LIVE-UPDATES

Exit Poll Results 2024 LIVE Updates: மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்? ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

Tamil Nadu Rain Update | செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ட்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். அரசு பள்ளி ஆசிரியர் ரமணியின் கொலையை வன்மையாக கண்டிப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், கொலை செய்தவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்துள்ளார். ஆசிரியர் ரமணியை இழந்து வாடும் குடும்பத்தினர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை அமைச்சர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி அவர்களின் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் ரமணி… தஞ்சாவூர் அருகே மல்லிபட்டினம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குத்தி கொலை செய்யப்பட்டுளளார். திருமணம் செய்ய மறுத்ததன் காரணமாக ஆசிரியை ரமணி என்பவரை மதன் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பள்ளி வகுப்பறையில் காலையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது கத்தியால் குத்தப்பட்டார். சக ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற வழியில் ஆசிரியை ரமணி மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 26. கொலை செய்த மதனை பிடித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்படுவதால், பயணிகள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் இன்றும் ஒரே நாளில், புவனேஸ்வர், கொல்கத்தா, பெங்களூர், திருவனந்தபுரம், சிலிகுரி உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள், அதைப்போல் 6 வருகை விமானங்கள், மொத்தம் 12 விமானங்கள், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. இவைகள் அனைத்துமே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இருந்து புவனேஸ்வருக்கு இன்று காலை 7.45 மணிக்கு செல்ல வேண்டிய விமானம், காலை 8.25 மணிக்கு கொல்கத்தா விமானம், காலை 9.40 மணி பெங்களூரு விமானம், காலை 10.10 மணி திருவனந்தபுரம் விமானம், பகல் 12.35 மணி சிலிகுரி விமானம், இரவு 10.45 மணி கொல்கத்தா விமானம் ஆகிய 6 புறப்பாடு விமானங்கள்ரத்து செய்யப்பட்டுள்ளன. அதை போல் சென்னைக்கு வர வேண்டிய காலை 9 மணி பெங்களூரு விமானம், பகல் 12 மணி புவனேஸ்வர் விமானம், பகல் 1.40 மணி திருவனந்தபுரம் விமானம், பகல் 1.45 மணி கொல்கத்தா விமானம், மாலை 6.40 மணி சிலிகுரி விமானம், இரவு 10.05 மணி கொல்கத்தா விமானம் ஆகிய 6 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் 12 விமானங்கள், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. நிர்வாக காரணங்களால், இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை போல் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் அருந்திய சம்பவத்தில் 66 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தை உலுக்கிய இச்சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. விசாரணையின்போது பதிலளித்த தமிழ்நாடு அரசு, எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க ஆலோசனைகள் வழங்க ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. புலன் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ள நிலையில், சிபிஐ-க்கு மாற்றுவதால் எந்த பயனும் இல்லை எனவும் தெரிவித்தது. உள்ளூர் அரசியல்வாதி மற்றும் காவல்துறையினர் உடந்தையாக செயல்பட்டுள்ளதாக கூறப்படுவதில் எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம், இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது. ஜார்க்கண்டில் இரண்டாம் கட்டமாக 38 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. அதேபோல 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.