LIVE-UPDATES

இத்தாலியில் வெறும் 260 ரூபாய்க்கு விற்கப்படும் வீடுகள்; ஏன் தெரியுமா?

சமீப ஆண்டுகளாக, இத்தாலியின் பல நகரங்கள் மக்களால் கைவிடப்பட்ட வீடுகளை நம்பமுடியாத அளவிற்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றன. இது உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கிறது. 2019-ம் ஆண்டில், சம்பூகா டி சிசிலியா நகரமானது, பாழடைந்த வீடுகளை வெறும் 1 அமெரிக்க டாலரில் (சுமார் ரூ.85) ஏலத்தில் விற்தபோது பலரது கவனத்தைப் பெற்றது. 2021 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இந்த முயற்சி இன்னும் பிரபலம் அடைந்தது. நம்ப முடியாத வகையில் 2 அமெரிக்கா டாலர் (சுமார் ரூ.170) மற்றும் 3 அமெரிக்க டாலருக்கும் (சுமார் ரூ.255) வீடுகள் இந்நகரத்தில் ஏலம் போனது. அழகான இத்தாலிய வாழ்க்கை முறையால் ஈர்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளிடையே இது வெற்றி பெற ஆரம்பித்தது. மேலும் இத்தாலியின் பிற நகரங்களான சிசிலியில் உள்ள முசோமெலி மற்றும் காம்பானியாவில் உள்ள சுங்கோலி போன்றவையும் இதைப் பின்பற்ற தொடங்கின. சிசிலியில் அமைந்துள்ள பிவோனா நகரம், ஒரு டாலருக்கும் மேல் விலையில் பத்துக்கும் மேற்பட்ட கைவிடப்பட்ட சொத்துக்களில் ஒன்றை வாங்க விரும்பும் மக்களுக்கு வரி சலுகை வழங்கியது. இந்த முயற்சியின் முக்கிய குறிக்கோள் என்னவென்றால், சிறந்த வாய்ப்புகளைத் தேடி உள்ளூர்வாசிகள் நகரங்களுக்குச் சென்றதால் ஆள் அரவமின்றி கிடக்கும் கிராமப் பகுதிகளில் மீண்டும் மக்களை குடியமர்த்துவதே ஆகும். ஒரு டாலருக்கு வீடு வாங்கும் யோசனை நம்பமுடியாததாகத் தோன்றினாலும், பல சந்தர்ப்பங்களில் அது வெற்றிகரமானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் நிலவும் இந்த போக்கு பற்றி தெரிந்து கொள்ள ஐந்து முக்கியமான விஷயங்களை நாம் பார்க்க வேண்டும். அவை: இது ஒரு மோசடி அல்ல: ஆரம்பத்தில், பலருக்கு இந்த ஒப்பந்தம் குறித்து சந்தேகம் இருந்தது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா ஸ்டப்ஸ். இவரது நண்பர் ஒரு டாலருக்கு வீடு வாங்கியதைக் கேள்விப்பட்டபோது ஸ்டப்ஸிற்கு சந்தேகம் எழுந்தது. இருந்தபோதும் அவர் இங்கு இரண்டு சொத்துக்களை வாங்கினார். கட்டமைப்பு ரீதியாக நிலையான கட்டிடங்கள்: வீடுகள் பழையதாகவும், பழுதுபார்க்க வேண்டிய தேவையுடனும் இருந்தாலும், ​​அவை பொதுவாக “கட்டமைப்பு ரீதியாக நிலையானதாக” இருக்கிறது. சில வீடுகளில் முற்றங்கள் மற்றும் இரும்பு பால்கனிகள் உள்ளன. மேலும் பல இணைக்கப்பட்ட வீடுகள் உள்ளது. அவை பெரிய சொத்துகளாக விரிவாக்கப்படலாம். இதையும் படிங்க: Indian Palace: பக்கிங்ஹாம் அரண்மனையை விட நான்கு மடங்கு பெரியது.. இந்தியாவில் இப்படி ஓர் அரண்மனையா? ஏலம் எவ்வாறு செயல்படுகிறது: இந்த சொத்துக்கள் அதிக தொகை கேட்கு ஏலதாரருக்கு விற்கப்படுகின்றன. இதில் பங்கேற்க வேண்டுமென்றால், ஏலதாரர்கள் தோராயமாக 5,399 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.4.5 லட்சம்) டெபாசிட் செலுத்த வேண்டும். அவர்கள் ஏலத்தில் வென்றால், வைப்புத்தொகை கொள்முதல் விலையின் ஒரு பகுதியாக மாறும்; இல்லையெனில், வைப்புத்தொகை திரும்பப் பெறப்படும். புதுப்பித்தல் காலக்கெடு: இங்கு வீடு வாங்குபவர்கள் மூன்று ஆண்டுகளுக்குள் புதுப்பித்தலை முடிக்க வேண்டும் அல்லது டெபாசிட் பணத்தை இழக்கும் அபாயம் உள்ளது. உதாரணமாக, சிகாகோவைச் சேர்ந்த நிதி ஆலோசகர் மெரிட்டித், மூன்று ஆண்டுகளில் இரண்டு வீடுகளைப் புதுப்பிக்க ரூ.3.8 கோடி செலவிட்டார். உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஊக்கம்: இந்த சொத்துக்களின் விற்பனை உலகெங்கிலும் உள்ள வீடு வாங்குபவர்களை ஈர்த்துள்ளது. இதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்திற்கு சுமார் 21.8 மில்லியன் அமெரிக்க டாலர்களை கொண்டு வந்துள்ளது என்று சம்புகா டி சிசிலியாவின் மேயர் தெரிவிக்கிறார். இந்த முன்முயற்சி கைவிடப்பட்ட நகரங்களுக்கு புத்துயிர் அளிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், உலகின் மிக அழகான நாடுகளில் ஒன்றில் சொத்துக்களை வாங்குபவர்களுக்கு மலிவான வாய்ப்பையும் வழங்குகிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.