LIVE-UPDATES

Tamil Live Breaking News: விபத்தில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள். காஞ்சிபுரம் வணிகர் வீதியில் சாம்சங் ஆலை தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஊதிய உயர்வு, போனஸ், தொழிற்சங்கம் அங்கீகாரம் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 24 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயுதபூஜையை ஒட்டி சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு அக்.9இல் சிறப்பு ரயில் இயக்கம். எழும்பூரில் இருந்து போத்தனூருக்கு நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கம். அக்.9 இரவு 9 மணிக்கு சென்னை சென்ட்ரலில் புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். அக்.10 இரவு 7.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 90 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய ஹரியானா தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 22.70% வாக்குப்பதிவு. இன்று பதிவான வாக்குகள் அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதால் தாழ்வான பகுதியில் இருக்கும் மின் பெட்டிகளை உயர்த்தி வைக்க ஆய்வுக் கூட்டத்தில் அறிவுரை. மீட்புப் பணிகளுக்கு தன்னார்வாலர்களை பயன்படுத்துவதுடன், அவர்களை உள்ளடக்கிய வாட்ஸ் அப் குழு அமைக்கவும், அரசு அதிகாரிகள் மக்களுடன் இருக்கின்றனர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுரை. சென்னையில் நடிகர் சோனா வீட்டில் சுவர் ஏறி குதித்து கத்தியை காட்டி மிரட்டிய லோகேஷ் (21), சிவா (23), ஆகிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்ட இருவரை மதுரவாயல் காவல் நிலையத்தில் வைத்து போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை. அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். நாகை அருகே விபத்தில் சிக்கினார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க காரை ஓட்டுநர் திருப்பிய போது, கோயில் மதில் சுவரில் கார் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிறு காயங்களுடன் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உயிர் தப்பினார். போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக உள்ள வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார். ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டதால் ஆஜர். செபி தலைவர் மாதபி பூச் வரும் 24ஆம் தேதி நாடாளுமன்ற பொது கணக்கு குழு முன்பாக ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பங்குச்சந்தையில் அதானி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த முடிவு. தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கீழடியில் நடந்து வரும் 10ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண் தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. தா என்ற தமிழி எழுத்து, மீன் உருவ பானை ஓடுகள், சுடுமண் அணிகலன், சுடுமண் குழாய், செங்கல் கட்டுமானம், சிவப்பு நிற பானை என 50க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக முக்கிய இடங்களில் மின் தடை செய்யப்படும் என மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. கிண்டி : லேபர் காலனி, கிண்டி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், டி.எஸ்., மினி டி.எஸ்., பாலாஜி நகர், நாகிரெட்டி தோட்டம், ஈக்காட்டுதாங்கலின் ஒரு பகுதி, காந்தி நகர் மெயின் ரோட்டின் ஒரு பகுதி, சர்தார் காலனி, ஜே.என்.சாலை, கலைமகள் நகர், அச்சுதன் நகர் 1வது மெயின் ரோடு, பர்ட்டுலாயம்பேட்டை தெற்கு கட்டம், முத்துராமன் தெருவின் ஒரு பகுதி, கணபதி காலனி, வடக்கு கட்டம் சிறிய பிரிவு, லாசர் தெரு, 3வது கட்டம் கிண்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள். அண்ணாநகர் மேற்கு: ஜே பிளாக், வைகை காலனி, 13வது மெயின் ரோடு, வள்ளலார் குடியிருப்பு, தங்கம் காலனி, 17வது மெயின் ரோடு, திருவள்ளுவர் குடியிருப்பு, திருமூலர் காலனி, 18வது மெயின் ரோடு, மலர் காலனி, கம்பர் காலனி, 19வது மெயின் ரோடு, தென்றல் சாலை, மா.15. , எச் பிளாக், 11வது பிரதான சாலை, ஏபி பிளாட், சி செக்டர், டபிள்யூ பிளாக், இமயம் காலனி, கைலாஷ் காலனி. தரமணி: எம்ஜிஆர் சாலையின் ஒரு பகுதி, சாந்தியப்பன் சாலை, கோதண்டராமன் தெரு, பெருங்குடி கல்லுக்குட்டை பகுதி, ஓஎம்ஆர் பகுதி, காமராஜர் நகர், குறிஞ்சி நகர், அண்ணா நெடுஞ்சாலை, நேரு நகர் கொட்டிவாக்கம் பகுதி, சீனிவாசா நகர், ஜெயேந்திரா காலனி, திருவள்ளுவர் தெரு, கற்பக விநாயகர் தெரு, கற்பக விநாயகர் தெரு. , க்ருச் சாலை, சிபிஐ காலனி. பொன்னேரி: தேவம்பட்டு, அகரம், பள்ளிபாளையம், செகனியம், ராக்கம்பாளையம், பூங்குளம் & கல்லூர் கிராமம். ரெட்ஹில்ஸ்: ஜேஜே நகர், ஆர்ஆர் குப்பம், தீர்த்தங்கரைப்பட்டு, சோத்துப்பாக்கம் சாலை. ஹரியானாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. 90 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே நாளில் நடைபெறுகிறது. None

About Us

Get our latest news in multiple languages with just one click. We are using highly optimized algorithms to bring you hoax-free news from various sources in India.