LIVE-UPDATES

Tamil Live Breaking News : கொடி குறித்த புகார் : தமிழக வெற்றிக் கழகத்தின் முடிவு இதுதான்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு குற்றவாளியான சிவராமன் உயிரிழந்ததையடுத்து, அவரின் தந்தை அசோக்குமார் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் மாரடைப்பால் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பிரேத பரிசோதனை முடிந்து அவரது உடல் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வ உடற்கூறாய்வு அறிக்கை வெளியான பிறகு மரணம் குறித்த உண்மை காரணம் வெளியாகி, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேகதாது அணைக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரும் கர்நாடகத்தின் மனுவை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். 2019-ல் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் மீண்டும் கர்நாடகம் மனு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க 2018ஆம் ஆண்டில் மத்திய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்து. தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள், மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும்போது, குழந்தையை பராமரிக்க ஏதுவாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு கணவர் மற்றும் பெற்றோர் வசிக்கக்கூடிய பகுதிகளில் பணி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற பதக்கம் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில், பல்வேறு சந்தேகங்களுக்கு விடை அளிக்கக்கூடிய சிவராமன் தற்கொலை செய்து கொண்டது மக்களிடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது என்றும், உண்மை குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டு உயிரிழந்ததும், அவரது தந்தை வகனந்த்தில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்ததும் குறிப்பிடத்தக்கது. பாலியல் வழக்கில் கைதான சிவராமன் மருத்துவமனையில் உயிரிழந்துள்ள நிலையில், அவரது தந்தை அசோக்குமார் என்பவரும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியில் அசோக்குமார் இருசக்கர வாகனத்தில் தனியார் மண்டபம் வழியாக இரவு சென்று கொண்டிருந்தபோது, விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலியல் வழக்கில் மகன் உயிரிழந்த நிலையில் தந்தையும் விபத்தில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன் உயிரிழந்தார். காவல்துறை விசாரணைக்கு பயந்து கைதுக்கு முன்பே எலிமருந்து சாப்பிட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.