LIVE-UPDATES

Tamil Live Breaking News: தீபாவளிக்கு 14,016 சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் சிவசங்கர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். தவெகவின் புதுச்சேரி பொறுப்பாளர் சரவணன் நெஞ்சு வலியால் உயிரிழந்தார். விக்கிரவாண்டியில் தவெக மாநாட்டு பணியில் ஈடுபட்டிருந்தவர் நேற்று இரவு புதுச்சேரி வந்துள்ளார். இந்நிலையில், இன்று மாலை வீட்டில் இருந்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். பின்னர் அவர் மயக்கமான நிலையில் அரசு மருத்துவமனை கொண்டுவரப்பட்டபோது அவர் நெஞ்சுவலிவால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் ஊழியர்களுக்கு சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் அறிவிப்பு. டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.16,800 வரை போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியையொட்டி 28ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு 14,086 பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2092 பேருந்துகளுடன் 4,900 சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி. நான் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன். விசிக தலைவர் திருமாவளவன், அக்கட்சி சார்பாக போட்டியிட அருந்ததியினருக்கு இதுவரை வாய்ப்பு கொடுத்திருக்கிறாரா? என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி. ”என்னை அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் தவெக மாநாட்டில் ஒரு வாக்காளராக பங்கேற்பேன்” என விஷால் பேட்டி. விஜயின் செயல்பாட்டை பார்க்க வேண்டியுள்ளது. தவெகவில் இணைவது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. 2026 தேர்தலில் நான் வேட்பாளராக இருக்கவும் வாய்ப்புள்ளது என சென்னையில் நடிகர் விஷால் பேட்டி வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கு நாளை மறுநாள் புயலாகவும் வலுப்பெறலாம் என வானிலை மையம் கணித்துள்ளது. இதையடுத்து ஒடிசா – மேற்கு வங்கத்தில் அக்.24 காலையில் கரையைக் கடக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. விரிவாக படிக்க: இந்த லிங்கை கிளிக் செய்யவும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை சாரல் மழை பெய்தது. நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கோயம்பேடு, மதுரவாயல், வானகரம், தியாகராய நகர், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.