LIVE-UPDATES

Tamil Live Breaking News: திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கைது? - மனைவி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். தமிழ் செய்திகள் / Breaking and Live Updates / Tamil Live Breaking News: துணை முதல்வர் அறிவிப்பில் ஏமாற்றம் இருக்காது - முதல்வர் ஸ்டாலின் பேட்டி! AUTO REFRESH OFF ON Tamil Live Breaking News: துணை முதல்வர் அறிவிப்பில் ஏமாற்றம் இருக்காது - முதல்வர் ஸ்டாலின் பேட்டி! Tamil Live Breaking News: உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகளை துல்லியமாகவும், துரிதமாகவும் தெரிந்து கொள்ள நியூஸ்18 தமிழுடன் இணைந்திருங்கள். 1-MIN READ Published By: Malaiarasu M Tamil Last Updated : September 24, 2024, 10:51 am IST Tamil Nadu செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். படிக்கவும்… புதிய நிலை 0 new update September 24, 2024, 10:51 am IST Tamil Live Breaking News: துணை முதல்வர் அறிவிப்பில் ஏமாற்றம் இருக்காது - முதல்வர் ஸ்டாலின் பேட்டி! தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “அமைச்சரவை மாற்றம், துணை முதலமைச்சர் தொடர்பாக ஏமாற்றம் இருக்காது. மாற்றம் இருக்கும்” என்று பதில் கொடுத்துள்ளார். இதன்மூலம் அமைச்சரவை மாற்றம் நடக்கப்போவது உறுதியாகியுள்ளது. September 24, 2024, 10:51 am IST Tamil Live Breaking News: மும்பை சித்தி விநாயகர் கோயில் லட்டில் எலிகள்! மும்பையில் சித்தி விநாயகர் கோயில் பிரசாத லட்டுகளுக்கு மத்தியில் எலிக்குஞ்சுகள் இருந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். லட்டு பாக்கெட்டுகள் எலிகள் கடித்த நிலையில் இருந்துள்ள புகைப்படமும் வெளியானது. பிரசாத லட்டுகளில் எலிகள் கிடந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. September 24, 2024, 10:51 am IST Tamil Live Breaking News: இதுவே கடைசி - ட்ரம்ப் திட்டவட்டம் “அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் போட்டியிடுவது இதுவே கடைசி முறை. ஒருவேளை தற்போது நடக்கும் போட்டியில் தோல்வி அடைந்தால் மீண்டும் நான் போட்டியிட மாட்டேன். ஆனால் அப்படி நடக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்தமுறை நிச்சயம் நான் வெல்வேன்” என்று குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 3வது முறையாக போட்டியிடும் ட்ரம்ப் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை சந்தித்துள்ளார். விளம்பரம் September 24, 2024, 10:51 am IST Tamil Live Breaking News: திமுக அரசை கண்டித்து சென்னையில் அதிமுக ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, அதிமுக மகளிர் அணியினர் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் அதிமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். September 24, 2024, 10:51 am IST Tamil Live Breaking News: திரைப்பட இயக்குநர் மோகன் ஜி கைது? - மனைவி தகவல் திரைப்பட இயக்குநர் மோகன் ஜியை போலீஸார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை காசிமேட்டில் உள்ள அவரது வீட்டில் இருந்தவரை போலீஸார் கைது செய்ததாகவும், என்ன வழக்கு என்ன காரணம் என்பதை போலீஸார் தெரிவிக்க மறுத்ததாகவும் அவரது மனைவி கூறியுள்ளார். September 24, 2024, 10:51 am IST Tamil Live Breaking News: தேனி: அதிமுக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு! தேனி மாவட்டம் சின்னமனூரில் அதிமுக நகர செயலாளர் பிச்சைக்கனி வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசியவர்கள் குறித்து சின்னமனூர் போலீசார் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். விளம்பரம் September 24, 2024, 10:51 am IST Tamil Live Breaking News: சென்னை, கன்னியாகுமரியில் என்.ஐ.ஏ சோதனை! சென்னை மற்றும் கன்னியாகுமரியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிஷாப் உத் தஹீரிர் என்ற பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில் சோதனை நடந்துவருகிறது. சென்னை வெட்டுவாங்கேணி பகுதியில் வசித்து வரும் முகமது ரியாஸ் என்பவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. September 24, 2024, 10:51 am IST Tamil Live Breaking News: ஹஜ் பயணம்: கால அவகாசம் நீடிப்பு! இஸ்லாமியர்கள் ஒவ்வோர் ஆண்டும் ஹஜ் புனித பயணம் செல்ல ஏதுவாக தமிழக அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுகிறது. 2025 ஹஜ் புனித பயணத்துக்கு செல்ல ஏதுவாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை செப்30 வரை நீடித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. September 24, 2024, 10:51 am IST Tamil Live Breaking News: போலி மருத்துவ சான்று விவகாரம் - சித்த மருத்துவ சங்க தலைவர் கைது! சித்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் சுப்பையா பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார். போலி மருத்துவ சான்று விவகாரத்தில் போலீஸார் கைது செய்தனர். போலி சான்று கும்பல்களுக்கு ஏஜென்ட் போல் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.திருச்சியில் கைது செய்யப்பட்ட சுப்பையா பாண்டியனை கடலூர் அழைத்துச் சென்ற விசாரிக்க திட்டமிட்டுள்ளது காவல்துறை. விளம்பரம் First Published : September 24, 2024, 6:58 am IST None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.