LIVE-UPDATES

Tamil Live Breaking News: வங்கக் கடலில் உருவாகும் புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இரு நாட்களில் புயலாக வலுப்பெறும்; வங்கக் கடலில் உருவாகும் புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை என வானிலை மையம் கருத்து. புயல் வடமேற்காக நகர்ந்து ஒடிசா – மேற்கு வங்கத்தில் அக்.24 காலையில் கரையைக் கடக்கும் எனவும் தகவல். டெல்டா மற்றும் உள்மாவட்டங்களில் இன்று முதல் நாளை காலை வரை மழைக்கு வாய்ப்பு என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார். அடுத்த 10 நாட்களுக்கு டெல்டா, கொங்கு மற்றும் உள்மாவட்டங்களில் கணிசமான அளவு மழைக்கு வாய்ப்பு என்றும், சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, மதுரை, சிவகங்கை, கொடைக்கானல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். வேலூர் அருகே கர்நாடகா அரசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 300 கிலோ குட்காவை பறிமுதல் செய்தது தமிழக காவல்துறை. மேலும் கர்நாடகா அரசு பேருந்தை பறிமுதல் செய்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் காவல்துறை விசாரணை. கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8.5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை – ஆற்காட்டில் 7 செ.மீ., மழையும், சென்னை – அடையாறில் – 6 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய மழை. சைதாப்பேட்டை, தியாகராய நகர், கிண்டி, ஆலந்தூர், கோயம்பேடு, மதுரவாயல், வானகரம், வடபழனி, கோடம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. தமிழ் செய்திகள் / Breaking and Live Updates / Tamil Live Breaking News: வங்கக் கடலில் உருவாகும் புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை AUTO REFRESH OFF ON Tamil Live Breaking News: வங்கக் கடலில் உருவாகும் புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை Tamil Live Breaking News: உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகளை துல்லியமாகவும், துரிதமாகவும் தெரிந்து கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள். 1-MIN READ Published By: Raj Kumar Last Updated : October 20, 2024, 1:59 pm IST Tamil Nadu செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். படிக்கவும்… புதிய நிலை 0 new update October 20, 2024, 8:28 am IST Tamil Live Breaking News: நியூஸ்18 தமிழ்நாடு நேரலை October 20, 2024, 1:59 pm IST Tamil Live Breaking News: பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு! தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகை அன்று (அக்.31) இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது. காலை 6 முதல் 7 மணி வரையிலும் மற்றும் இரவு 7-8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்த ஒலி, மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது. October 20, 2024, 1:08 pm IST Tamil Live Breaking News: வங்கக் கடலில் உருவாகும் புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இரு நாட்களில் புயலாக வலுப்பெறும்; வங்கக் கடலில் உருவாகும் புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை என வானிலை மையம் கருத்து. புயல் வடமேற்காக நகர்ந்து ஒடிசா – மேற்கு வங்கத்தில் அக்.24 காலையில் கரையைக் கடக்கும் எனவும் தகவல். விளம்பரம் October 20, 2024, 1:05 pm IST Tamil Live Breaking News: திருப்பதி: ரூ.500 விஜபி தரிசன டிக்கெட்டில் முறைகேடு திருப்பதியில் ரூ.500 விஐபி தரிசன டிக்கெட்டுகள் ஐந்தை ரூ.65,000க்கு கள்ளச்சந்தையில் விற்று முறைகேடு செய்ததாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆந்திர மேல் சபை துணைத் தலைவர் ஜாகியா கானம் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. October 20, 2024, 10:12 am IST Tamil Live Breaking News: அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை - வானிலை மையம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. October 20, 2024, 10:05 am IST Tamil Live Breaking News: டெல்டா, கொங்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு டெல்டா மற்றும் உள்மாவட்டங்களில் இன்று முதல் நாளை காலை வரை மழைக்கு வாய்ப்பு என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார். அடுத்த 10 நாட்களுக்கு டெல்டா, கொங்கு மற்றும் உள்மாவட்டங்களில் கணிசமான அளவு மழைக்கு வாய்ப்பு என்றும், சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, மதுரை, சிவகங்கை, கொடைக்கானல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். விளம்பரம் October 20, 2024, 10:02 am IST Tamil Live Breaking News: கலவரப்பேட்டை ரயில் விபத்து - மேலும் ஒரு பிரிவு சேர்ப்பு திருவள்ளூர் மாவட்டம் கலவரப்பேட்டை ரயில் விபத்து வழக்கில் இந்திய ரயில்வே சட்ட பிரிவு 150 (ரயில்வே பொருளை சேதப்படுத்துதல்) எனும் பிரிவு சேர்ப்பு. கிராசிங் பாயிண்ட் இயந்திரத்தில் இருந்த போல்டை கழட்டி இருக்கலாம் என்ற அடிப்படையில் கூடுதலாக பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. October 20, 2024, 8:31 am IST Tamil Live Breaking News: வேலூரில் 300 கிலோ குட்கா பறிமுதல் வேலூர் அருகே கர்நாடகா அரசு பேருந்தில் கடத்திவரப்பட்ட 300 கிலோ குட்காவை பறிமுதல் செய்தது தமிழக காவல்துறை. மேலும் கர்நாடகா அரசு பேருந்தை பறிமுதல் செய்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் காவல்துறை விசாரணை. October 20, 2024, 8:28 am IST Tamil Live Breaking News: கள்ளக்குறிச்சியில் 8.5 செ.மீ., மழை பதிவு கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8.5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டை – ஆற்காட்டில் 7 செ.மீ., மழையும், சென்னை – அடையாறில் – 6 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது. விளம்பரம் October 20, 2024, 8:28 am IST Tamil Live Breaking News: அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழை - வானிலை மையம் தமிழகத்தில் காலை 10 மணி வரை திருவள்ளூர், செங்கல்பட்டு, பெரம்பலூர், நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், அரியலூர், மதுரை, திண்டுக்கல், கரூர், தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. October 20, 2024, 8:28 am IST Tamil Live Breaking News: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய மழை. சைதாப்பேட்டை, தியாகராய நகர், கிண்டி, ஆலந்தூர், கோயம்பேடு, மதுரவாயல், வானகரம், வடபழனி, கோடம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. October 20, 2024, 8:28 am IST Tamil Live Breaking News : இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு காலை வணக்கம். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள். விளம்பரம் First Published : October 20, 2024, 6:58 am IST None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.