ஒவ்வொரு ஆண்டும், வித்தியாசமான சாதனைகளை செய்து வரும் தனிநபர்கள், குழுக்கள், விலங்குகள், மற்ற பொருட்கள் என தனித்துவம் வாய்ந்த அனைத்தையும் அங்கீகரிக்கும் கின்னஸ் அமைப்பு உலக சாதனை பட்டியலில் சேர்க்கிறது. அந்த வகையில், 2024-ல் கின்னஸ் பட்டியலில் இடம்பிடித்த சில முக்கிய சாதனைகளை இங்கே பார்க்கலாம். 2024 ஆம் ஆண்டு உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் திறன்களை வெளிப்படுத்தும் சிறந்த சாதனைகள் கின்னஸ் உலக சாதனைகளில் இடம்பிடித்துள்ளது. 2024-ஆம் ஆண்டின் கின்னஸ் உலக சாதனைகளுக்கான கருப்பொருள், மனித படைப்பாற்றல் மற்றும் நெகிழ்சித்தன்மையை தூண்டும் மற்ற சாதனைகளை முறியடிக்கும் சாதனைகளுடன், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் முக்கிய நோக்கமாக கொண்டிருந்தது. அத்தகைய, 2024 சாதனை பட்டியலில் இடம்பிடித்த குறிப்பிடத்தக்க பதிவுகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. உயிருள்ள நபரின் மிக நீளமான முடி உக்ரைனைச் சேர்ந்த அலியா நசிரோவா, உயிருடன் இருப்பவர்களில் உலகின் மிக நீளமான முடி கொண்ட நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இவரது முடியின் நீளம் 257.33 செ.மீ. என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஸ்லோவாக்கியாவில் வசிக்கும் அலியா, இதுவரை சரியான ஹேர்கட் எதுவும் செய்யவில்லை, வாரத்திற்கு ஒருமுறை கூந்தலைப் பராமரிக்கிறார், முடியை கழுவுவதற்காக மட்டும் வாரத்தில் ஒருமுறை பல மணிநேரத்தை செலவிடுகிறார். மிக நீண்ட நேரம் வயிற்றுக்கு பயிற்சி (பெண்) கனடாவைச் சேர்ந்த வயதான பெண்மணியான டோனாஜீன் வைல்ட் தொடர்ந்து 4 மணி நேரம் 30 நிமிடங்களுக்கு தசைகளை வலுப்படுத்தும் முக்கிய பயிற்சியில் ஈடுபட்டு சாதனை படைத்துள்ளார். இந்த சிக்கலான பயிற்சியில் அவரது விடாமுயற்சி அங்குள்ள பலரை ஊக்கப்படுத்தியுள்ளது. கனமான புளூபெர்ரி ஆஸ்திரேலியாவில் கோஸ்டா குழுமத்தால் வளர்க்கப்பட்ட 20.4 கிராம் எடையுள்ள புளூபெர்ரி, உலகின் மிகவும் கனமான புளூபெர்ரி என உறுதிப்படுத்தப்பட்டது. இந்த புளுபெர்ரி சராசரி காட்டு புளூபெர்ரியை விட கிட்டத்தட்ட 70 மடங்கு கனமானது மற்றும் இது வளர ஒரு வருடம் எடுத்துக்கொண்டது. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பல உறுப்புகளை இழந்த நபர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த, முதல் பல உடல் உறுப்புகளை இழந்த நபராக இத்தாலியைச் சேர்ந்த ஆண்ட்ரியா லான்ஃப்ரி இடம்பிடித்துள்ளார். லான்ஃப்ரி ஒரு பயங்கரமான நோயின் காரணமாக, கையில் ஏழு விரல்களையும், முழங்காலுக்கு கீழே இரண்டு கால்களையும் இழந்துள்ளார். இது நம்பமுடியாத உறுதியான செயலாகவும், செங்குத்தான பனி மற்றும் பாறையின் மீது மனிதன் நிகழ்த்திய தனித்துவமான வெற்றியாகவும் கருதப்படுகிறது. சுற்றளவில் மிகப்பெரிய நாக்கு 17 செமீ அல்லது 6.69 அங்குலம் என சுற்றளவில் மிகப்பெரிய நாக்கை கொண்ட நபராக பெல்ஜியத்தைச் சேர்ந்த சாச்சா ஃபைனர் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். அதே சமயம், 13.25 செமீ அல்லது 5.21 அங்குலத்துடன் மிகப்பெரிய நாக்கை கொண்ட பெண்மணியாக அமெரிக்காவைச் சேர்ந்த ஜென்னி டுவாண்டர் சாதனை படைத்துள்ளார். இருவரும், பொதுமக்களை ஆச்சரியப்படுத்தும் அசாதாரண உடல் திறன்களை வெளிப்படுத்தியுள்ளனர். மிக உயரமான நாய் கிரேட் டேனின், அயோவா நாய் இனமான கெவின் மிக உயரமான நாய் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த பட்டத்தை பெற்ற சிறிது நேரத்திலேயே அந்த நாய் இறந்தும் போனது. கெவின் 0.97 மீ (3 அடி 2 அங்குலம்) உயரமான ஆண் நாயாக இருந்தது. அது ஒரு “மென்மையான ராட்சதன்” என்று அதன் நினைவை பகிர்ந்த அவரது உரிமையாளர் விவரித்துள்ளார். விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மிகப்பெரிய காட்சி அயோத்தியில் 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற தீபோத்சவ் விழாவில், 2.5 மில்லியனுக்கும் அதிகமான தீபங்கள் ஏற்றி, அதிக எண்ணிக்கையிலான எண்ணெய் விளக்குகளை ஏற்றி புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. மிகப்பெரிய இடைவெளி பயிற்சி வகுப்பு உலகளவில் பல இடங்களைச் சேர்ந்த 4,916 பங்கேற்பாளர்களுடன், ஹெர்பாலைஃப் மிகப்பெரிய அதி-தீவிர இடைவெளி பயிற்சி வகுப்பை நடத்தி புதிய சாதனையை படைத்தது. None
Popular Tags:
Share This Post:
இத்தாலியில் வெறும் 260 ரூபாய்க்கு விற்கப்படும் வீடுகள்; ஏன் தெரியுமா?
- by Sarkai Info
- December 20, 2024
இத்தாலியில் வெறும் 260 ரூபாய்க்கு விற்கப்படும் வீடுகள்; ஏன் தெரியுமா?
December 20, 20242024-ல் தலைசிறந்த கின்னஸ் உலக சாதனைகள் பட்டியலில் இடம்பிடித்த சிலமணி நேரத்திலேயே இறந்த நாய்!
December 20, 2024What’s New
Spotlight
மீண்டும் வெங்கட் பிரபுவுடன் AK 64 படத்தில் இணையும் அஜித்?
- by Sarkai Info
- December 20, 2024
Today’s Hot
Featured News
Latest From This Week
Tamil Live Breaking News: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
LIVE-UPDATES
- by Sarkai Info
- October 30, 2024
TVK Maanadu Live Udpates : அரை மணி நேரத்தில் மாநாட்டு மேடைக்கு வரும் விஜய்
NEWS
- by Sarkai Info
- October 27, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.