பேரன் பேத்திகள் உள்ளனர். இதற்கிடையே, தனது இறப்பிற்குப் பின் தனது இறுதிச்சடங்கு நிகழ்வை சோகத்தோடு இல்லாது, ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் சந்தோசமாக நடத்த வேண்டும் என மூதாட்டி ஏற்கெனவே கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. விளம்பரம் அதன்படி அவரது ஆசையை நிறைவேற்றும் வண்ணம், உயிரிழந்த பாட்டிக்காக 78 பேரன் பேத்திகளும் இணைந்து ஆடல் பாடல், கும்மியாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இறுதி மரியாதை செலுத்தினர். பெரும்பாலும் கோயில் திருவிழா போன்றவற்றில் மட்டுமே ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் சூழலில் இறுதிச்சடங்கில் ஆடல் பாடல் நடந்தது கவனம் பெற்றுள்ளது. இதனால், இறப்பு நிகழ்வானது சின்னப்பாலார்பட்டியில் திருவிழா போல் கொண்டாடப்பட்டது. Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: Death , Latest News , Tamilnadu , Usilampatti First Published : December 20, 2024, 1:09 pm IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.