LIVE-UPDATES

Tamil Live Breaking News : காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் குறைந்தது - இந்திய வானிலை மையம்!

Tamil Nadu Rain Update | செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ட்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 22 மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருப்பட்டூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநில அவசரகால கட்டணமில்லா தொலைபேசி எண் 1070 Whatsapp 94458 69848 மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள்: நாகப்பட்டினம் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 1800-233-4233 Whatsapp 84386 69800 மயிலாடுதுறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04364-222588 திருவாரூர் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 Whatsapp 94885 47941 கடலூர் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, Whatsapp 94899 30520 பொது மக்கள் TN Alert செயலி மூலமாகவும் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்று காலை 0530 மணி நிலவரப்படி அதேபகுதியில் மையம் கொண்டுள்ளது. இது திருகோணமலைக்கு தென்-தென்கிழக்கே 340 கி.மீ ,நாகப்பட்டினத்திலிருந்து 630 கிமீ தெற்கே-தென்கிழக்கே, புதுச்சேரியிலிருந்து 750 கிமீ தெற்கே-தென்கிழக்கே, சென்னைக்கு தென்-தென்கிழக்கே 830 கி.மீ நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து 2 நாட்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை – தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் நெஞ்சு வலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சபரிமலை பம்பை நிலக்கல் ஆகிய இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் 11 சென்டிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனிடைய சபரிமலையில் நடைதிறக்கப்பட்டு 11 நாட்களில் 7.50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் ஒரு எஸ்.பி தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 13 மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு என தகவல் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல், காரைக்கால் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.