NEWS

TVK Maanadu Live Udpates : அரை மணி நேரத்தில் மாநாட்டு மேடைக்கு வரும் விஜய்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின்முதல் மாநாடு இன்று மாலை நடைபெறவுள்ளது. விஜய் பங்கேற்கும் முதல் அரசியல் மாநாட்டில் பங்கேற்க லட்ச கணக்கான தொண்டர்கள் விக்கிரவாண்டியில் குவிந்து வருகின்றனர். தவெக நாட்டில் உடல்நிலை பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பத்து பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் காவலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். தற்போது 2 பெண்கள் உள்பட 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தவெக மாநாட்டு மேடைக்கு எந்த நேரத்திலும் விஜய் வர வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே இந்த மாநாடு தொடங்க முடிவு செய்துள்ளதால் விரைவில் வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ”மதுரை தேமுதிக முதல் மாநாடு 150 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5 லட்சம் சேர் போடப்பட்டு நடத்தப்பட்டது. உட்கார இடம் இல்லாமல் மாநாட்டு பந்தலுக்கு வெளியே லட்சோப லட்ச தொண்டர்கள் குவிந்தனர்! மொத்தம் 25லட்சம் பேர் கலந்து கொண்டனர்!” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு! மதுரை தேமுதிக முதல் மாநாடு 150 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5லட்சர் சேர் போடப்பட்டு நடத்தப்பட்டது! உட்கார இடம் இல்லாமல் மாநாட்டு பந்தலுக்கு வெளியே லட்சோப லட்ச தொண்டர்கள் குவிந்தனர்! மொத்தம் 25லட்சம் பேர் கலந்து கொண்டனர்! உலக சாதனை… pic.twitter.com/DLfRmzS8hO தவெக மாநாடு நடைபெறும் நிலையில், விழுப்புரம் புறவழிச் சாலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் வாகனங்களை தேசிய நெடுஞ்சாலையிலேயே விட்டுவிட்டு சுங்கச்சாவடியில் இருந்து மாநாட்டு திடலை நோக்கி நடந்தே செல்கின்றனர். தவெக மாநாடு 4 மணிக்கு தொடங்கப்படும் என கூறப்பட்ட நிலையில், மாநாடு பந்தல் தற்போதே 90% வரை நிரம்பியுள்ளது. இதனால் சுமார் 1:30 மணி நேரத்திற்கு முன்பாகவே மாநாடு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக மாநாடு தொடங்கவுள்ள நிலையில், விஜய் நேற்றே வி.சாலைக்கு வந்து மாநாடு நடைபெறும் இடத்தில் ஆய்வு நடத்தினார். இந்த நிலையில், இன்று மீண்டும் விஜய் மாநாடு நடைபெறும் இடத்தில் ஆய்வு. மேலும் மாநாடு குறித்து நிர்வாகிகளிடமும் ஆலோசனை செய்து வருகிறார். தவெக மாநாட்டில், இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் மயக்கமடைந்த நிலையில், அங்குள்ள தொண்டர்களுக்கு சிற்றுண்டி மற்றும் ஸ்நாக்ஸ் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ளவர்களுக்கு தண்ணீர் கிடைக்காத நிலையில், தண்ணீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவெக மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெறும் நிலையில், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை ஸ்தம்பித்து நிற்கும் நிலை உள்ளது. இதனால் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை உள்ளது. தவெக மாநாட்டில் பங்கேற்க வந்தவர்களில் வெயிலின் தக்கத்தால் 80க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்துள்ளனர். மயக்கம் அடைந்தவர்களுக்கு மாநாட்டு திடலில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விக்கிரவாண்டியில் விஜயின் தவெக முதல் அரசியில் மாநாடு இன்று நடைபெற உள்ள நிலையில் தேமுதிக பொதுச்செயாலளர் பிரேமலதா எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் இந்திய அரசியல் வரலாற்றில் 25 லட்சம் பேர் கலந்து கொண்ட ஒரே மாநாடு தேமுதிகவின் முதல் மாநாடு என்று பதிவிட்டுள்ளார். இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு! மதுரை தேமுதிக முதல் மாநாடு 150 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5லட்சர் சேர் போடப்பட்டு நடத்தப்பட்டது! உட்கார இடம் இல்லாமல் மாநாட்டு பந்தலுக்கு வெளியே லட்சோப லட்ச தொண்டர்கள் குவிந்தனர்! மொத்தம் 25லட்சம் பேர் கலந்து கொண்டனர்! உலக சாதனை… pic.twitter.com/DLfRmzS8hO #JUSTIN தவெக மாநில மாநாட்டின் கழுகுப் பார்வை காட்சிகள் #TVK #VIjay #Vikkiravandi | pic.twitter.com/IeZA41atut None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.