LIVE-UPDATES

Tamil Live Breaking News: ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து நலமுடன் உள்ளார் - வெளியான தகவல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். “ம‌ருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகோதரர் ரஜினிகாந்த் விரைவில் உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கின்றேன்.” என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். ம‌ருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கின்றேன். @rajinikanth wish you speedy recovery. (File Photo) pic.twitter.com/GdfS9YaJVu “ரஜினிகாந்த் விரைவாகவும் சீராகவும் குணமடைய உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன்.” என ஆளுநர் ரவி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். "திரு. ரஜினிகாந்த் அவர்கள் விரைவாகவும் சீராகவும் குணமடைய உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன்." - ஆளுநர் ரவி பிரபல இந்தி நடிகர் கோவிந்தா தவறுதலாக தன்னை தானே துப்பாக்கியால் சுட்ட நிலையில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிகாலை 4.45 மணிக்கு தனது சொந்த ரிவால்வரை எடுத்தபோது தவறுதலாக தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுள்ளார். கால் பகுதியில் அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். Actor and Shiv Sena leader Govinda has been taken to the nearest hospital after he was accidentally shot in the leg by his own revolver this morning, says a senior Mumbai Police official More details awaited. (file pic) pic.twitter.com/SBqnMcDgoA இதுதொடர்பாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அன்பு நண்பர் ரஜினிகாந்த் விரைவில் பூரண நலம் பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன் எனவும் அவர் விரைவில் முழு உற்சாகத்தோடும், ஆரோக்கியத்தோடும் தனது அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் பிரார்த்திக்கிறேன்.” எனவும் தெரிவித்துள்ளார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அன்பு நண்பர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன். அவர் விரைவில் முழு உற்சாகத்தோடும், ஆரோக்கியத்தோடும் தனது அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும்… இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி,கான்பூரில் 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதலில் ஆடிய வங்கதேச அணி, முதல் நாளன்று 107 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனை தொடர்ந்து 2 மற்றும் 3 ஆவது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், 4 ஆம் நாளான நேற்று, வங்கதேச அணி 288 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது. பின்னர், பேட்டிங் ஆடிய இந்திய அணி, அதிரடியாக விளையாடி 34 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் சேர்தது டிக்ளேர் செய்தது. இதனை தொடர்ந்து, தனது 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி, 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், கடைசி நாளான இன்று, வங்கதேசத்தை குறைந்த ஓவருக்குள் வீழ்த்துவது, அல்லது, எதிரணி நிர்ணயிக்கும் இலக்கை எட்டி, வெற்றி அடைய இந்தியா வியூகம் வகுத்துள்ளது. அதே சமயம், விக்கெட்களை பறிகொடுக்காமல், ஆட்டத்தை டிராவை நோக்கி நகர்த்தும் திட்டத்துடன் வங்கதேசம் களம் இறங்கும். எனவே, கடைசி நாளான இன்று ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. சென்னை-காரைக்குடி இடையே நாள்தோறும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று அதிகாலை 5.35 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்பட்ட ரயில், செட்டிநாடு ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, முன்பதிவு இல்லா பெட்டியின் அடியில், பிரேக் பைண்டிங் பகுதியில் தீப்பிடித்தது. புகை வருவதை அறிந்த பயணிகள் உடனடியாக, அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்தினர். உடனடியாக பயணிகள் தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு அலறியடித்துக் கொண்டு ரயிலில் இருந்து இறங்கினர். பயணிகள் உதவியுடன் டிக்கெட் பரிசோதகர் தீ அணைப்பான் கருவி மூலம் தீயை அணைத்தார். \முழுமையாக தீ அணைக்கப்பட்ட பிறகு, 55 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது. “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடி வயிற்றுப் பகுதியில் லேசான வீக்கம் இருப்பதால், பரிசோதனை எனத் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், கவலைப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்று அவரின் மனைவி விளக்கம் அளித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் திரு. @rajinikanth அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.