TAMIL-NADU

Chennai Metro | சென்னை மெட்ரோ... 65% நிதி வழங்கும் மத்திய அரசு - தமிழக அரசின் பங்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்டத் திட்டத்துக்கு 65 சதவீத தொகையை மத்திய அரசே வழங்கும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பல ஆண்டுகளாக மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காமல் இருந்து வந்த சூழலில், கடந்த மாதம் டெல்லியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து மத்திய அரசின் நிதியை வழங்க கோரி மனு அளித்தார். இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி, 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்துக்கு மத்திய அரசு நேரடி கடனான 7 ஆயிரத்து 425 கோடி ரூபாயை வழங்கும் என்று கூறப்பட்டது. பலதரப்பு நிறுவனங்களிடம் இருந்து 35 ஆயிரத்து 600 கோடி ரூபாயை கடனாகவும், மீதமுள்ள 35 சதவீத தொகையை மாநில அரசு நிதியளிக்கும் வகையிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்டத் திட்டத்துக்கு 65 சதவீதத் தொகையை மத்திய அரசே வழங்கும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்தக் கடன்களை மாநில அரசுக்கானதாக இல்லாமல், மத்திய அரசுக்கானதாகக் கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Also Read | MK Stalin | “கருணாநிதி வழியில் வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்” - முதல்வர் ஸ்டாலின் பேச்சு சம்பந்தப்பட்ட முகமையிடம் இருந்து மத்திய அரசு கடனான பெற்று, தற்போதைய வழிமுறைக்கு மாறாக, மத்திய பட்ஜெட்டில் இருந்து நேரடியாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்திற்கு நிதி செல்லும் வழிமுறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சிஎம்ஆர்எல் மூலம் திட்ட செயலாக்க முகமையாக மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் செயல்படும் என்றும், கடனை திருப்பிச் செலுத்தும் பொறுப்பு சிஎம்ஆர்எல் நிறுவனத்தைச் சார்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் செய்திகள் / தமிழ்நாடு / Chennai Metro | சென்னை மெட்ரோ... 65% நிதி வழங்கும் மத்திய அரசு - தமிழக அரசின் பங்கு எவ்வளவு தெரியுமா? Chennai Metro | சென்னை மெட்ரோ... 65% நிதி வழங்கும் மத்திய அரசு - தமிழக அரசின் பங்கு எவ்வளவு தெரியுமா? Chennai Metro | பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. படிக்கவும் … 1-MIN READ Tamil Chennai,Tamil Nadu Last Updated : October 6, 2024, 8:24 am IST Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news Published By : Malaiarasu M தொடர்புடைய செய்திகள் சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்டத் திட்டத்துக்கு 65 சதவீத தொகையை மத்திய அரசே வழங்கும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு பல ஆண்டுகளாக மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்காமல் இருந்து வந்த சூழலில், கடந்த மாதம் டெல்லியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து மத்திய அரசின் நிதியை வழங்க கோரி மனு அளித்தார். இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. விளம்பரம் அதன்படி, 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்துக்கு மத்திய அரசு நேரடி கடனான 7 ஆயிரத்து 425 கோடி ரூபாயை வழங்கும் என்று கூறப்பட்டது. பலதரப்பு நிறுவனங்களிடம் இருந்து 35 ஆயிரத்து 600 கோடி ரூபாயை கடனாகவும், மீதமுள்ள 35 சதவீத தொகையை மாநில அரசு நிதியளிக்கும் வகையிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்டத் திட்டத்துக்கு 65 சதவீதத் தொகையை மத்திய அரசே வழங்கும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்தக் கடன்களை மாநில அரசுக்கானதாக இல்லாமல், மத்திய அரசுக்கானதாகக் கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் Also Read | MK Stalin | “கருணாநிதி வழியில் வாழ்ந்து கொண்டிருப்பவன் நான்” - முதல்வர் ஸ்டாலின் பேச்சு சம்பந்தப்பட்ட முகமையிடம் இருந்து மத்திய அரசு கடனான பெற்று, தற்போதைய வழிமுறைக்கு மாறாக, மத்திய பட்ஜெட்டில் இருந்து நேரடியாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்திற்கு நிதி செல்லும் வழிமுறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சிஎம்ஆர்எல் மூலம் திட்ட செயலாக்க முகமையாக மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் செயல்படும் என்றும், கடனை திருப்பிச் செலுத்தும் பொறுப்பு சிஎம்ஆர்எல் நிறுவனத்தைச் சார்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் Whatsapp Facebook Telegram Twitter Follow us on Follow us on google news . Tags: central government , chennai metro , CM MK Stalin , FINANCE MINISTRY , Latest News , Modi , tamilnadu government First Published : October 6, 2024, 8:23 am IST படிக்கவும் None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.