LIVE-UPDATES

Tamil Live Breaking News: கோலாகலமாக தொடங்கிய திமுக முப்பெரும் விழா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். ஆசிய சாம்பியன்ஸ் டிராஃபி ஹாக்கி இறுதிப்போட்டியில் சீனாவை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய அணி. 5ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. இறுதிப்போட்டியில் 1 – 0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா. உச்சநீதிமன்றத்தின் அனுமதியின்றி கட்டடங்களை அரசுத்துறையினர் இடிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் நீதிபதிகள் கவாய், விஸ்வநாதன் உத்தரவு. பொது இடம், நடைபாதை, ரயில்வே தடம், மற்றும் நீர்வழிப்பாதை ஆகிய இடங்களில் உள்ள ஆக்கிரபிப்புகளை அகற்றுவதில் இந்த உத்தரவு பொருந்தாது எனவும் உச்சநீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. ராமநாதபுரம் தொண்டியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 3 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இலங்கை மீனவர்களை மண்டபம் முகாமிற்கு அழைத்து சென்றது இந்திய கடலோர காவல்படை. விசாரணையில், காற்றின் வேகம் காரணமாக திசை மாறி இந்திய பரப்புக்குள் வந்ததாக இலங்கை மீனவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு எல்லைக்குள் ‘நிபா வைரஸ்’ நோய் தொற்று அறிகுறிகளுடன் (காய்ச்சல், வலிப்பு, தலைவலி) சந்தேகத்திற்குறிய நோயாளிகளை கண்டறிந்து உடனடியாகப் புகாரளிக்க வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கேரளாவை ஒட்டிய நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ‘நிபா வைரஸ்’ பாதிப்புக்கான கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார் அரவிந்த் கெஜ்ரிவால். மேலும் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிஷி ஆட்சியமைக்க உரிமை கோரினார். தமிழ்நாட்டில் பெரியார் பெயரை உச்சரிக்காமல் அரசியல் நடத்த முடியாது என்பதை விஜய்யின் செயல் காட்டுகிறது. பாசிசத்தை எதிர்த்த பெரியார் பாதையில் விஜய் வருவது மகிழ்ச்சியே. மதவாதத்துக்குள் சிக்காமல் விஜய் கட்சியை நடத்த வேண்டும். விஜய்யின் செயல் திராவிட உணர்வாளர்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கருத்து. பெரியாரின் 146ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, பெரியார் திடலில் உள்ள அவரது திருவுறுவச்சிலைக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். திமுக முப்பெரும் விழா இன்று கொண்டாடப்படுவதையொட்டி முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், வெளியிட்டுள்ள பதிவில், ” “நான்தான் திராவிடன் என்று நவில்கையில் தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!” – எனப் பாவேந்தர் பாடிய உணர்ச்சி தமிழ்நிலமெங்கும் வீச, தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது! தமிழுக்கு ஒரு இன்னலென்றால் தடுத்து நிறுத்தத் தம்பிமார் படை உள்ளதென்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள உடன்பிறப்புகளானோம் நாம்! ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம்! இன்னும் ஆயிரமாண்டுகளுக்கான பாதையைச் செப்பனிடும் தொண்டியக்கம்! தமிழினத் தலைவர் கலைஞர் கட்டிக்காத்த இந்த இயக்கத்தில் பாடுபடும் அத்தனை பேருக்கும் இந்தத் தலைமைத் தொண்டனின் வாழ்த்துகள்! இன்று மாலை பவள விழா – முப்பெரும் விழாவில் உங்களைக் காணக் காத்திருக்கிறேன்.” என்று தெரிவித்து வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். “நான்தான் திராவிடன் என்று நவில்கையில் தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!” - எனப் பாவேந்தர் பாடிய உணர்ச்சி தமிழ்நிலமெங்கும் வீச, தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது! தமிழுக்கு ஒரு இன்னலென்றால் தடுத்து… pic.twitter.com/Gfowhvir7y None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.