TAMIL-NADU

உலக சாதனை படைத்த மெரினா வான் சாகசம்! இதுவரை எந்த நாட்டிலும் இப்படி இல்லையாம்!

இந்திய விமானப் படை தொடங்கப்பட்டு 92-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில், இன்று (6-ம் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 2 மணி நேரம் பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கு முன்பாக 2003ம் ஆண்டு சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது 21 ஆண்டுகள் கழித்து 2024ம் ஆண்டு சென்னை விமான சாகச நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. விமானப் படையின் ஆகாஷ் கங்கா அணி, சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி, சாரங் ஹெலிகாப்டர்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக விமானமான தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் 1971-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்ட டகோட்டா மற்றும் ஹார்வர்ட் ஆகிய பழங்காலத்து விமானங்களும், அதிநவீன போர் விமானமான ரஃபேல் விமானம் உள்ளிட்ட 72 விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றன. இதனை காண்பதற்காக காலை 7 மணி முதலே மக்கள் கூட்டம் சென்னை மெரினாவை நோக்கி படையெடுக்க துவங்கியது. பள்ளி விடுமுறை தினம் என்பதால் அதிகப்படியான மக்கள் வர வாய்ப்பு இருக்கிறது என முன்கூட்டியே கணிக்கப்பட்டிருந்தது. மேலும், விமான சாகச நிகழ்ச்சியைக் காண 15 லட்சம் அளவிலான மக்கள் வருவார்கள் என கணிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியைக் காண 15 லட்சத்திற்கும் அதிகமானோர் வந்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாக மெரினா கடற்கரை பகுதியில் மட்டுமே 4 லட்சம் பேர் கூடி விமான சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்ததாக கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மெரினாவை ஒட்டியுள்ள பட்டினம்பாக்கம் போன்ற கடற்கரையிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. எனவே அந்தப் பகுதியில் எல்லாம் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விமான சாகச நிகழ்ச்சியை பார்வையிட்டனர் என கணிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, தெற்கில் கோவளம் முதல், வடக்கில் எண்ணூர் வரை கடற்கரைகளிலும், கட்டடங்களின் மொட்டை மாடிகளிலும் அதிகப்படியான மக்கள் சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்துள்ளனர். இதனால், மொத்தமாக 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த விமான சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்திருப்பது தெரியவந்துள்ளது. இதையும் படியுங்கள் : மேற்குவங்கத்தில் 9 வயது சிறுமி கொலை.. காவல் நிலையத்திற்கு தீவைத்த கிராம மக்கள் இதன் மூலம், உலகிலேயே போர் விமான சாகச நிகழ்ச்சியை அதிகளவிலான மக்கள் கண்டுகளித்தது சென்னையில் தான் என லிம்கா புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ் தனது சாதனை புத்தகத்தில் பதிவு செய்துள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.