LIVE-UPDATES

"நீங்கள்தான் பக்தர்களை மீட்க வேண்டும்" - திருப்பதி லட்டு விவகாரத்தில் ஜெகன் மோகன் பிரதமருக்கு கடிதம்

திருப்பதி கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் கடந்த ஜெகன் மோகன் ஆட்சியில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்தக் குற்றச்சாட்டு பின்பு குஜராத்தின் தேசிய பால்வள மேம்பாடு வாரியத்தின் கீழ் இயங்கும் கால்நடை மற்றும் உணவுப் பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையத்தின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில், திருப்பதி லட்டில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது. அதேசமயம், லட்டு தயாரிக்க நெய் அனுப்பிய தமிழ்நாட்டு நிறுவனத்தை திருப்பதி தேவஸ்தான போர்டு கருப்பு பட்டியலில் வைத்துள்ளது. மேலும், லட்டு விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், திருப்பதி லட்டின் புனிதத்தன்மை கெட்டுவிட்டதாகவும், அதற்குப் பிராயச்சித்தமாக 11 நாள்களுக்கு விரதம் இருக்கப் போவதாகவும் ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “வெங்கடாஜலபதியே எங்களை மன்னியுங்கள், கடந்த ஆட்சியாளர்களின் நடவடிக்கையால் புனித திருமலை லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் கொடிய அநீதிக்குப் பிராயச்சித்தமாக செப்டம்பர் 22 முதல் 11 நாள் விரதம் இருக்கப்போகிறேன். தர்மத்தை மீட்டெடுத்து, திருமலை வெங்கடேஸ்வர ஸ்வாமியின் புனிதத்தைக் காப்போம்” என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில், திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன், பிரதமர் மோடிக்கு 8 பக்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், திருப்பதி தேவஸ்தானம் ஒரு தன்னாட்சி அமைப்பு என்றும் அதன் விவகாரங்களில் ஒரு அளவிற்கு மேல் மாநில அரசு தலையிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையும் படியுங்கள் : வீட்டில் உள்ள பிரிட்ஜில் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட இளம்பெண் உடல்: பெங்களூருவை உலுக்கிய பகீர் சம்பவம்! மேலும், கோயிலுக்கான பொருட்களை இ-டெண்டர் முறையில் தேவஸ்தானம்தான் கொள்முதல் செய்கிறது. இந்த நிலையில், தனது ஆட்சியின் தோல்விகளை மறைத்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப லட்டு விவகாரத்தை சந்திரபாபு கையில் எடுத்துள்ளதாக ஜெகன் மோகன் குற்றஞ்சாட்டி உள்ளார். இது கோடிக்கணக்கான பக்தர்களின் மனதைப் புண்படுத்தி உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி என்ன செய்யப் போகிறார் என பக்தர்கள் எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் பிரதமர் மோடிதான் புண்பட்ட பக்தர்களின் மனதை மீட்டெடுக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.