செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். தமிழ் செய்திகள் / Breaking and Live Updates / Tamil Live Breaking News: சென்னையில் இன்று மின்தடை அறிவிப்பு - எந்தெந்த ஏரியாக்கள்? - விவரம் இதோ! AUTO REFRESH OFF ON Tamil Live Breaking News: சென்னையில் இன்று மின்தடை அறிவிப்பு - எந்தெந்த ஏரியாக்கள்? - விவரம் இதோ! Tamil Live Breaking News: உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகளை துல்லியமாகவும், துரிதமாகவும் தெரிந்து கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள். 1-MIN READ Published By: Malaiarasu M Tamil Last Updated : October 25, 2024, 9:33 am IST Tamil Nadu செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். படிக்கவும்… புதிய நிலை 0 new update October 25, 2024, 7:35 am IST Tamil Live Breaking News: சென்னையில் இன்று மின்தடை அறிவிப்பு! சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, வாலாஜா ரோடு, திருவல்லிக் கேணி நெடுஞ்சாலை, எல்லிஸ் ரோடு, எல்லிஸ் புரம், அண்ணாசாமி தெரு, தயார்சாகிப் தெரு, மின்தடை பங்காரு நாய்கன் தெரு, பாலமுத்து தெரு, சின்னதம்பி தெரு, முக்தர்னிஷா பேகம் தெரு, அப்பாவு தெரு, உன்னிஸ் அலி தெரு, மேயர் சிட்டிபாபு தெரு, குலாம் தெரு, அவுலியா சாகிப் தெரு, தவுலத்கான் தெரு,வெங்கடாசலம் தெரு, நாராயன நாய்க்கன் தெரு, நாகப்பன் தெரு, கித்தாபத்தன் பகதூர் தெரு, பாபர்கான் தெரு, வல்லப அக்ரகாரம் தெரு, மசூதி தெரு, லாக் நகர், கலைவாணர் அரங்கம், பொதுப்பணித் துறை, சென்னை பல்கலைக்கழகம், காமராஜர் ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது . October 25, 2024, 9:33 am IST Tamil Live Breaking News: திருப்பதி: ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! ஜாபர் சாதிக் கைது விவகாரத்தை தொடர்புபடுத்தி திருப்பதியில் ஹோட்டல்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து ஹோட்டல்களில் மோப்ப நாய் உதவியுடன் காவல்துறை தீவிர சோதனை நடத்தி வருகிறது. வெடிகுண்டு மிரட்டலால் ஹோட்டல் அறைகளில் தங்கியிருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். October 25, 2024, 9:32 am IST Tamil Live Breaking News: தவெக மாநாட்டில் பட்டாசு வெடிக்கத் தடை! வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) நடக்கும் விஜயின் தவெக மாநாட்டில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை உத்தரவை அடுத்து பட்டாசு வெடிக்கக் கூடாது என்று தொண்டர்களுக்கு தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளது. விளம்பரம் October 25, 2024, 7:08 am IST Tamil Live Breaking News: இரண்டு விமானங்களும் பாதுகாப்பாக தரையிறக்கம்! மோசமான வானிலை காரணமாக மதுரை விமான நிலையத்தில் தரையிறக்க முடியாமல் வெகு நேரமாக வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்த 2 விமானங்களும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து மதுரை வந்த 2 இண்டிகோ விமானங்கள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. இரண்டு விமானங்களும் சுமார் ஒரு மணிநேரமாக வானில் வட்டமடித்தது. October 25, 2024, 7:07 am IST Tamil Live Breaking News: டிக்கெட் எடுப்பதில் தகராறு - நடத்துநர் உயிரிழப்பு! சென்னை அண்ணா ஆர்ச் அருகே அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்கும்போது நடத்துநருக்கும், போதையில் இருந்த பயணி கோவிந்தனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கைகலப்பாகி கீழே விழுந்த நடத்துநர் ஜெகன் உயிரிழந்தார். பயணியை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்திவருகின்றனர். எம்.கே.பி நகர் முதல் கோயம்பேடு செல்லும் 46G பேருந்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. நடத்துநருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். October 25, 2024, 7:01 am IST Tamil Live Breaking News: வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் ED ரெய்டு நிறைவு! அதிமுக எம்.எல்.ஏ வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை இன்று நள்ளிரவு 1.30 மணிக்கு நிறைவு பெற்றது. சோதனையின் முடிவில் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விளம்பரம் First Published : October 25, 2024, 7:00 am IST None
Popular Tags:
Share This Post:
விநாயகர் சிலையில் தும்பிக்கை எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும் தெரியுமா?
- by Sarkai Info
- October 29, 2024
விளையாட்டு வீரர்கள் பபுள் கம் மெல்வது ஏன்? இப்படி ஒரு காரணம் இருக்கிறதா?
- by Sarkai Info
- October 29, 2024
What’s New
Spotlight
Today’s Hot
கேரள முதல்வர் சென்ற கார் திடீர் விபத்து - அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சி
- By Sarkai Info
- October 29, 2024
Featured News
தவெக கொடிக்குள் இத்தனை அர்த்தங்களா..? விளக்கமாய் சொன்ன விஜய்!
- By Sarkai Info
- October 28, 2024
Latest From This Week
புதுச்சேரி பாஜக தலைவருடன் ஆனந்த் நெருக்கம்? - புயலை கிளப்பிய சபாநாயகர் அப்பாவு!
NEWS
- by Sarkai Info
- October 28, 2024
Subscribe To Our Newsletter
No spam, notifications only about new products, updates.