LIVE-UPDATES

Tamil Live Breaking News: 2026-ல் மைக் சின்னம் இல்லை - சீமான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். திருப்பதி லட்டு விவகாரத்தில் முதலமைச்சர் சந்திரபாபு கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், தேசிய அளவிலான அங்கீகாரம் வாங்கும் நிறுவனங்களிடமிருந்தே நெய் கொள்முதல் செய்யப்பட்டதாகவும் தனது ஆட்சிக்காலத்தில் டெண்டர் நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் ஆந்திரா மாநில முன்னாள் முதலமைச்சர் ஜகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். விரிவாக படிக்க: திருப்பதி லட்டு விவகாரம் : “முதலமைச்சர் சொல்வது கட்டுக்கதை” – ஜெகன்மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி! ஒரு மாநிலத்தில் பாதுகாப்பற்ற உணவுப்பொருளான ‘கூல் லீப்’ பிற மாநிலங்களில் எப்படி பாதுகாப்பானதாக இருக்கும்? கூல் லீப்பை நாடு முழுவதும் ஏன் தடை செய்யக்கூடாது என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 9 மாதங்களில் குட்கா விற்பனை செய்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக அரசு தரப்பு தெரிவித்த நிலையில், தெரிந்தே தவறு செய்பவர்கள் அதற்கான பலன்களை அனுபவிக்கட்டும் என நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். திருப்பதி லட்டுவில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா அறிக்கை கேட்டுள்ளார். மேலும் ஆந்திர அரசிடம் உள்ள விவரங்களை கொடுத்தால், FSSAI மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியருக்கான கல்வி உதவித் தொகை இரு மடங்காக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். மேலும் அவர்களின் கல்வி உதவித்தொகைக்காக 14 கோடியே 90 இலட்சத்து 52 ஆயிரம் ரூபாயை அனுமதித்தும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஆராய்ச்சி படிப்பில் ஈடுபடும் 50 மாணவர்களுக்கு முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தலா ஒரு லட்சம் வழங்கப்படும். #JUSTIN மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்காக உயர்வு #TNGov #Students | pic.twitter.com/KOh4ubY4VV “வரலாற்றை மாற்றிய சிந்துசமவெளி நாகரீகத்தை கண்டறிந்த ஜான் மார்ஷலுக்கு நன்றி. ஜான் மார்ஷலின் ஆய்வு முடிவுகள் வெளியாகி 100 ஆண்டுகள் ஆகிறது. சிந்துசமவெளி நாகரீகத்தை திராவிட நாகரீகத்துடன் தொடர்புப்படுத்தி காட்டியவர் ஜான் மார்ஷல். சிந்துசமவெளி ஆய்வின் மூலமாக திராவிடத் தொன்மையை உலகறிய செய்த ஜான் மார்ஷலுக்கு நன்றி” என்று முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். Exactly 100 years ago, on 20th September 1924, Sir #JohnMarshall announced the discovery of the #IndusValleyCivilisation , reshaping the history of the Indian subcontinent. I look back with gratitude and say, "Thank you, John Marshall." By taking right cognisance of the material… pic.twitter.com/G3SpbQvf1x None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.