LIVE-UPDATES

Tamil Live Breaking News: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். தமிழ் செய்திகள் / Breaking and Live Updates / Tamil Live Breaking News: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..! AUTO REFRESH OFF ON Tamil Live Breaking News: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..! Tamil Live Breaking News: உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகளை துல்லியமாகவும், துரிதமாகவும் தெரிந்து கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள். 1-MIN READ Published By: Malaiarasu M Tamil Last Updated : October 30, 2024, 12:20 pm IST Tamil Nadu செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். படிக்கவும்… புதிய நிலை 0 new update October 30, 2024, 8:15 am IST Tamil Live Breaking News: நியூஸ்18 தமிழ்நாடு நேரலை October 30, 2024, 12:20 pm IST Tamil Live Breaking News: தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு... இன்று மாலை நான்கு மணி வரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், சென்னை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், திருவாரூர் ஆகிய 14 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். மாலை 4 மணிவரை மழைக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. October 30, 2024, 12:01 pm IST Tamil Live Breaking News: பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமி மரியாதை! தேவர் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார். விளம்பரம் October 30, 2024, 11:07 am IST Tamil Live Breaking News: கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன்! ரசிகரை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் தர்ஷனுக்கு 6 மாதங்கள் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. October 30, 2024, 11:01 am IST Tamil Live Breaking News: 2,877 போக்குவரத்துக் கழக பணியிடங்களை நிரப்ப உத்தரவு! போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 2,877 பணியிடங்களை நிரப்பத் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்ததுள்ளது. அதன்படி, ஓட்டுநர், நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் 2,340 டிசிசி பணியிடங்களை நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 537 தொழில்நுட்ப பணியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. October 30, 2024, 10:19 am IST Tamil Live Breaking News: பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்! செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பிற்பகல் 1 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. விளம்பரம் October 30, 2024, 10:17 am IST Tamil Live Breaking News: தேவர் குருபூஜை: பசும்பொன்னில் முதலமைச்சர் மரியாதை! தேவர் குருபூஜையை முன்னிட்டு கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர். October 30, 2024, 8:42 am IST Tamil Live Breaking News: மருது பாண்டியர் சகோதரர்கள் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை! மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர் சகோதரர்கள் சிலைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். October 30, 2024, 8:14 am IST Tamil Live Breaking News: முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை! முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி மதுரை, கோரிப்பாளையத்தில், பசும்பொன் முத்துராலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். மேலும், திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். விளம்பரம் October 30, 2024, 7:35 am IST Tamil Live Breaking News: முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை: 10,000 போலீசார் பாதுகாப்பு! “முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையை ஒட்டி 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்க சிசிடிவி, ட்ரோன் மூலம் தீவிர கண்காணிப்பு நடந்து வருகிறது என்று பசும்பொன்னில் ஆய்வு செய்த தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். October 30, 2024, 6:56 am IST Tamil Live Breaking News: தாம்பரம் - மானாமதுரை இடையே இன்று சிறப்பு ரயில் தீபாவளியையொட்டி சென்னை தாம்பரத்தில் இருந்து மானாமதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு ரயில் புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. October 30, 2024, 6:49 am IST Tamil Live Breaking News: சென்னையில் இருந்து நேற்று 2.31 லட்சம் பேர் பயணம்! தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து நேற்று (அக்.29) 2.31 லட்சம் பேர் அரசுப் பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து 4,059 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. விளம்பரம் First Published : October 30, 2024, 6:48 am IST None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.