LIVE-UPDATES

Tamil Live Breaking News: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். கொடைக்கானல் வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை இன்றுடன் நிறைவடையும் நிலையில் மறு உத்தரவு வரும்வரை இ-பாஸ் முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலுக்கு வாகனங்களில் வருவோர் epass.tnega.org இணையதளம் மூலம் இ-பாஸ் பெறலாம் என திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார். அரசியல் காரணங்களுக்காக ஜெகன்மோகன் ரெட்டியை குறி வைத்து சந்திரபாபு நாயுடு சுமத்திய கலப்பட நெய் குற்றச்சாட்டு பொய்யானது. சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிச்சத்திற்கு வரும். கலப்பட நெய் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எவ்வளவு உயர்ந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என ஆந்திரா முன்னாள் அமைச்சர் ரோஜா கருத்து. சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மின்தடை பகுதிகள் பின்வருமாறு… சேலையூர்: ஏஎல்எஸ் நகர் பகுதி, ரமணா நகர், மாடம்பாக்கம் பிரதான சாலை, வடக்குப் பகுதி, வடக்கு மட, கிழக்கு மட & மேற்கு மட வீதிகள், மாணிக்கம் அவென்யூ, பத்மாவதி நகர் பகுதி, அகரம் பிரதான சாலைப் பகுதி, வேதாச்சலம் நகர், SR காலனி, IAF சாலை, ரிக்கி கார்டன், ஹரணி அபார்ட்மெண்ட் மற்றும் சுமேரி நகரம் ஆகிய பகுதிகள். ஜே.ஜே.நகர்: முகப்பேர் எரி திட்டம், கங்கையம்மன் நகர், முகப்பேர் கிழக்கு (1 முதல் 12 தொகுதிகள்), கலெக்டர் நகர், பாடிக்குப்பம், ரயில் நகர், கோல்டன் ஜார்ஜ் நகர், முகப்பேர் மேற்கு, க்ருச் சாலை, வேணுகோபால் தெரு, சீயோன் தெரு, பஜனை கோயில் தெரு. கும்மிடிப்பூண்டி சிப்காட்-III: GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன் நகர், பாலகிருஷ்ணாபுரம், SP பேட்டை, ஐயர் கண்டிகை, SR கண்டிகை, NR கண்டிகை, & GR கண்டிகை. மாத்தூர்: மாத்தூர் எம்எம்டிஏ (முழு பகுதி), பெரிய மாத்தூர், சின்ன மாத்தூர், ஆவின் குவார்ட்டர்ஸ், சிபிசிஎல் நகர், எம்சிஜி அவென்யூ, சின்ன சாமி நகர், காமராஜர் சாலை, காமராஜ் சாலை-மஞ்சம்பாக்கம் அனைத்து தெரு, அசிஸ் நகர் அனைத்து தெரு, அகர்சன் கல்லூரி சாலை, மேற்குத் தோட்டம், காத்தாக்குழி, திதிர் நகர், பாய் நகர், சங்கீதா நகர், சக்தி அம்மன் நகர், திருப்பதி நகர், ஜெயராஜ் நகர், குமரராஜன் நகர், சுபாஷ் நகர், பானு நகர், கேவிடி டவுன்ஷிப், சந்தோஷ் காலனி, லட்சுமி நகர், அன்னை நகர், ஜெயா நகர், பாயசம்பாக்கம், கருமாரி நகர், மூகாம்பிகை நகர் , கொசப்பூர் பகுதி, தீயப்பாக்கம் முழு, சென்ட்ரபாக்கம், கண்ணம்பாளையம் பகுதி, வடபெரும்பாக்கம் தொழில் பூங்கா, பார்வதிபுரம், ஸ்ரீனிவாசா மாடர்ன் டவுன் மற்றும் கன்னி அம்மன் நகர். அனகாபுதூர்: பம்மல் மெயின் ரோடு, கிரிகோரி தெரு, மசூரன் தெரு, தெய்வநாயகம் தெரு, பாலாஜிநகர் 1வது மற்றும் 2வது குறுக்குத் தெரு, பசும்பொன் நகர், பாலாஜி நகர் 30 அடி சாலை, பாலாஜி நகர் 12வது குறுக்குத் தெரு, திருநகர், லட்சுமி நகர், எல்.ஆர்.ராஜமாணிக்கம் சாலை, தவதாஸ் நகர், ராகவேந்திரா சாலை. எண்ணூர்: கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுக்குப்பம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர், சிவன் படை வீதி, வள்ளுவர் நகர், காமராஜ் நகர், எஸ்விஎம் நகர், விஓசி நகர், உலகநாதபுரம், முகத்துவார குப்பம், எண்ணூர் குப்பம், தாழங் குப்பம், பெரிய குப்பம், நெட்டுக்குப்பம். குப்பம் எர்ணாவூர் குப்பம், இடிபிஎஸ் குவார்ட்டர்ஸ், எர்ணாவூர், பாலாஜி நகர், மகாலட்சுமி நகர், ஜெய்ஹிந்த் நகர், முருகப்பா நகர், ராமநாதபுரம், லோதி நகர், சண்முகபுரம், சரஸ்வதி நகர், சக்தி கணபதி நகர், மதுரா நகர், சுப்ரமணிய நகர், பொன்னியம்மன் நகர். அதிக தொழிற்சாலைகள் மற்றும் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த தொழிற்சாலைகளில் 15.66% தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளன; ஒட்டுமொத்த தொழிலாளர்களில் சுமார் 1.85 கோடி தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளதாக மத்திய அரசின் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. ஆர்எஸ்எஸ் அணி வகுப்புக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம். அற்ப காரணங்களுக்காக அனுமதி மறுத்த அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுத்தால் என்ன? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பேரணி நடத்த அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ் மனு கொடுத்த நிலையில் ஒரு மாவட்டத்தில் பல இடங்களில் அணி வகுப்புக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் இருப்பதால் அனுமதி நிராகரிப்பு என காவல்துறை பதிலளித்தது. மழைநீர் வடிகால் பணியில் தமிழ்நாடு அரசு மெத்தனமாக இருக்கிறது. வடிகால் பணிகள் முடியாவிட்டால் சென்னை மீண்டும் தத்தளிக்கும் என சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். மேலும் சென்னையில் மழைநீர் வடிகாலில் மூழ்கி ஒருவர் பலியானதிற்கு ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்தார். சாட்சி விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அமலாக்கத்துறை வழக்கில் மீண்டும் அக்டோபர் 4 ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவு. நாளை முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையால் மதுரைக்கு வரும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் தகவலளித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்க முடியுமா? என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் பணி சுமை அதிகமாக உள்ளது; புதிய அமர்வை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல். நடப்பாண்டு பி.எட் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு முடிவடைந்த நிலையில் விண்ணப்பித்தவர்களின் தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது. நடப்பாண்டில் பிஎட் படிப்பில் தமிழகத்தில் 7 அரசு கல்லூரிகளில் உள்ள 900 இடங்கள் 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள 1,140 இடங்கள் என மொத்தம் 2,040 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் பதிவு செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி நிறைவடைந்தது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவும் டிமாண்ட் டிராப்ட் மூலமாகவும் செலுத்தினர். நடப்பாண்டு பி.எட் படிப்பிற்கு மொத்தம் 3,486 பேர் விண்ணப்பித்திருந்தனர் இவர்களில் 2187 பேர் மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர். பி.எட் படிப்பிற்கு விண்ணப்பித்த அவர்களின் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள் சேர்க்கை எண்ணிகை போன்ற விவரங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு அக்டோபர் 23ஆம் தேதி முதல் துவக்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது மக்களுக்கு பணியாற்றும் மாபெரும் வாய்ப்பை முதலமைச்சர் வழங்கியிருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி பேட்டியளித்த அவர், இவ்வாறு கூறினார். அதேபோல், தமிழ்நாடு அமைச்சரவையிலும் சமுக நீதி நிலைநாட்டப்பட்டிருப்பதாக அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையிலும் சமுக நீதி நிலைநாட்டப்பட்டிருப்பதற்கு தானே உதாரணமாக இருப்பதாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கோவி. செழியன் தெரிவித்துள்ளார். பட்டியலினத்தவரையும் பொறுப்பு வாய்ந்த துறை அமைச்சராக நியமித்திருப்பதே திராவிட மாடல் ஆட்சியின் சாதனை என்றும் அவர் தெரிவித்தார். None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.