TAMIL-NADU

மெரினாவில் விமான சாகசம் நிறைவு.. டிராஃபிக்கில் திணறும் சென்னை

சென்னை மெரினாவில் 21 வருடங்கள் கழித்து இன்று (6ம் தேதி) போர் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 72 விமானங்கள் பங்கேற்று, பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்தின. சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியைக் காண்பதற்கு காலை முதலே மக்கள் கூட்டம் மெரினாவை நோக்கி படையெடுக்கத் துவங்கியது. இதனால், சென்னை மெரினா காமராஜர் சாலை மக்கள் வெள்ளத்தால் நிறைந்தது. அதேபோல், மெரினாவை நோக்கி செல்லக்கூடிய திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, அடையாறு உள்ளிட்ட சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காலையிலே இருந்தது. அதேபோல், விமான சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக காலை வேளச்சேரி ரயில் நிலையத்திற்கு வந்த மக்கள் கூட்டத்தால், அந்த ரயில் நிலைய நடைமேடை முழுவதும் மனித தலைகளால் நிரம்பியிருந்தது. இந்நிலையில், இன்று காலை 11 மணிக்குத் துவங்கிய சாகச நிகழ்ச்சி, பிற்பகல் 1 மணிக்கு நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியை மெரினா கடற்கரையில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமானோரும், பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், கோவளம் முதல் எண்ணூர் வரையிலும் பல லட்சம் மக்கள் திரண்டு கண்டுகளித்தனர். இதுவரை உலகில் எந்த நாட்டிலும் கண்டுகளிக்காத அளவிற்கு 15 லட்சத்திற்கும் அதிகமானோர் சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சியைக் கண்டுகளித்ததன் மூலம், இது லிம்கா சாதனையில் இடம் பிடித்துள்ளது. இதையும் படியுங்கள் : மேற்குவங்கத்தில் 9 வயது சிறுமி கொலை.. காவல் நிலையத்திற்கு தீவைத்த கிராம மக்கள் அதேசமயம், சாகச நிகழ்ச்சி முடிவடைந்ததும், ஒரே சமயத்தில் அங்கு கூடியிருந்த மக்கள் கலைந்து செல்ல முற்பட்டனர். இதனால், சாலைகளில் நடந்து செல்லக்கூட இடம் இல்லாமல் மக்கள் தத்தளித்தனர். மேலும், அங்கிருந்து மக்கள் கலைந்து செல்லும்போது கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அங்கிருந்த மீட்புப் படையினரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. #JUSTIN விமான சாகச நிகழ்ச்சியை காண வந்து நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தவர்களை மீட்கும் மீட்புக் குழு #Chennai #Marina #Airshow | pic.twitter.com/tekVx3hd4N கடற்கரையில் இப்படியான நிகழ்ச்சி என்றால் சென்னை மெரினா, மற்றும் பல்வேறு சாலைகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல், ரயில் நிலையங்கள், மெட்ரோ நிலையங்களிலும் அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.