LIVE-UPDATES

இரண்டே வருடத்தில் 2.5 லட்சம் யூனிட்கள் விற்பனை.. புதிய மைல்கல்லை எட்டிய மாருதி கிராண்ட் விட்டாரா!

இந்தியாவில் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மக்களால் அதிக அளவில் விரும்பி வாங்கப்படுகிறது. அதன் விற்பனை இப்போது மிகப்பெரிய எண்ணிக்கையை எட்டியுள்ளது. செப்டம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நிறுவனம் தற்போது வரை 2.5 லட்சம் யூனிட்களை விற்பனை செய்து மைல்கல்லை எட்டியுள்ளது. மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா எஸ்யூவி மீது பண்டிகைக் காலம் முடிந்த பிறகும் கூடுதல் தள்ளுபடியை வழங்கியுள்ளது. கிராண்ட் விட்டாரா இன்று இந்தியர்களின் விருப்பமான நடுத்தர அளவிலான எஸ்யூவிகளில் ஒன்றாகும். மாருதி கிராண்ட் விட்டாரா அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, நவம்பர் 2024 வரை இந்த எஸ்யூவியின் மொத்த விற்பனை 2.5 லட்சமாக இருந்தது. மேற்கூறிய மாதத்தில் சுமார் 10,148 எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முன்னதாக கிராண்டு விட்டாரா கடந்த ஜூலை மாதம் 2 லட்சம் யூனிட்டுகள் என்ற விற்பனை மைல்கல்லை எட்டியது. அதாவது 2 லட்சம் யூனிட்டுகள் விற்பனயாக 22 மாதங்கள் எடுத்துக் கொண்டது. அதேநேரம் ஹூண்டாய் கிரெட்டாவோ 25 மாதங்களில் 2 லட்சம் யூனிட்டுகள் விற்பனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிராண்டு விட்டாரா வெளியான முதல் 12 மாதங்களிலேயே 1 லட்சம் யூனிட்டுகள் என்ற விற்பனை மைல்கல்லை எட்டியது. அடுத்த 1 லட்சம் யூனிட்டுகளுக்கு 10 மாதங்கள் எடுத்துக் கொண்ட நிலையில், தற்போது நான்கே மாதங்களில் அடுத்த 50,000 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. கிராண்ட் விட்டாரா மாடல்கள்: மாருதி கிராண்ட் விட்டாராவை பிரபலமாக்குவது அதன் ஹைபிரிட் பவர்டிரெய்ன் ஆகும். கிராண்ட் விட்டாரா இன்டலிஜென்ட் எலக்ட்ரிக் ஹைப்ரிட் (IEH) மற்றும் ஸ்மார்ட் ஹைப்ரிட் ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது. ஸ்ட்ராங் ஹைப்ரிட் அல்லது IEH ஆனது ஸெட்டா பிளஸ் அல்லது ஆல்ஃபா பிளஸ் வகைகளில் வழங்கப்படுகிறது. 1490சிசி பெட்ரோல் எஞ்சின் ஆனது 5500 rpm-இல் அதிகபட்சமாக 92.45 PS பவரை உற்பத்தி செய்கிறது. இந்த SUV இல் வழங்கப்படும் அதிகபட்ச டார்க் 4400-4800 இல் 122 Nm ஆகும். டிரைவ் டைப் 2WD ஆக இருக்கும் போது டிரான்ஸ்மிஷன் e-CVT ஆகும். பேட்டரி மூலம் வழங்கப்படும் அதிகபட்ச பவர் 3995 rpm இல் 59KW ஆகும், அதிகபட்ச டார்க் 141 Nm ஆகும். மொத்த அமைப்பால் உருவாக்கப்படும் அதிகபட்ச பவர் 115.56 PS (85kW) ஆகும். ஸ்மார்ட் ஹைப்ரிட் ஆனது 1462cc பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது 103.06 PS@6000rpm அதிகபட்ச பவரை உருவாக்குகிறது, அதே நேரத்தில் 136.8 PS@4400rpm பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. ஸ்மார்ட் ஹைப்ரிட் அல்லது மைல்டு ஹைப்ரிட் ஆனது சிக்மா, டெல்டா, ஸெட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய நான்கு வகைகளில் கிடைக்கிறது. டிரான்ஸ்மிஷன் பொறுத்தரையில், 5 ஸ்பீட் மேனுவல் அல்லது 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியார்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கிராண்ட் விட்டாராவின் CNG வேரியண்ட் ஆனது மிட்-ஸ்பெக் டெல்டா மற்றும் ஸெட்டா டிரிம்களில் கிடைக்கிறது. இந்த எஸ்யூவியில் 1.5 லிட்டர் கே15 எஞ்சினுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. CNG மோட்-இல் அதிகபட்சமாக 88hp பவரையும், 121.5Nm பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில், எஸ்யூவியின் பெட்ரோல் மோட்-இல் 103hp பவரையும் மற்றும் 136Nm பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.