LIVE-UPDATES

Tamil Live Breaking News: அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். “போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கிட ஒன்றிணைவோம்” என்று கூறி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் இளைஞர்களுக்கு உங்கள் தந்தையாக ஒரு உருக்கமான வேண்டுகோள் என்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் திரை நட்சத்திரங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். #JUSTIN உங்கள் தந்தையாக ஒரு உருக்கமான வேண்டுகோள் - முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் விழிப்புணர்வு வீடியோ #MKStalin #SayNotoDrugs #AwarenessVideo | pic.twitter.com/7CAY6wg8fT #தன்னம்பிக்கை #Selfmotivation #DailyQuotes | pic.twitter.com/XDT4MoneI3 தமிழ் செய்திகள் / Breaking and Live Updates / Tamil Live Breaking News: அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி AUTO REFRESH OFF ON Tamil Live Breaking News: அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி Tamil Live Breaking News: உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகளை துல்லியமாகவும், துரிதமாகவும் தெரிந்து கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள். 1-MIN READ Published By: Malaiarasu M Tamil Last Updated : October 24, 2024, 7:22 pm IST Tamil Nadu செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். படிக்கவும்… புதிய நிலை 0 new update October 24, 2024, 7:21 pm IST Tamil Live Breaking News: அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி அமைச்சர் துரை முருகன் உடல்நலக்குறைவு காரணமாக வேலூரில் உள்ள நறுவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை செல்ல காட்பாடியில் வந்தே பாரத் ரயில் ஏற வந்த போது துரைமுருகனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். October 24, 2024, 12:10 pm IST Tamil Live Breaking News: உங்கள் தந்தையாக முதல்வர் ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள்! “போதை இல்லா தமிழ்நாட்டை உருவாக்கிட ஒன்றிணைவோம்” என்று கூறி விழிப்புணர்வு வீடியோ ஒன்றை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் இளைஞர்களுக்கு உங்கள் தந்தையாக ஒரு உருக்கமான வேண்டுகோள் என்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் திரை நட்சத்திரங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். #JUSTIN உங்கள் தந்தையாக ஒரு உருக்கமான வேண்டுகோள் - முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் விழிப்புணர்வு வீடியோ #MKStalin #SayNotoDrugs #AwarenessVideo | pic.twitter.com/7CAY6wg8fT — Tamil Nadu October 24, 2024 October 24, 2024, 12:02 pm IST Tamil Live Breaking News: தலைமைச் செயலகத்தில் திடீர் அதிர்வு! தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் அதிர்வு உணரப்பட்டதால் அரசு ஊழியர்கள் அச்சத்துடன் வெளியேறினர். திடீர் அதிர்வால் நாமக்கல் கவிஞர் மாளிகையின் முதல் தளத்தில் உள்ள அதிக சத்தத்துடன் டைல்ஸில் விரிசல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்கள் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ளன. விளம்பரம் October 24, 2024, 12:02 pm IST Tamil Live Breaking News: பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கும் அமைச்சர்! எம்ஜிஆர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்து வரும் நிலையில் தற்போது அமைச்சர் மா.சுப்பிரமணியனும் புறக்கணிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். புறக்கணிப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாங்கள் மக்களிடம் இருக்கிறோம் என்று தெரிவித்துளளார். October 24, 2024, 12:02 pm IST Tamil Live Breaking News: 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை! 9 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு அதாவது மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. October 24, 2024, 12:02 pm IST Tamil Live Breaking News: தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: சீமான் மீது திருச்சியில் வழக்குப்பதிவு! தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து அவமரியாதை செய்து வரும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் என்பவர், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், மணப்பாறை காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விளம்பரம் October 24, 2024, 12:02 pm IST Tamil Live Breaking News: வைத்திலிங்கத்துக்கு சொந்தமான இடங்களில் தொடரும் சோதனை! அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் குடும்பத்தினருக்கு சொந்தமான 6 இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஆட்சியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.27 கோடியை லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடக்கிறது. நேற்று தொடங்கிய சோதனை இன்றும் தொடர்ந்து வருகிறது. October 24, 2024, 12:02 pm IST Tamil Live Breaking News: திருச்சியில் தொடரும் ஐடி சோதனை! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான எம்ஐடி கல்வி நிறுவனங்களில் நேற்று முன்தினம் காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் முசிறியில் எம்ஐடி கல்வி நிறுவனங்களில் சோதனை நடக்கிறது. கோவையில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 2 குழுக்களாக பிரிந்து தொடர் சோதனை வருகின்றனர். இளங்கோவன், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார். October 24, 2024, 12:02 pm IST Tamil Live Breaking News: 12 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு! தமிழகத்தில் காலை 10 மணி வரை அடுத்து 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, வேலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், நாகை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கன்னியாகுமரியில் அடுத்து 3 மணிநேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் October 24, 2024, 12:02 pm IST Tamil Live Breaking News: இந்தியா - நியூசிலாந்து 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்! இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி புனேவில் இன்று காலை 9.30க்கு தொடங்குகிறது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு இந்தியா பதிலடி தருமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சுழற்பந்துவீச்சாளர்களுக்கு புனே மைதானம் சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. October 24, 2024, 12:02 pm IST Tamil Live Breaking News: அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்! தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் மதுரை, திண்டுக்கல், கரூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. October 24, 2024, 12:02 pm IST Tamil Live Breaking News: தன்னம்பிக்கை #தன்னம்பிக்கை #Selfmotivation #DailyQuotes | pic.twitter.com/XDT4MoneI3 — Tamil Nadu October 24, 2024 விளம்பரம் First Published : October 24, 2024, 7:09 am IST None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.