TAMIL-NADU

சென்னை மெரினாவில் களைகட்டிய விமான சாகச நிகழ்ச்சி... அற்புத சாகசங்களை நிகழ்த்தி அசத்தல்.. மக்கள் மகிழ்ச்சி

இந்திய விமானப் படை தொடங்கப்பட்டு 92-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில், இன்று (6-ம் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை 2 மணி நேரம் பிரமாண்ட விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கு முன்பாக 2003ம் ஆண்டு சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது 21 ஆண்டுகள் கழித்து 2024ம் ஆண்டு சென்னை விமான சாகச நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. விமானப் படையின் ஆகாஷ் கங்கா அணி, சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி, சாரங் ஹெலிகாப்டர்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக விமானமான தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் 1971-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்ட டகோட்டா மற்றும் ஹார்வர்ட் ஆகிய பழங்காலத்து விமானங்களும், அதிநவீன போர் விமானமான ரஃபேல் விமானம் உள்ளிட்ட 72 விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றன. இதில், பிணைக்கைதிகளை ராணுவத்தினர் எப்படி மீட்பார்கள் என்பதை ராணுவ வீரர்கள் தத்ரூபமாக காட்சிப் படுத்தி காட்டினர். அதனைத் தொடர்ந்து, ஆகாஷ் கங்காவின் பாரா ஜம்ப், எல்.சி.எச். விமானத்தின் சாகசம், ஹார்வடு விமானம் சுழன்று சுழன்று சாகசம் செய்தது. மேலும், ரஃபேல் வானில் வர்ண ஜாலம், சி 295 சாகசம், கலாம் (எச்.டி.டி.), காஞ்சி வடிவ போர் விமான அணிவகுப்பு, சோழா சாகசம், கார்த்திகேய அணிவகுப்பு உள்ளிட்டவை நடந்தன. அதேபோல், சாரங் ஹெலிகாப்டர்கள் வானில் இதய வடிவில் பறந்தன. சூர்யகிரண் அணிவகுப்பு, நீலகிரி அணிவகுப்பில் ஜாக்குவார் உள்ளிட்டவை பங்கேற்று சாகசம் நிகழ்த்தின. இந்த சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை கடந்த சில தினங்களாக சென்னை மெரினா கடற்கரையில் நடந்துவந்த நிலையில், இன்று இறுதி சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விமான சாகச நிகழ்ச்சியை காண இந்திய முப்படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வருகை தந்தனர். இந்த சாகச நிகழ்ச்சியைக் காண சென்னை மெரினாவில் லட்சக் கணக்கான மக்கள் திரண்டனர். இதனால், சென்னை மெரினா கடற்கரை முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிறைந்துவழிந்தது. காலை இந்த விமான சாகச நிகழ்ச்சியைக் காணவும், பிறகு சாகச நிகழ்ச்சியை முடித்துவிட்டும் கிளம்புவதற்காகவும் அதிகப்படியான மக்கள் மெட்ரோ மற்றும் ரயில் நிலையங்களில் கூடியதால் அங்கெல்லாம் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக வேளச்சேரி ரயில் நிலையம், ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்டவைகள் கடுமையான கூட்ட நெரிசல் இருந்தது. மேலும், மக்கள் சாலை மார்க்கமாக பொதுப் போக்குவரத்திலும், சொந்த வாகனங்களிலும், வந்ததால் சாலைகளிலும் டிராஃபிக் ஜாம் ஆனது. லட்சக் கணக்கான மக்கள் கண்டுகளித்த சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி லிம்கா சாதனை படைத்துள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.