LIVE-UPDATES

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்

சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்த பின்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதி வாரி கணக்கெடுப்பையும் எடுக்கவேண்டும் என்பது தான் திமுகவின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சட்டப்படியாக நிலைக்கக்கூடிய கணக்கெடுப்பு என்றால் அது ஒன்றிய சட்டமான மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின் கீழ் தான் மேற்கொள்ள வேண்டும். எனவேதான் மத்திய அரசு மேற்கொள்வது தான் முறையாக இருக்கும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார். மேலும், இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் சம உரிமையும், சம வாய்ப்பும் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய, சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் என கூறினார். மேலும், 2021ம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே தொடங்கவேண்டும் என்றும், அத்துடன் இம்முறை சாதிவாரியான கணக்கெடுப்பையும் இணைத்தே நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துவதாகவும் தீர்மானத்தின் மீது பேசினார். இதை தொடர்ந்து தீர்மானத்தில் பேசிய பிற கட்சி தலைவர்களும் முதல்வரின் தனிதீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்தரின் தீர்மானம் குறித்து பேசும் போது,பிகாரில் மாநில அரசு நடத்திய இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் தடை செய்ய காரணம் அங்கு கணக்கெடுப்பில் குளறுபடி , தவறு இருந்ததுதான்.எனவே தமிழ்நாடு அரசு எந்த குளறுபடியும் இன்றி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் தான் புள்ளி விவரங்களை தர முடியும். ஜாதி வாரி கணக்கெடுப்பு என்பது ஒன்றிய அரசு சென்சஸ் எடுக்கும்போது, சேர்ந்து எடுக்க வேண்டும். 2021ம் ஆண்டு சென்சஸ் இதுவரை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே அதை உடனடியாக எடுத்து, அதோடு ஜாதி வாரி கணக்கெடுப்பையும் எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினார். Also Read : அவசர பயணமாக டெல்லி சென்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி! நாம் எடுக்கும் போது, அதை ஓவர்ரைட் செய்யக்கூடிய அதிகாரம் சென்சஸ் Actக்கு உள்ளது. எனவே அப்படியான பிரச்சனை நீதிமன்றத்திற்கு சென்று விடக்கூடாது என்ற நோக்கத்தோடு தான் ஒன்றிய அரசை வலியுறுத்தி ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். எனவே சாதிவாரி கணக்கெடுப்பு சென்சஸ் அடிப்படையில் எடுத்தால்தான் செல்லும் என்று அவர் கூறினார். இறுதியாக பேசிய முதலமைச்சர் மு.ஸ்டாலின், அனைத்துக் கட்சி சட்டமன்ற தலைவர்களும் இந்த தீர்மானத்தை ஆதரித்து பேசிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார். தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளவாறு கல்வி பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் சம உரிமையும் சம வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு நிச்சயமாக எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். அனைவரும் இந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை விடுத்தார். இதை தொடர்ந்து முதலமைச்சரின் தனித்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஓரு மனதாக நிறைவேற்றப்பட்டது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.