LIVE-UPDATES

நாளை 7வது மற்றும் இறுதி கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. முதல்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உள்பட, அருணாச்சல பிரதேசம், அசாம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 89 தொகுதிகளில் ஏப்ரல் 26ஆம் தேதியும், 94 தொகுதிகளில் மே 7 ஆம் தேதி மூன்றாம் கட்டமும், மே 13 ஆம் தேதி, 96 மக்களவைத் தொகுதிகளில் நான்காம் கட்டமாகவும் வாக்குகள் பதிவாகின 6 ஆவது கட்ட வாக்குப்பதிவின்போது, 57 மக்களவைத் தொகுதிகளில் 63 புள்ளி 37விழுக்காடு வாக்குகளும் பதிவாகின. இந்நிலையில் பிகார், இமாச்சல பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், மேற்குவங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 57 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 ஆவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது. இதனுடன் ஒடிசாவில் 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவும் நடைபெற இருக்கிறது. 7 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் குறிப்பாக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியும், இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கங்கனா ரனாவத்தும், பாட்னா சாஹிப் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்தும் 7 ஆம் கட்டத்தில் தேர்தலை சந்திக்க உள்ளனர். வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு போட்டியாக காங்கிரஸின் அஜய் ராய் களமிறக்கப்பட்டுள்ளார். கங்கனாவுக்கு எதிராக விக்ரமாதித்திய சிங்கை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. ரவிசங்கர் பிரசாத்துக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் முன்னாள் மக்களவைத் தலைவர் மீரா குமாரின் மகன் அன்சுல் அவிஜித் போட்டியிடுகிறார். பிகாரின் பாடலிபுத்ரா தொகுதியில் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பார்தி போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பாஜக ராம் கிரிபால் யாதவை நிறுத்தியுள்ளது. இமாச்சல பிரதேசத்தின் ஹிமீர்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் களம்காண்கிறார். அவர் அவருக்கு போட்டியாக சத்பல் சிங்கை காங்கிரஸ் இறக்கியுள்ளது. இதேபோல் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா பாரமுல்லா தொகுதியில் களம் காண்கிறார். இந்த நட்சத்திர வேட்பாளர்கள் இறுதி நாளில் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டனர். இவர்களில் சிலருக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியும் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரை நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில் நாளை இறுதிக்கப்ட வாக்குப்பதிவுக்கு் பின் வரும் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.